புதன், 28 டிசம்பர், 2011

Mobile பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய அருமையான இணைய தளம்




நம்முடைய Mobile பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங்களை மட்டும் தான் சொல்லுவோம்.அதை பற்றிய முழுவிபரமும் நாம் சொல்ல மாட்டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் உங்கள் Mobile பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தளத்தில்

01. ஒரு Mobile வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந்த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) Mobile எது என்று கேட்டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  Mobile களை பட்டியல் இட்டு காட்டும்.

02.  ஒரு Mobile உடன் இன்னும் ஒரு Mobile ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.

03.  ஒரு Mobile  ஐ  360 பாகையிலும் சுற்றி பர்வையிட முடியும்.

04.  நீங்கள் தேடும் Mobile தற்போது சந்தையில் இருக்கிறதா இல்லியா
என்றும் தெரிந்து கொள்ள முடியும்.

05.  நாம் தேடும் Mobile இன் சந்தை பெறுமதியையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் பல வசதிள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.

தள முகவரி http://www.gsmarena.com

உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்



Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.


Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).


Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.


Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.


Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. 

மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல.


Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).


Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .


Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.


Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.


Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.


Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.


Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.


Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.


Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க


Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.


Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.


Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).


Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.


Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.


Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.


Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.


Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.


Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.


Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.