திங்கள், 4 ஏப்ரல், 2011

இனி password உம் கொடுக்கலாம் இணையத்தில் சேமித்து வைக்கும் பைல்களுக்கு

இன்று நாம் இணையத்தில் பைல்களை சேமித்து வைப்பதற்கு மிகச்சிறந்த தளம் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம்.அதாவது ஏணைய தளங்களை காட்டிலும் நல்ல தளம் ஏண் தெரியுமா? இலவசமாக சேமித்து வைப்பதற்கு நிறைய தளம் இருக்கிறது, ஆனால் நம்முடைய பைலை upload செய்த பிறகு, திரும்ப download செய்ய வேண்டும் என்றால் அந்த பைலை இலவசம் என்றால் ஆமை வேகத்தில் தான் download செய்ய முடியும் என்றும், எங்களுக்கு டாலர் இவ்வளவு செலுத்தினால் இவ்வளவு மாதம் வரைக்கும் நீங்கள் குதிரை வேகத்தில் download செய்ய முடியும் என்றுதான் அவர்களுடைய சேவையை வழங்கி வருகிறார்கள் இப்படி டாலர் கட்டாமல் இந்த சேவையை வழங்கும் ஒரு தளம் உள்ளது அதைப்பற்றித்தான் இன்றைய பதிவு.

நாம் இப்படி இணையத்தில் சேமித்து வைக்கும் போது அந்த பைலை இரண்டு விதமாக பிரிக்க முடியும். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றால் public ஆகவும், நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அதாவது பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் private ஆகவும் சேமிக்க முடியும். என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் private  ஆக சேமித்த பைல், தேடுஇயந்திரங்களில்தான் வராது ஆனால் நீங்கள் Custom URL ஏற்படுத்தி இருந்தால், அந்த URL மூலம்  private   ஆக சேமித்த பைலை யார் வேண்டுமானாலும் download செய்யலாம் தெரியுமா?

என்னடா...புரியவில்லையா??? பயப்படாதீங்க... இந்த பிரச்சினை யாருக்கு வரும் என்றால்  Custom URL  ஐ தெரிவு செய்யும் போது அது எந்த Folder என்று கேட்கும் அதற்கு நீங்கள் My Files என்பதை தெரிவு செய்து இருப்பீர்களாயின் அந்த Custom URL  மூலம் நீங்கள் சேமித்த அனைத்து பைலையும் download செய்ய முடியும்.( Custom URL மற்றும் அதற்குறிய Folder ஐ திரும்பவும் மாற்றிக்கொள்ள முடியும்.
 
இந்த தளத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள்

 01.குறித்த முக்கியமான பைல் இற்கு password கொடுக்கலாம்.இதனால் நீங்கள் அந்த பைல் ஐ public ஆக சேமித்தால் கூட உங்களுடைய password வேண்டும் அந்த பைல்  ஐ download செய்வதற்கு.

02 private Folder -  Custom URL இல் கூட தெரியுதில்லை  அந்த Folder.

03. Drag and Drop முறையிலும் Upload செய்ய முடியும்.

04. எத்தனை முறை Download செய்யப்பட்டது என்று பார்க்கலாம்.

05.குறித்த பைலை இமெயில் மூலம் அனுப்ப முடியும்.

06.இதில் download செய்யும் போது வேகம் குறைக்கப்படாது.

இங்கு சென்று நீங்கள் இலவசக்கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும்.இதில் இலவசமாக குறைந்த அளவுதான் சேமித்து வைக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். 
 
 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011



என்னிடம் எப்பொழுதாவது சரக்கு தீர்ந்து போனால் என் அண்ணனிடம் கேட்பது வழக்கம்... சொல்லப் போனால் இங்கு இருக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் என் அண்ணன் என்னிடம் கூறியது. அவ்வாறு நான் எதாவது செய்தி இருக்கிறதா என கேட்டபோது ஒரு  தளத்தின்  முகவரியினை கொடுத்தார்.


அத்தளத்தில் வரைகலைக்கு  தொடர்பான அனைத்து மென்பொருள்களும், இணைப்புகளும்,ஒளித்தோற்ற பயிற்சி, மின் புத்தகம் என அனைத்தும் இருந்தது. அது உங்களுக்கு பயன்படும் என எண்ணினேன். இதோ அந்த முகவரி


இத்தளத்தில் நீங்கள் HTML,PHP,CSC,Photoshop என அனைத்தும் மின் புத்தகம் மூலமோ அல்லது நிகழ்பட பயிற்சியின் மூலம் கற்றுத்தேறலாம். மேலும் இங்கு Wordpress பதிவர்களுக்கு தேவையான பலகைகளும், புதிதாக இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு தேவையான பலகைகளும், குறும்படம் (icon ), காவி வரைகலை (vector graphics ) என அனைத்தும் கிடைக்கிறது.

இத்தளத்தில் குறிப்பாக Lynda ஒளித்தோற்ற பயிற்சி நிறைய இருக்கிறது. இந்த Lynda ஒளித்தோற்ற பயிற்சி ஏறக்குறைய நாம் பயன்படுத்த கடினம் என்று நினைக்கும் அனைத்து மென்பொருளையும் சின்ன பையனுக்கு :) சொல்லித்தருவது போல சொல்லித்தரும்!

மேலும் இத்தளத்தை போன்று வேறு சில தளங்கள் உள்ளன. அதனை காண...

இப்பொழுது நீங்கள் சென்ற தளமானது, அதாவது http://www.similarsites.com/ தளமானது நீங்கள் தேடிய இணையதளம் போன்று வேறு ஏதாவது தளம் இருக்கிறதா என தேடிக் கூறும்.