வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.


மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.

எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது.

திங்கள், 12 செப்டம்பர், 2011

வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது.......

நம் பெரியோர் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கை பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.

பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.