செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

விளம்பர 'S.M.S' களை மொபைலில் தவிர்ப்பது எப்படி?


ண்பர் சுரேஷ்பாபு அவர்கள்நான் எனது மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் களை நிறுத்தும் DO NOT DISTRUB சேவையில் ரெஜிஸ்டர் செய்துள்ளேன், ஆனாலும் எனக்கு தொடர்ந்து தேவையில்லாத 'SMS 'கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிறுத்துவது?’ என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். இதற்கான பதில் மற்றவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் என்பதால் பதிலும் மிக நீளமாக இருக்கும் என்பதால் என்னுடைய பதிலை ஒரு தனி பதிவாக இங்கே தருகிறேன்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த நாட்டை ஆட்சி செய்வது அரசியல்வாதிகளாக இருந்தாலும் வழி நடத்தி செல்வது என்னவோ பெரியபெரிய தொழிலதிபர்கள் தான்.அவர்கள் கட்டும் அதிகப்படியான வரிப்பணத்தில் தான் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால் தான் என்னவோ ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு அமைச்சரைக் கூட ஜெயிலுக்குள் போட்டவர்கள் அந்த ஊழலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் அனில்அம்பானியை ஒன்றும் செய்யவில்லை. கை வைத்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட அரசாங்கத்தில் உள்ள ட்ராய் அமைப்பும்,அது போடும் சட்டதிட்டங்களையும் யார் மதித்து பின்பற்றுவார்கள் சொல்லுங்கள்.ட்ராய் என்ற தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை ஒரு வீணாய்ப்போன அமைப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்என்று மொபைல் சேவை தரும் நிறுவனங்களுக்கு பல சட்ட திட்டங்கள் போட்டாலும் எந்த மொபைல் சேவை நிறுவனங்களும் அந்த சட்ட திட்டங்களை துளியளவும் மதிப்பதில்லை.

இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாமும் சாதாரண மக்களும் மட்டும்தான் போலும்,அரசியல்வாதி களுக்கும்,பெரிய பெரிய பணக்காரர்களுக்கும் இல்லைபோலும்.இருந்தாலும் முறைப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இங்கே கூறுகிறேன்.இதை பின்பற்றுங்கள் போதும்.இதிலேயும் பிரச்சனை தீரவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை (consumar court) நாடுங்கள்அதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

உங்கள் மொபைலில் இருந்து START DND அல்லது பிரிவு வாரியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் START 0 என்று எஸ்.எம்.எஸ்  டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகளும்,எஸ்.எம்.எஸ் களும் 45 நாட்களுக்குள்  நிறுத்தப்படும். நீங்கள் எந்த நிறுவனத்தின் மொபைல் சேவையையும் பயன்படுத்தினாலும் மொபைலுக்கு வரும் தேவையில்லாத ிளம்பர அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ் களையும் தவிர்க்க ட்ராய் அமைப்பு கொடுத்திருக்கும் பொதுவான நம்பர் இதுதான்.
நீங்கள் வோடபோன் மொபைல் சேவையை பயன்படுத்துபவர் என்றால் இந்த லிங்கில் சென்று ங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்துவிட்டு FULL DND என்பதை டிக் செய்து அனுப்பினால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்.எம்.எஸ் நிறுத்தப்படும்
இதேபோல மற்ற மொபைல் சேவை தரும் நிறுவனங்களின் DND பகுதிக்கு செல்ல கீழே பாருங்கள்.

# Airtel postpaid and prepaid      -  Click this Link
# Airtel landline               Click this Link
# BSNL Mobile               Click this Link

# Aircel                     Click this Link
# Loop mobile          -       Click this link

# Stel                 -       Click this link

# TATA Indicom         -        Click this Link

# TATA Docomo        -       Click this link
# Idea Cellular              Click this Link

# MTS                -       Click this link
# MTNL Delhi                Click this Link
# MTNL Mumbai        -       Click this Link
# Relaince GSM             Click this Link  
# Reliance CDMA       -       Click this link 
# Videoncon mobile     -       Clik this link

# Uninor              -       Click this link

# Virgin mobile         -      Click this link

மேற்கண்ட மொபைல் சேவை நிறுவனங்கள் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றால் கீழே உள்ள ட்ராய் அமைப்பின் இணையதளத்துக்கு சென்று நீங்கள் புகார் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக