நான் கொடுக்கும் டிப்ஸ்களை பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் சொல்லுங்கள்.
1.Use Of '+' sign:
இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.
உதாரணம்: Reviews of +DELL and ACER
இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.
2. Use Of '-' sign:
இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.
3. Use Of '~' sign:
இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும்.
4. Search a particular site:
ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்.
Search: site:www.xyz.com abc
உதாரணம்: site:baleprabu.blogspot.com/ computer tricks
5. Define a word:
ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.
Search: define:abc
உதாரணம் : Search: define:Computer
6. Search for exact phrase:
ஒரு சொற்றொடரை தேட இது உதவும்.
Search: "contact us"
7. Using the wild card '*':
இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும்.
Search: friend*
இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும்.
8. Using the '?' sign:
ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.
Search: :fri??d
இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும்.
9. Use of boolean operators :
AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்.
உதாரணம் :
Search: swim OR float
இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி?
இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும்.
உதாரணம்:
11. File Format களில் தேடுவது எப்படி?
இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்.நீங்கள் தேடும் பொருளின் பின் அந்த Format extension கொடுக்க வேண்டும். அதாவது pdf file என்றால், .pdf என்று கொடுக்கலாம்.
உதாரணம்:
Eg: Solar Power.pdf
12. ஒரு இடத்தில் நேரம், வெப்பத்தை அறிவது எப்படி?
Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்க்கவும்.
உதாரணம்:
Time Chennai , Chennai Weather
13. கல்வி குறித்து தேடுவது எப்படி?
கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது.அப்போது தேடும் பொருளுக்கு பின் .edu என்று சேர்க்கவும்.
14.கூகிள் கணக்கு பண்ணுமா?
நீங்கள் நினைப்பது போல கூகிள் பொண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள்.
அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.
(24*9)(39+68)(45-21)
15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?
இது மிக முக்கியமானது. உதாரணமாக எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால் அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,
Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002
அதாவது,
Type: “[business name or type], [city or zip/postal code]”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக