செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

விளம்பர 'S.M.S' களை மொபைலில் தவிர்ப்பது எப்படி?


நண்பர் சுரேஷ்பாபு அவர்கள் ‘நான் எனது மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் களை நிறுத்தும் DO NOT DISTRUB சேவையில் ரெஜிஸ்டர் செய்துள்ளேன், ஆனாலும் எனக்கு தொடர்ந்து தேவையில்லாத 'SMS 'கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிறுத்துவது?’ என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். இதற்கான பதில் மற்றவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் என்பதால் பதிலும் மிக நீளமாக இருக்கும் என்பதால் என்னுடைய பதிலை ஒரு தனி பதிவாக இங்கே தருகிறேன்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த நாட்டை ஆட்சி செய்வது அரசியல்வாதிகளாக இருந்தாலும் வழி நடத்தி செல்வது என்னவோ பெரியபெரிய தொழிலதிபர்கள் தான்.அவர்கள் கட்டும் அதிகப்படியான வரிப்பணத்தில் தான் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால் தான் என்னவோ ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு அமைச்சரைக் கூட ஜெயிலுக்குள் போட்டவர்கள் அந்த ஊழலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் அனில்அம்பானியை ஒன்றும் செய்யவில்லை. கை வைத்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட அரசாங்கத்தில் உள்ள ட்ராய் அமைப்பும்,அது போடும் சட்டதிட்டங்களையும் யார் மதித்து பின்பற்றுவார்கள் சொல்லுங்கள்.ட்ராய் என்ற தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை ஒரு வீணாய்ப்போன அமைப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அமைப்பு ‘வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்’ என்று மொபைல் சேவை தரும் நிறுவனங்களுக்கு பல சட்ட திட்டங்கள் போட்டாலும் எந்த மொபைல் சேவை நிறுவனங்களும் அந்த சட்ட திட்டங்களை துளியளவும் மதிப்பதில்லை.

இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாமும் சாதாரண மக்களும் மட்டும்தான் போலும்,அரசியல்வாதி களுக்கும்,பெரிய பெரிய பணக்காரர்களுக்கும் இல்லைபோலும்.இருந்தாலும் முறைப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இங்கே கூறுகிறேன்.இதை பின்பற்றுங்கள் போதும்.இதிலேயும் பிரச்சனை தீரவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை (consumar court) நாடுங்கள். அதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

உங்கள் மொபைலில் இருந்து START DND அல்லது பிரிவு வாரியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் START 0 என்று எஸ்.எம்.எஸ்  டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகளும்,எஸ்.எம்.எஸ் களும் 45 நாட்களுக்குள்  நிறுத்தப்படும். நீங்கள் எந்த நிறுவனத்தின் மொபைல் சேவையையும் பயன்படுத்தினாலும் மொபைலுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ் களையும் தவிர்க்க ட்ராய் அமைப்பு கொடுத்திருக்கும் பொதுவான நம்பர் இதுதான்.
நீங்கள் வோடபோன் மொபைல் சேவையை பயன்படுத்துபவர் என்றால் இந்த லிங்கில் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்துவிட்டு FULL DND என்பதை டிக் செய்து அனுப்பினால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்.எம்.எஸ் நிறுத்தப்படும்
இதேபோல மற்ற மொபைல் சேவை தரும் நிறுவனங்களின் DND பகுதிக்கு செல்ல கீழே பாருங்கள்.

# Airtel postpaid and prepaid      -  Click this Link
# Airtel landline         -       Click this Link
# BSNL Mobile         -       Click this Link

# Aircel               -       Click this Link
# Loop mobile          -       Click this link

# Stel                 -       Click this link

# TATA Indicom         -        Click this Link

# TATA Docomo        -       Click this link
# Idea Cellular         -      Click this Link

# MTS                -       Click this link
# MTNL Delhi          -       Click this Link
# MTNL Mumbai        -       Click this Link
# Relaince GSM        -      Click this Link  
# Reliance CDMA       -       Click this link 
# Videoncon mobile     -       Clik this link

# Uninor              -       Click this link

# Virgin mobile         -      Click this link

மேற்கண்ட மொபைல் சேவை நிறுவனங்கள் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றால் கீழே உள்ள ட்ராய் அமைப்பின் இணையதளத்துக்கு சென்று நீங்கள் புகார் செய்யுங்கள்.

MOBILE க்கான FREE SMS APPLICATIONகள்!



நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.

'மௌனத்தை விட இந்த உலகில் மிகச் சிறந்த மொழி வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள்.இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.

எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழி தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒருநாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள். 

அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.


அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.


பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.

இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80  எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.

அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.


இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.

மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இமெயில்களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.

http://www.jaxtr.com              

120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல்களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.


way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.


300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.


மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்துகளை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.

http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையை பயன்படுத்தலாம். மெயில்,போட்டோஸ்,மியூசிக்,கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.


மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.

அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.


இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,விண்டோஸ் ஒ.எஸ் என எல்லாவகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம். இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.


அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.