ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்

பெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்



நவுக்ரி டாட் காம் இணையதளம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்தியாவின் முதன்மையான வேலை வாய்ப்பு இணையதளம் அது.இணையத்தில் அந்த தளத்தை பார்த்திராதவர்கள் கூட அதன் அசத்தலான தொலைகாட்சி விளம்பர‌த்தை பார்த்து ரசித்திருக்கலாம்.

நவுக்ரி என்ற பெயரை சேர்த்து கொண்டு வேறு சில வேலை வாய்ப்பு இணையதளங்களூம் இருக்கின்றன.நவுக்ரி இந்தியா,நவுக்ரி ஹப்,நவுக்ரி கல்ப்,நவுக்ரி குரு என நவுக்ரியை உடன் சேர்த்து கொண்டுள்ள தளங்களுக்கு பெரிய பட்டியலே போடலாம்.

வேலை வாய்ப்பு தளங்களின் அடையாளமாக நவுக்ரி.காம் விளங்குவ‌கதால் இப்படி எல்லோரும் நவுக்ரியை ஒட்ட வைத்து கொண்டு விடுகின்றனர்.அதோடு நவுக்ரி என்னும் சொல்லுக்கு இந்தி மொழியில் வேலை என்ற பொருள் இருப்பதும் இத‌ற்கான‌ கார‌ண‌மாக‌ அமைந்துள்ளது.

ஆனால் பெண்க‌ளுக்கான‌ ந‌வுக்ரி த‌ள‌த்தை இந்த ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ முடியாது.ஒரு வெற்றிக‌ர‌மான‌ த‌ள‌த்தை போலி செய்து துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ த‌ள‌மாக‌ இல்லாம‌ல் த‌னித்துவ‌ம் மிக்க‌ த‌ள‌மாக‌ ந‌வுக்ரி பார் வும‌ன் விள‌ங்குகிற‌து.

பெண்க‌ளுக்கான‌ பிர‌த்யேக‌ வேலை வாய்ப்பு இணைய‌த‌ள‌ம் என்ப‌து தான் இத‌ன் த‌னிச்சிற‌ப்பு.அதாவ‌து வேலை வாய்ப்பு த‌ள‌ங்க‌ளில் ஒரு ம‌க‌ளிர் ம‌ட்டும் த‌ள‌ம்.

ஆணும் பெண்ணும் ச‌ரி ச‌மாமாக‌ போட்டியிடும் கால‌த்தில் பெண்க‌ளுக்கான‌ த‌னி வேலை வாய்ப்பு த‌ள‌ம் ச‌ரி தானா?தேவை தானா?என்று கேட்க‌லாம்.ச‌ரிய‌ த‌வ‌றா என்ப‌து அவ‌ர‌வ‌ர் நிலைப்பாடு ம‌ற்றும் புரித‌ல் சார்ந்த‌து.ஆனால் தேவையா இல்லையா  பொருத்த‌வ‌ரை தேவை என்றே தோன்றுகிற‌து.

பெண்க‌ள் விஷேச‌மான‌ திற‌மைக‌ளை பெற்றிருப்ப‌தாலும்,அவ‌ர்க‌ளின் ப‌ணியிட‌ தேவைக‌ள் ஆண்க‌ளின் தேவையில் இருந்து மாறுப‌ட்ட‌தாக‌ இருப்ப‌தாலும் பெண்க‌ளுக்கான‌ த‌னி வேலை வாய்ப்பு த‌ள‌ம் அவ‌சிய‌ம் என்று உண‌ர்ந்து இத‌னை துவ‌க்கியிருப்ப‌தாக‌ இந்த‌ த‌ள‌த்தில் குறீப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

ச‌ராச‌ரியான‌ வேலை வாய்ப்பு த‌ள‌த்தை போல‌ இந்த‌ த‌ள‌த்திலும் ப‌குதி வாரியாக‌ வேலைக‌ளை தேடுவ‌த‌ற்கான‌ வ‌ச‌தியும் அத‌ற்கு முன்பாக‌ ப‌யோ டேட்டாவை ச‌ம‌ர்பிக்கும் வ‌ச‌தியும் இட‌ம்பெற்றுள்ள‌ன‌.அதே போல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளின் வேலை வாய்ப்பு விவ‌ர‌ங்க‌ளை ச‌ம‌ர்பிக்க‌லாம்.

என்ன‌ துறையில் எந்த‌ ந‌க‌ரில் வேலை தேவை என‌ குறிப்பிட்டு தேடும் வ‌ச‌தி இருக்கிற‌து.வீட்டில் இருந்தே பார்க்க கூடிய‌ வேலை,பகுதி நேர வேலை போன்ற தேர்வுகளையும் செய்து கொள்ளலாம்.இந்த‌ தேட‌லை மேலும் சுல‌ப‌மாக்க‌ ச‌மீப‌த்திய‌ வேலை ம‌ற்றும் சூடான‌ வேலை(பிர‌ப‌லாமாக‌ இருப்ப‌வை)என‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளிலும் வேலை வாய்ப்புக‌ள் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

வேலை வாய்ப்பில் முன்ன‌ணி வ‌கிக்கும் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் த‌னி ப‌குதி உள்ள‌து.

இந்த‌ த‌ள‌த்தின் ம‌ற்றொரு சிற‌ப்ப‌ம்ச‌ம் பெண்க‌ள் த‌ங்களுக்குள் தொட‌ர்பு கொண்டு ஆலோச‌னைக‌ளை பெற‌லாம் என்ப‌தே.வேலை வாய்ப்பு ம‌ற்றும் ப‌ணி சூழ‌ல் தொட‌ர்பான் ச‌ந்தேக‌ங்க‌ளைம் கேள்விக‌ளாக‌ கேட்டு விள‌க்க‌ம் பெறுவ‌த‌ற்கான‌ விவாத‌ ப‌குதி இத‌ற்கு உத‌வுகிற‌து.

இந்த‌ ப‌குதியில் உள்ள‌ கேள்வி ப‌தில்க‌ள் ம‌ற்றும் ஆலோச‌னை குறிப்புக‌ள் முத‌ன் முத‌லாக‌ வெளியே வ‌ரும் பெண்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் கைகொடுக்கும்.

வேலை வாய்ப்பு தொட‌ர்பான‌ எந்த‌ ச‌ந்தேக‌த்திற்கும் பெண்க‌ள் இத‌ன் மூல‌ம் விள‌க்க‌ம் பெற‌லாம்.

ஏலை வாய்ப்பு என்பதே பெண்களுக்கான‌ மேம்பாட்டிற்கான் வ‌ழி என்ற‌ ந‌ம்பிக்கையில் அத‌ற்கு உத‌வும் வ‌கையில் இந்த‌ த‌ள‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ இத‌ன் பின்னே உள்ள‌ பிரியா ம‌ற்றும் புல்ல‌க் மொக‌ந்தி கூறுகின்ற‌ன‌ர்.எல்லா பெண்க‌ளும் ஏதாவ‌து ஒரு வேலைக்கு சென்று த‌ங்க‌ல் குடும‌ப‌த்தின் நிதி ஆதார‌த்தை பெருக்க‌ உத‌வ‌ வேண்டும் என்ப‌தே த‌ங்க‌ளின் நோக்க‌ம் என்று அவ‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.

இந்த‌ இருவ‌ரும் ஏற்க‌ன‌வே மேம்சாப் என்னும் த‌ள‌த்தை ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.உல‌க‌ம் ம் உழுவ‌தும் உள்ள‌ மேம்சாப்க‌ளை (திரும‌திக‌ள்)ஒன்றினைப்பத‌ற‌காக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ த‌ள‌ம் இது.

ந‌வுக்ரியோடு இணைந்த‌ த‌ள‌ங்க‌ளில் இன்னொரு குறிப்ப‌ட‌த்த‌க்க‌ த‌ள‌மும் இருக்கிற‌து.ச‌ர்கார் ந‌வுக்ரி என்னும் அந்த‌ த‌ள‌ம் அர‌சு வேலைக‌ளை ப‌ட்டிய‌லிடுகிற‌து.

ந‌வுக்ரி பெய‌ரில் ஏக‌ப்ப‌ட்ட‌ த‌ள‌ங்க‌ல் இருக்க‌லாம்.ஆனால் வேலை என்னூம் சொல்லில் பிர‌த்யேக‌ த‌ள‌ங்க‌ள் இல்லை.யாராவ‌து வேலை.காம் என‌ த‌மிழில் த‌மிழ‌னுக்கான‌ வேலை வாய்ப்பு த‌ள‌த்தை ஆர‌ம்பிக்க‌லாமே.

——–(பின்குறிப்பு)

நவுக்ரி பெயர் கொண்ட தளங்களில் உருப்படியாக இருப்பது நவுக்ரிஇந்தியா இணையதளம்.வேலையில்லாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி என்னும் முழக்கத்தோடு செயல்படும் இந்த தளம் வடிவமைபிலும் சரி உள்ளடக்கத்திலும் சரி சிறப்பானதாக‌ இருக்கிறது.மிக எளிமையான வடிவமைப்பு பார்ப்பதற்கு மட்டும் அல்ல பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக உள்ளது.

——-
 http://www.naukriforwomen.com/

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக