தமிழ் அகராதிகள் [Tamil Dictionary]
இன்று தமிழ்ச் சொற்களுக்கும் மற்றும் பிற மொழி சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்கள் அறிய இணைய ஊடகங்களால சாத்தியப்படும் வசதிகளைப் பார்ப்போம்.
தமிழுக்கு இணையவுலகில் அகரதிகளுக்குப் பஞ்சமில்லை எனலாம்.
பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.
திறந்த உள்ளடக்க அகரமுதலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி விளக்கமும் அதனுடைய இணைப்புச் சுட்டியும் தருவதால் மிகுந்த தெளிவு பெறலாம்.
தெற்காசிய மின்னணு நூலகம் என்கிற அமைப்பின் கீழ் மொத்தம் ஐந்து வகையான அகராதிகளைத் தருகிறது.
இந்த தளத்தின் மூலம் சரியான தமிழ் பதத்தை அறியலாம். ஆங்கிலச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் தமிழ்ப் பதத்தைத் தேடலாம். இவை தெளிவாக ஒரு சொல்லைப் பற்றிய அறியவும் அது சார்ந்த மற்றச் சொற்களை அறியவும் செய்வதால் ஆராய்ச்சி மாணக்களுக்கும் மிகுந்த பயன் தரும்.
அகராதி உலகின் தனி சாம்ராஜ்யம் நடத்தும் லிப்கோ பதிப்பகமும் இணைய வழியில் தமிழ் அகராதி சேவையைத் தருகிறது. மிகவும் தெளிந்த விளக்கமாக திரட்டித் தருகிறது, பழமையானச் சொற்களுக்கும் விளக்கம் இங்கே கிடைக்கும்.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைப்பாக உள்ள இந்த தளம் நான்கு வகை தமிழ் அகராதி வசதிகளைத் தருகிறது. இதன் எழுத்துருக்கள் யுனிக் கோட்டில் இல்லாததால் பெரும்பான்மையான கணினியில் எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தும்மாறு உள்ளது. தமிழ் தட்டச்சு செய்யும் வசதியுள்ளதால் இதைப் பயன்படுத்த மற்ற மொழியாக்கக் கருவிகள் தேவையில்லை.
http://www.tamildict.com/ [அங்கிலம்-தமிழ்]
http://www.tamildict.com/tamilsearch.php?language=tamil [தமிழ்-ஆங்கிலம்]
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலிருந்து தமிழ் சொற்களுக்கானப் பொருளைத் தேடலாம் மற்றும் தமிழுக்கு இணையான அம்மொழிச் சொற்களையும் பெறலாம். குறிப்பிடும் படியாக இந்த தளத்தில் பயனர்களும் அகராதியில் இல்லாத சொற்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கலாம், அதனால் இத்தளம் நாளும் வளர்வது கண்கூடு.
http://www.searchko.in/tamil-english-dictionary.jsp
தேடிக்கோ என்கிற பொருள் பதத்தில் அமைந்துள்ள இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் சொற்களுக்கு விளக்கம் தருகிறது. நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்து வேண்டிய சொற்களை சர்வ சாதாரணமாகத் தேடிக்கொள்ளலாம். கூடுதலாக சில செய்தி வசதியும், இலக்கியத் தேடல் வசதியும் தருகிறது. குறிப்பாக எழுத்து பிழைகளை திருத்தும் சோதிப்பு வசதியையும் தருகிறது.
இதுவொரு அற்புதமான தளம். உலகிலுள்ள பிரதான மொழிகள் பலவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களை தருகிறது. ஏறக்குறைய 80 மொழிகள் மட்டும் கொண்டுள்ள இந்த தளத்தில் தமிழும் உள்ளது. தமிழ்ச் சொற்களுக்கு இணையான வேற்று மொழிச் சொற்களும் நமக்குத் தருகிறது. புதியதாக தமிழ் கற்பவர்கள் இந்த அகராதியைக் கையோடு எடுத்துச் செல்லவேண்டும்.
எல்லா அகராதிகளையும் சாப்பிடும் வகையில் நடப்பு செய்திகளுடன் கூகுளும் அகராதி வசதியைத் தருகிறது. மேலும் ஒலிக் கீற்றுக்களுடன் உதாரண வாக்கியத்துடனும் பொருளைத் தருகிறது. தமிழ் மூலமாக மேலும் சில மொழிகளுக்கு பொருள் கூறுகிறது.
ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு வசதிகளையும் தருவதால் சிறப்பாக உள்ள தளம். அகராதியைப் பொருத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது.
உச்சரிப்புச் சுத்தத்தோடு உங்களுக்கு ஒரு விளக்கம் வேண்டுமானால் இந்த அகராதி பயன்தரும். ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் மற்றும் சிங்களத்தில் விளக்கம் தருகிறது.
ஒரு எளிமையான ஆங்கில-தமிழ் அகராதி. ஏறத்தாழ 50,000 உள்ளீடுகள் கொண்ட இது தமிழ் வழியில் ஆங்கில அறிவு சுத்தம் பெற உதவும்.
http://agarathi.com/index.php
தமிழ்ச் சொற்களுக்கு விரிவான ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கம் தரும் எளிய அகராதி.
http://www.agaraathi.com/
புதுமையான வகையில் நாமே சொற்களை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விரைவாக வளர்ந்துவரும் இந்த அகராதிக்கு நாமும் கை கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.
தமிழ்ச் சொற்களுக்கு விரிவான ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கம் தரும் எளிய அகராதி.
http://www.agaraathi.com/
புதுமையான வகையில் நாமே சொற்களை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விரைவாக வளர்ந்துவரும் இந்த அகராதிக்கு நாமும் கை கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.
எனக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியாது ஆனால் பேசுவேன் என்பவர்களுக்கான ஒரு தளம் இதில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ப் பதத்தை ஆங்கில எழுத்துக்காளால் தருகிறது. தரவிறக்கும் வசதியையும் தருகிறது. புதியவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம்.
முக்கியமான மற்றும் பிரதான ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்த தமிழ்ச் சொற்களைக் கொண்ட விளக்க பட்டியலாகக் கொண்டுள்ளது. தரவிறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலச் சொற்களுக்கு எளிமையாக பதிலளிக்கும் ஒரு அகராதி, மற்றும் சில இந்தியா மொழிகளிலும் இவ்வசதியைத் தருகிறது.
இதர அகராதி சேவை
http://webapps.uni-koeln.de/tamil/
http://tamil.changathi.com/ Dictionary.aspx
http://www.lexilogos.com/english/tamil_dictionary.htm
http://tamil.changathi.com/ Dictionary.aspx
http://www.lexilogos.com/english/tamil_dictionary.htm
http://dictionary.sarma.co.in/Default.aspx [சில தினங்களாக திறப்பதில்லை]
தரவிறக்கும் வகையான மென்பொருள் அகராதிகள் [இலவச]
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கும் விளக்கம் தரும் இது பழனியப்பா சகோதரர்களால தொகுக்கப்பட்ட அகராதி - பால்ஸ் அகராதி. இந்த தொகுப்பு அதிகமானோரின் கணினியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளக்கங்களும் தரவிறக்க குறிப்பும் இந்த தளத்திலேயே உள்ளது.
இது தரவிறக்கிப் பயன்படும் படியான மென்பொருளைத் தருகிறது. ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இருவகையிலும் உள்ளது.
[மேலும் தளங்கள் விடுபட்டாலும், புதிய தளங்கள் உருவானாலும் கண்டிப்பாக இங்கேத் தெரிவியுங்கள்]
பதிவை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்
பதிலளிநீக்குதமிழ் அகரமுதலிகள்