உங்கள் புத்தாக்க சிந்தனையை மெருகேற்ற ஒரு அசத்தலான தளத்தை அறிமுகம் செய்கிறேன். Aviary என்பது தளத்தின் பெயர். இசை, புகைப்படம், வண்ணம், வெக்டர், ஒலி போன்ற எட்டுவிதமான அம்சங்களை ஆன்லைனில் எடிட்டிங் செய்யலாம். உங்கள் உலவியின் உள்ளேயே இவை அனைத்தையும் இயக்க முடிவதால், எல்லா இயங்குதளங்களிலும் அப்படியே பயன்படுத்தலாம்.
அசத்தலான எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில் உங்கள் இணைய உலவியில் Aviary தளத்தை திறந்து அப்படியே பயன்படுத்தலாம். எந்தவித மென்பொருளையும் தரவிறக்கி, நிறுவவேண்டிய அவசியமும் இல்லை. அடோபி ப்ளெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இவை. அனைத்தும் அசத்தலான பல்லூடக நுட்பங்கள். நீங்கள் இசை விரும்பியாகவோ, புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதுமைப் புயலாகவோ இருப்பின் உங்களுக்கான அசத்தல் தளம் இது என்பது மிகையாகாது.
இணையதள முகவரி : http://goo.gl/YhK13
Virtual DJ
காணொளி வீடியோக்களையும், எம்பி 3 இசையையும் இணைத்து கலக்கல் கலவையாக புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) ஒரு மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.
கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் :
வெர்ச்சுவல் டி ஜே இசை விரும்பிகளான டிஸ்க் ஜாக்கிகள் மட்டுமல்லாது பொழுது போக்காக வீட்டில் பயன்படுத்துவோர்க்கும் உகந்தது இது. வணிக ரீதியல்லாத வீட்டுப் பயன்பாடானது (Non Commercial) முற்றிலும் இலவசமானது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.
கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம். யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும். பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/aSj8o
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக