செவ்வாய், 15 மார்ச், 2011

ஒரு பயனுள்ள செய்தி:- இல்லாத டி.எல்.எல். பைல்ககளை பெற






பல வேளைகளில் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்காமல் நின்றுவிடும். அப்போது காரணம் என்ன என்று பார்த்தால் குறிப்பிட்ட டி.எல்.எல். பைல் இல்லை ( "Could not find ***.dll" ) அல்லது கெட்டுவிட்டது என்ற செய்தி வரும். சரி. அந்த டி.எல்.எல். பைலுக்கு எங்கே போவது. குறிப்பிட்ட அந்த சாப்ட்வேர் தொகுப்பின் ஒரிஜினல் சிடியை எடுத்து தேடினால் குறிப்பிட்ட ஃபைல் எளிதில் கிடைக்காது. இதற்கு இணையம் ஒரு வழி தருகிறது.

www.dllfiles.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் உள்ள தேடும் கட்டத்தில் search boxல் உங்களுக்குத் தேவையான டி.எல்.எல். பைலின் பெயரை டைப் செய்திடவும். அந்த பைல் கிடைக்குமா என்ற செய்தி வரும். பின் அதில் உள்ள டவுண் லோட் பிரிவிற்குச் சென்று அந்த குறிப்பிட்ட பைலை இறக்கிக் கொள்ளலாம். இது போன்ற டி.எல்.எல். பைல்கள் எல்லாம் அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளும் பயன்படுத்தும் வகையில் பொதுவானதாக உள்ளதால் இவை இந்த தளத்தில் கிடைக்கின்றன. இந்த தளம் இது போன்ற பைல்கள் கிடைத்திட மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக