வெள்ளி, 20 மே, 2011

Gmail லின் தொடர்புகள் (contacts) அதிகரிப்பு


கூகுள் நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவையான ஜிமெயிலில் தற்போது ஒரு பயனுள்ள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் 10,000 தொடர்புகளை மட்டுமே நம்முடைய பயனர் கணக்கில் சேமித்து கொள்ள முடியும். இதை தற்போது 25,000 மாக அதிகரித்துள்ளது. நாம் இதுவரை 10,000 தொடர்புகளை மட்டுமே பயன்படுத்தி இதனால் 10,000 மேற்பட்ட தொடர்புகளை நம்முடை கணக்கில் ஏற்ற வேண்டுமெனில் முடியாத ஒன்றாக இருந்தது. ஏற்ற வேண்டுமெனில் முன்புஇருக்கும் தொடர்புகளை அழித்துவிட்டு பின் ஏற்ற வேண்டும். மொத்ததில் 10,000 தொடர்புகள் மட்டுமே அதிகபட்சமாக இருந்து வந்தது. இதனை தற்போது 25,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஜிமெயில் வாடிக்கையாளர்கள் இனி தம்முடைய கணக்கில் 25,0000 மின்னஞ்சல் முகவரிகளை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். என்னஒன்று நாம் பெரிதாக இதை பயன்படுத்த மாட்டோம். இதில் பாதிக்குபாதி மட்டுமே பயன்படுத்துவோம் என்பது என்னுடைய கருத்து. முன்பு தொடர்புகளின் அளவு 32KB யாக இருந்தது, இதுவும் தற்போது 128KB மாற்றப்பட்டுள்ளது இதனால் தொடர்புகளில் கூடுதலான தகவல்களை பதிவேற்றிக்கொள்ள முடியும்.
 
இதை பற்றி மேலும் அறிய சுட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக