யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைப்பவர் மார்க் ஸ்மித். அதற்காகவே “சீட் 61′ என்னும் இணைய தளத்தையும் நடத்தி வருகிறார்.
ரெயில் பயணங்கள் இதைத்தான் ஸ்மித் தான் பெற்ற இன்பமாக நினைத்து கொண்டிருக்கிறார். இன்ன மும் பெற்று வருகிறார். தன்னைப் போலவே மற்றவர்களும் பெற வேண் டும் என நினைக்கிறார். அதற்கு தன்னால் இயன்ற குறிப்பு களையும், வழி காட்டுதலையும் வழங்கவே “சீட் 61" தளத்தை அமைத்திருக்கிறார்.
இந்த தளம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று சொன்னா லும் அவரது நோக்கத்தின் பின்னே இருப்பது விளையாட்டு அல்ல தீவிரமான ஈடுபாடே!
ரெயில்களின் மீதும் அதில் பயணம் செய்வதிலும் உள்ள ஆர்வத்தினால் பிறந்த ஈடுபாடு.
பகிம் ஷயர் பகுதியில் பிறந்த ஸ்மித் தன்னை “ரெயில்வேகாரன்’ என்று பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார்.
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தேன் என்பதை பலரும் பெருமையாக சொல்லிக் கொள்ளும் நிலையில் ஸ்மித் ரெயில் வேயில் சேருவதற்காக ஆக்ஸ் போர்டை விட்டு ஓடி வந்தேன் என்று சந்தோஷப்படுபவர்.
அன்றிலிருந்து ரெயில்வேயில் பல பதவிகளை வகித்துள்ளதோடு ஊர் ஊராக சுற்றி வந்திருக்கிறார். இந்த பயணங்களை அவர் வேலையாக நினைத்ததில்லை. கொஞ்சம் நிரம்பிய சந்தோஷத்தோடு அவர் அவற்றை அனுமதித்திருக்கிறார்.
இந்த அனுபவத்தின் விளைவாக, ரெயில்களில் எப்படி பயணம் செய்ய லாம், எந்த நகரங்களுக்கு செல்ல எங்கே முன்பதிவு செய்து டிக்கெட் வாங்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி.
ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பலர் இந்த தகவல்கள் தெரியாமல் திண்டாடிப் போவதுண்டு. பயண ஏற்பாட்டு தளங்கள் இருந்தாலும், சரியான விவரங்கள் கிடைப்பது அத்தனை சுலபம் அல்ல.
அதுதான், ஸ்மித் தனக்கு தெரிந்த ரெயில் பயண ரகசியங்களை பகிர்ந்து கொள்ள இன்டெர்நெட்டுக்கு வந்தி ருக்கிறார். அவருடைய சீட்61 தளத் தில், உலகில் உள்ள முக்கிய இடங்க ளுக்கெல்லாம் ரெயிலில் பயணம் செய்வதற்கான வழி முறைகளை தேடிப்பெறலாம். ரெயில் பயண அட்ட வணையை திட்டமிட உதவுவதோடு, ஒவ்வொரு நாட்டிலும் பார்ப்பதற்குரிய இடங்களையும் பட்டியலிட்டு விடுகி றார்.
இந்த பட்டியலில் இந்தியாவைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகள் இருக்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய ரெயில்வே நெட்வொர்க் கொண்ட தேசம் என்னும் அடை மொழியோடு ஒப்பிட்டால் இந்த அறிமுக குறிப்புகள் சொற்பமானதே என்றாலும் வெளிநாட்டவருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
தளத்தில் உள்ள விவரங்கள் பயணத் திற்கு போதுமானதல்ல என்று நினைக் கிறீர்களா, தயங்காமல் எனக்கு ஒரு இமெயில் அனுப்புங்கள் தேவையான தகவல்களை தருகிறேன் என்கிறார் ஸ்மித்.
விமானத்தில் பறப்பது சுலபமானது தான். ஆனால் சிலருக்கு விமானத்தில் பறக்க பயமிருக்கலாம். வேறு சிலர், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக விமான பயணங்களை விரும்புவ தில்லை. இவர்கள் ரெயிலிலும், கப்பலிலும் பயணம் செய்ய தேவை யான தகவல்களை தருவது தன்னைப் போன்ற ரெயில்வே காரனின் கடமை என்று ஸ்மித் நினைக்கிறார்.
அதுமட்டும் அல்லாமல், அனைவ ரும் ரெயில் பயணங்களின் அரு மையை உணர வேண்டும் என்பதும் இவர் விருப்பம். விமான பயணங்க ளின்போது, எத்தனை விதமான அற்புத இடங்கள் மனிதர்களை எல்லாம் பார்க்காமல் போய்விடுகிறோம் தெரி யுமா? அதை எல்லாம் பார்த்து ரசிக்க ரெயில் பயணத்திற்கு மாற மற்றவர் களை ஊக்குவிப்பதும் இவரது நோக்கம்.
விமானத்தில் சென்றால் வெறும் இடப் பெயர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் ரெயிலில் பயணிக் கும்போது கண்ணில் படும் சுவாரசிய மான காட்சிகளும், சுகமான அனுபவங் களும் வெறும் இடப் பெயற்சியில் இருந்து உண்மையான அனுபவத்தை பெற முடியும் என்பது ஸ்மித்தின் நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக