உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சென்றால் இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பதிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உங்களுடைய பதிவை கண்டிப்பாக ஆன்லைன் பதிய சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்று அனைவரும் கணிணி அறிவு உள்ளவராகவே இருந்தாளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வலை பக்கத்துக்கு சென்றால் பைத்தியம் பிடித்துவிடும். உள்ளே பதிவு தகுதியோ அல்லது கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டுமானால் username மற்றும் password கேட்கும். இதில் உள்ளே நுழைவதற்க்கு திண்டாட வேண்டிஉள்ளது. (நானே பழ முயற்சி செய்து வெறுத்து விட்டேன். இன்று கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எப்படியோ உள் நுழைந்து பதிவும் செய்துவிட்டேன்) அதற்கான வழிமுறையை கீழ் கண்டவாறு காணலாம்
இணையதளம்
இணையதளம்
பயனர் பெயர்(username):
பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்
எடுத்துக்காட்டு:
உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M) (பெண்-F)
உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: DGD (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - திண்டுக்கல்)
இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.
DGD1996M00000216 (1996M 00216 பதில் எட்டிழக்கமாக 00000216 மாற்றவும்.
கடவுசொல்(password)
உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.
(dd / mm / yyyy)
username : DGD1996M00000216
password : dd / mm / yyyy
உள் சென்று பதிவது எப்படி:
1. புதியவர்
புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )
பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
மிக எழிதாக உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
2.பழையவர்
உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.
பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்
பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு
ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர்
CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHG தலைமை அலுவலகம், சென்னை
CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக