வெள்ளி, 31 டிசம்பர், 2010

வேர்டில் தேடல் (மினி டிப்ஸ்)

1. வேர்டில் தேடல்: மைக்ரோசாப்ட் வேர்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பைல் ஒன்றைத் திறக்க எண்ணுகிறீர்கள். ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. உடனே வேர்ட் தொகுப்பை மினிமைஸ் செய்துவிட்டு, எக்ஸ்புளோரர் சென்று அல்லது ஸ்டார்ட் மெனு சென்று தேடல் கட்டத்தில், பைலின் பெயரை அல்லது டெக்ஸ்ட்டில் ஒரு சொல்லை டைப் செய்து தேட முயற்சிப்பீர்கள். இது தேவையில்லை. வேர்ட் தொகுப்புக்குள்ளாகவே பைல் தேடும் வேலையை மேற்கொள்ளலாம். வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் File மெனு செல்லவும். அதில் விரியும் பட்டியலில் Open என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல பைல்களுடன் ஒரு பெட்டி தோன்றுகிறதா! இதன் வலது மேல் மூலைக்குச் செல்லவும். இங்கு Tools என்று இருக்கும் இடத்தில் உள்ள கீழாக உள்ள அம்புக் குறியில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதன் மேலாக Search என்று காட்டப்படுவதைப் பார்க்கலாம். அதில் கிளிக் செய்தால், தேடல் கட்டம் திறக்கப்படும். இங்கு நீங்கள் தேட வேண்டிய பைல் குறித்து டெக்ஸ்ட் அமைத்து தேடலாம்.

2. வேகத் தேடல் ஷார்ட் கட்: விண்டோஸ் (Windows) கீயை அழுத்திக் கொண்டு F கீயை அழுத்தவும். உடன் பைல் தேடும் கட்டம் கிடைக்கும்.

3. விண்டோஸ் எக்ஸ்புளோரர் பெற: விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு உ கீயை அழுத்தவும்.

4. எக்ஸ்பியில் தேட இன்னொரு வழி: உங்களுக்குத் தெரியுமா! எதனையாவது தேட வேண்டும் என்றால், ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்தால், மெனு ஒன்று எழுந்து வரும். அதில் Search என்ற தேடல் கட்டம் தர பிரிவு ஒன்று இருக்கும். அங்கு கிளிக் செய்து தேடலாம்.

5.இணைச் சொல் பெற: வேர்டில் டைப் செய்து கொண்டிருக்கையில், சொல் ஒன்றுக்கான இணையான பொருள் தரும் சொல் (synonym) தேவையா? வேர்ட் தொகுப்பை மூடி, இணையம் எல்லாம் செல்ல வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த சொல்லுக்கு இணையான பொருள் தரும் சொல் தேடுகிறீர்களோ, அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஷிப்ட் + எப் 7 (Shift +F7) அழுத்தவும். எழுந்து வரும் மெனுவில் synonym என்று இருக்கும். அதில் லெப்ட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் உள்ள சொற்களைப் பார்த்து எது உங்கள் தேடலுக்குச் சரியாக இருக்கும் எனக் காணவும். அருகே உள்ள படத்தில் word என்ற சொல்லுக்கான இணைச் சொல் தேடுகையில் கிடைக்கும் சொற்கள் அடங்கிய மெனுவினைக் காண்கிறீர்கள். இந்த தேடலில் இன்னொரு வழியும் உண்டு. வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த சொல்லுக்கு இணைப் பொருள் தரும் சொல் வேண்டுமோ, அதனை ரைட் கிளிக் செய்து, மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். அதில் synonym என்ற பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தாலும் மேலே சொன்ன கட்டம் கிடைக்கும். அல்லது சொல்லை ஹைலைட் செய்துவிட்டு F7 கீயை அழுத்தவும்.

6. ஒவ்வொரு முறையும் பிரியமான எழுத்து வகையில்: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கையில் புதிய பைல் ஒன்று திறக்கையில், ஏற்கனவே அங்கு மாறா நிலையில் உள்ள எழுத்து வகை (“default”) தான் கிடைக்கும். இதனை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். உங்களுக்கென ஒரு எழுத்துவகை சிறப்பாகத் தெரிவதாக நீங்கள் உணரலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துவகையினை நீங்கள் பயன்படுத்த ஆசைப்படலாம். இவற்றை டாகுமெண்ட்டுக்கான புதிய பைல் திறக்கையிலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும். புதிய டாகுமெண்ட்டுக்கான பைல் திறந்தவுடன், மெனு பார் சென்று அதில் Format என்பதில் லெப்ட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Font என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கட்டத்தில் உங்களுக்குப் பிரியமான எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் கீழாக இடது புறம் உள்ள Default பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், இதுதான் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையா? இதனைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் டெம்ப்ளேட் எல்லாம் மாறிவிடும் என்றெல்லாம் பயமுறுத்துகிற மாதிரி செய்தி எல்லாம் தரும். கவலையே படாமல் Yes என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் வழக்கம்போல ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த எழுத்துவகைதான் ஒவ்வொரு முறை நீங்கள் வேர்ட் டாகுமெண்ட்டைத் திறக்கும் போது மாறாநிலையில் கிடைக்கும். பின் இந்த எழுத்து வகையும் சலித்துப் போய்விட்டால், அல்லது புதிய ஒரு எழுத்துவகை பிடித்துப் போய்விட்டால், மேலே சொன்னபடி சென்று புதிய எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மாறா நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

7. ஹார்ட் ட்ரைவ் ஒரே கீயில்: உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பிரிவுகளை, அல்லது உள்ளே உள்ள விஷயங்களைக் காண பல படிகளில் சென்று பார்க்க வேண்டாம். ஒரே கீயில் அவற்றைக் கொண்டு வரும் மந்திரத்தை உங்கள் விரல்களில் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தி வரும் கட்டங்களில் கீதண என்ற கட்டத்தைக் காணவும். இது காட்டப்படவில்லை என்றால், விண்டோஸ் கீயுடன் கீ கீயினை (Win+கீ)அழுத்தவும். இந்த கட்டத்தில் பின்புறமாக சாய்ந்து நிற்கும் பேக்ஸ்லாஷ் கோட்டினை (\) அமைத்து என்டர் தட்டவும். பேக் ஸ்பேஸ் கீக்கு கீழாக இந்த கீ இருக்கும். பைல்களைக் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ காட்டப்படும். இங்கு உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் காணலாம்.

8.டெக்ஸ்ட் மாற்ற ஒரு ஷார்ட்கட் கீ: வேர்டில் உள்ள டாகுமெண்ட்டில், ஒரு முழுச் சொல்லை அல்லது டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியில் உள்ள சொற்களில் முதல் சொல்லின் முதல் எழுத்தை மட்டும் பெரிய கேபிடல் லெட்டராக மாற்ற வேண்டுமா? அல்லது அனைத்து சொற்களையும் கேபிடல் லெட்டர்களில் மாற்ற வேண்டுமா? எந்த சொல்லில் மாற்ற வேண்டுமோ, அல்லது சொற்களில் மாற்ற வேண்டுமோ, அந்த சொல்லின் முன்னால் கர்சரைக் கொண்டு செல்லவும்.

பின்னர் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு எப்3 கீயை அழுத்தவும். கர்சரை அடுத்து உள்ள சொல்லின் முதல் எழுத்து கேபிடல் எழுத்தாக மாறுவதனைக் காணலாம். அடுத்து மீண்டும் எப்3 கீயை அழுத்த அனைத்து எழுத்துக்களும் கேபிடல் எழுத்துக்களாக மாறுவதனைக் காணலாம். பல சொற்களைத் தேர்ந்தெடுக்கையில், முதல் சொல்லின் முதல் எழுத்து மட்டும் கேபிடல் எழுத்தாக மாறும். அடுத்த அழுத்தலில் அனைத்து சொற்களின் எழுத்துக்களும் கேபிடல் எழுத்துக்களாக மாறுவதனைக் காணலாம்.

9.போல்டர் விரிந்து கொடுக்க: பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே.

இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.

10.நெட்வொர்க் இணைக்க எளிதான வழி: நெட்வொர்க்கிங் இணைப்புகளைப் பொதுவாக எளிதாகப் பெறலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டா வில் இது சற்று சிரமமான வேலையாகத் தரப் பட்டுள்ளது. இதனை எளிதாக்கும் சிறிய வழி ஒன்று உள்ளது. ஸ்டார்ட் மெனு அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் அல்லது ரன் டயலாக் பாக்ஸில், ncpa.cpl என்று டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்கள் நெட்வொர்க் இணைப்பு உடனே எளிதாகக் கிடைக்கும்.

இணையத்தில் எங்கெங்கு உங்கள் புகைப்படங்கள் உள்ளன என்று கண்டறிய

Search your images online with TinEye
இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

Search your images online with TinEyeஇதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com/

ரயில்வே என்குயரி SMS To 139

railway+mascot இரயில்வே விசாரணை SMS To 139

இரயில்வே துறை, பயனிகள் பயனம் தொடர்பான தகவல்களை கைபேசி மூலம் அறிந்துகொள்ளும் வகையில் சில வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அளிக்கப்படும் சேவைகள் :
1. பி.என் ஆர் விசாரணை
2.இயக்கப்பம் இரயில் பற்றிய விபரங்கள்
3.இருக்கை காலியுள்ள இடங்கள் பற்றிய விபரங்கள்
4. கட்டண விபரம்
5. இரயில் நேர அட்டவணை
6.மற்றும் பிற சேவைகள்

எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட வேண்டிய வழிமுறை :

பயணச் சீட்டு தொடர்பான தகவல் பெற :
SMS “PNR<10 DIGIT PNR NUMBER>” TO 139
எடுத்துக்காட்டு: PNR 2345678901

இரயில் தொடர்பான தகவல் பெற :
SMS “AD<TRAIN NUMBER><STD CODE OF STATION>” TO 139
எடுத்துக்காட்டு: AD 2012 011

இரயில் நேர அட்டவணை பற்றிய தகவல் பெற:
SMS “TIME<TRAIN NUMBER>” TO 139
மேலும் தகவல் பெற :
SMS RAIL to 139

குறிப்பு : SMS ஓன்றுக்கு ரூபாய் 3(Rs.3 per sms) உங்கள் கைபேசியில் பிடிக்கப்படும்.


Now you have the power to receive railway enquiry right at your mobile phones on SMS 139

You can avail the following services:

1.PNR Enquiry
2.Current Train running position
3.Accommodation availability
4.Fare enquiry
5. Time table

The details of the services available are listed below:

For Ticket Status Enquiry :
SMS “PNR<10 DIGIT PNR NUMBER>” TO 139
For example: PNR 2345678901

For Train Enquiry :
SMS “AD<TRAIN NUMBER><STD CODE OF STATION>” TO 139
For example: AD 2012 011

FOR Time Table:
SMS “TIME<TRAIN NUMBER>” TO 139
For more enquiry SMS RAIL to 139

Important Note: Three Rupee chargeable per sms

வெளிநாடு செல்கிறவர்களுக்கு விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி

 

வணக்கம் நண்பர்களே நம் வலைத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் அப்படி வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களுக்கும் இந்தியாவுக்குள்ளே விமான போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு நிச்சியம் உதவும் இது முன்னமே உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் ஆனாலும் தெரியாதவர்களும் இருக்ககூடுமே அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்.

முதலாவதாக YATRA இனையதளம் பற்றி பார்க்கலாம் இது இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை தேடலாம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தேடமுடியாது அதாவது From என்பது இந்தியா அல்லது இந்தியாவிற்குள் உள்ள விமான நிலையமாக இருக்கவேண்டும் இருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் .இந்தியாவின் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை

Yatra தளம் செல்ல கீழிருக்கும் படத்தை கிளிக்கவும்



இரண்டாவதாக MAKE MY TRIP, TRAVEL .TRAVELOCITY ,CLEAR TRIP, BARGAIN TRAVEL, SKYSCANNER, CHEAPOAIR இந்த இனையதளங்கள் வழியாக இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளையும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவிற்குள் இருக்கும் விமான சர்வீஸ்களையும் இன்னும் பிற வெளிநாடுகளுக்கான விமான சர்வீஸ்களையும் எளிதாக தேடமுடியும். இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் இதுவும் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை.

சம்பந்தபட்ட தளங்களுக்கு செல்ல அந்தந்த படத்தை கிளிக்குங்கள்















நண்பர்களை நீங்கள் விமாணப்பயணம் மேற்கொள்ளும் முன் நேரடியாக நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்பும் விமாணத்தின் இனையதளத்திற்கு சென்று தேடினால் அவர்களின் விமானத்திற்கான தகவல்கள் கிடைக்கும் நான் மேலே கொடுத்துள்ள தளங்களின் வாயிலாக தேடினால் நீங்கள் தேடும் தேதியில் எந்ததெந்த விமாணங்கள் அந்த வழியில் செல்கிறது அதன் விலை விபரம், நேரம் இன்ன பிற தகவல்களை ஓரே நேரத்தில் கண்டுபிடித்து விடலாம ஆனால் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் செல்லவிரும்பும் விமாணத்தில் இனையதளத்திற்கே சென்று டிக்கெட் எடுக்கவும் அல்லாது இவர்களின் தளம் வழியாக டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கு சுமாராக 500 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம் வெளி நாட்டில் இருப்பவர்கள் இதில் காண்பிக்கும் தொகையை தங்கள் நாட்டின் நாணயமதிப்பை கன்வெர்ட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் கடன் அட்டை இருந்தால் இதையே கூட உங்கள் பகுதி நேர தொழிலாக செய்யலாம் விருப்பமிருந்தால் மட்டும்.

நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன்

IMAGEகளை ICONனாக CONVERT செய்ய......

நாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித ஐகான்கள் உள்ளன.

விண்டோஸ் ஐகான்கள் அனைதும் (.ICO) என்ற பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும்.

நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer, My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம்.

ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பைல் பார்மெட்டுகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் மென்பொருள் உதவுகிறது.



இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும்.

இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.

இன்டர்நெட்டில் டாப் 25 தேடியந்திரங்கள்(Search Engines)

நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன். 


Google  #1

இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை.
Click Here go to Website





Yahoo!   #4

கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது.
Click Here go to Website





Bing   #25 

பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். .
Click Here go to Website





Baidu #6

சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்..
Click Here go to Website





Yandex #24

இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்..
Click Here go to Website





Go.com #40

Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
Click Here go to Website





Ask #5

இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர்.
Click Here go to Website





Sohu #39

இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும்.
Click Here go to Website





AOL #49

கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்..
Click Here go to Website





Technorati #890

பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும்.
Click Here go to Website





Lycos #1551

Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும்.
Click Here go to Website





AltaVista #3366

யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது.
Click Here go to Website





Dogpile #2891

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





My Excite #3494

மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு அங்கமாகும்.
Click Here go to Website





Infospace #1658

இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த Dogpiple தளமும் இவர்களுடையதே.
Click Here go to Website





All the Web #13653

யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த தளம்.
Click Here go to Website





Kosmix #8,355

இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும்.
Click Here go to Website





DuckDuckGo #10,411

இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது.
Click Here go to Website





Mamma #31,896

தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
Click Here go to Website





blekko #3,013

சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி புரிகிறது.
Click Here go to Website





Yebol #226,115

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





Open Directory Project #483

Netscape தளத்தின் வெளியீடாகும்.
Click Here go to Website





AboutUs #1,456

ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு பெரும் உதவி புரிகிறது.
Click Here go to Website





Business.com #2,478

இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory ஆகவும் பயன்படுகிறது.
Click Here go to Website





Yahoo!Directory #4

யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும்.
Click Here go to Website





Best of the Web #4,531

நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது.
Click Here go to Website






பத்து ரகசியங்கள் - விண்டோஸ் எக்ஸ்பி - விஸ்டா





விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும்.

இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். 

1.
டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி): டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப்  (Close Group)   என்பதில் கிளிக் செய்திடவும். 

2.
சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி):உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும்.

3.
டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா): இணைய தளங்களை வேகமாகத் திறக்கடாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும்.

4.
ரீசைக்கிள் பின்னைத் தாண்ட: அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும்; அது ரீசைக்கிள் பின்னுக்குச்  செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும்.

5.
கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி): உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools  செல்லவும். இங்கு  Local Policies  என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர்  Security Options  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

6.
டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி): உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும்.  இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம்.

7.
எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி): ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting)  கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம். 

8.
கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா): பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது.  எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும். 

9.
கூடுதல் கடிகாரம் (விஸ்டா): பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை  எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட்  கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’   என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks  என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும். 

10.
ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா): கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information  என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’  என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’   என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும். 

FB-ன் (Facebook) புதிய வசதிகள்

 பேஸ்புக் நாளுக்கு நாள் புது புது வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.தற்போழுது அவர்கள் நமது பேஸ்புக்கின் தீம்மை மாற்ற கூடிய வசதியை எமக்கு அளித்துள்ளனர். இவ் வசதி முதலே வந்து இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது ஆனாலும் இன்றுதான் நான் இவ்மாற்றும் முறையை கண்டேன்.

ஆனால் உடனே தீம் மாறக் கூடிய சாத்தியகூறு நான் மாற்றும் போது இருக்கவில்லை.சில நிமிடங்கள் கழித்தே புதிய தீம் வந்தது.இன்னுமொரு விடயம் மீண்டும் எவ்வாறு பழைய டீபோல்ட் தீம்முக்கு கொண்டு வருவது என்று எனக்கு கண்டுபிடிக்கமுடியவில்லை



இதை கிளிக் பண்ணியதும் ஒரு விண்டோ வரும் அதில்  
Make This My Facebook Skin என்பதை கிளிக் பண்ணி அது செல்லும் வழிமுறையில் செல்லவும்.

உங்களுக்கு விரும்பிய தீம்களை << PREVIOUS NEXT >> பயன்படுத்தி தெரிவுசெய்ய முடியும்.

கல்வி உதவித்தொகைகள்...டாப் – 10

1252807859scholarships1 டாப்   10 கல்விச் செய்திகள் 

[ 1 ] கல்வி உதவித்தொகை :

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில, டோரப்ஜி டாடா அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பெற முதல் வகுப்பில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வெளிநாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புப் பயிற்சி பெறவும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு http://dorabjitatatrust.org/about/endowment.aspx போன்: 0226665 8282

[ 2 ]பிரிட்டிஷ் ஸ்காலர்ஷிப் :

தி பிரிட்டிஷ் கவுன்சில், தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று விதமான ஸ்காலர்ஷிப்பை அறிவித்துள்ளது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலை ஒன்றில், முதல் வகுப்பு மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 2010, டிச., 31. விபரங்களுக்கு: www.britishcouncil.org

[ 3 ] சர்வதேச டிப்ளமோ உதவித்தொகை :

யுனைடெட் வேர்ல்டு காலேஜஸ் ஸ்காலர்ஷிப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, வெனிசுலா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங் மற்றும் உலகின் பல நாடுகளில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ கல்வி பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் 1993 ஜனவரி 9ம் தேதிக்கு பின்னரும், 1996 பிப்ரவரி 29 தேதிக்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 2011 ஜனவரி 28 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு: www.uwc.org இமெயில்: parekh.smita@mahindra.com போன் 022  24974625

scholarships டாப்   10 கல்விச் செய்திகள்

[ 4 ] என்.பி.எச்.எம். வழங்கும் சிறப்பு உதவித்தொகைகள் :

உயர்நிலை கணிதத்திற்கான தேசிய வாரியம்(என்.பி.எச்.எம்), பி.ஏ./பி.எஸ்சி./பி.டெக்./பி.இ./எம்.ஏ./எம்.எஸ்சி. பட்டதாரிகள் அல்லது இறுதிவருட மாணவர்களில் அனைத்து நிலைகளிலும் முதல்வகுப்பு மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு, உதவித்தொகையினை வழங்குகிறது.

இந்த உதவித்தொகையானது, முதல் மற்றும் இரண்டாம் வருடத்தில் ரூ.16 ஆயிரம், அடுத்த வருடங்களில் ரூ.18 ஆயிரம், ஒரு வருடத்திற்கு 20 ஆயிரம் மற்றும் மத்திய அரசின் விதிமுறைப்படி வீட்டு வாடகைக்கான உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படும். காலஅளவு 4 வருடங்கள்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் இதற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி டிசம்பர் 16.
இது சம்பந்தமான விரிவான விவரங்களுக்கு www.career360.com என்ற வலைதளத்தை அணுகவும்.

[ 5 ] பி.எட்., படிப்பு :

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக்கல்வியில் பி.எட்., படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பல்வேறு பாடங்களில் இளநிலை/முதுநிலை படித்தவர்கள் சேரலாம் இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.b-u.ac.in/ 0422  2428216 / 2427742

[ 6 ] பி.எச்டி., சேர்க்கை :

சண்டிகரில் உள்ள பி.இ.சி., பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறியியல் பாடங்களுக்கான பி.எச்டி., சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவில், அப்ளைடு சயின்ஸ் அன்டு மேனேஜ்மென்ட், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் இன்ஜினியரிங் போன்ற பாடங்களில் பி.எச்டி., செய்யலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.pec.ac.in/

2626702 arch way welcoming you into pondichery Union Territory of Pondicherry டாப்   10 கல்விச் செய்திகள் 

[ 7 ] ஜிப்மர் சேர்க்கை அறிவிப்பு :

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனம்) வருகிற கல்வியாண்டிற்கான எம்.டி., / எம்.எஸ்., படிப்புகளுக்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். ஆன்லைன் வாயிலாக இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2010. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்பிப்ரவரி 13, 2011. மேலும் விவரங்களுக்கு www.jipmer.edu.in

[ 8 ] உதவித்தொகையுடன் எம்.பில்., படிப்பு :

கோல்கட்டா பல்கலைகழகத்தில் எம்.பில்., பாரின் பாலிசி படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.caluniv.ac.in/ 913324398645
simplicity டாப்   10 கல்விச் செய்திகள் 

[ 9 ] தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பி.எட்.,சேர்க்கை அறிவிப்பு :

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில், 2011ஆம் கல்வியாண்டின் பி.எட்.,படிப்பிற்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன் அரசு/அரசு ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தி இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையங்களில் விண்ணப்பங்களை பெறலாம். நுழைவுத் தேர்வு இல்லை. கடைசி நாள் 14.01.2011. விவரங்களுக்கு www.tamil university.ac.in
Education டாப்   10 கல்விச் செய்திகள் 

[ 10 ] தொலைநிலைக்கல்வி அட்மிஷன் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., (ஐ.டி.,) ஆகிய படிப்புகளுக்கு அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு மாணவர்கள், அண்ணா பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 2011, ஜன., 7 விபரங்களுக்கு: www.annauniv.edu/cde