எக்ஸெல் ஒர்க்புக்கில் இதனைப் பலர் கவனித்திருக்க மாட்டீர்கள். ஒர்க்புக் ஒன்றில் சில செல்களில் எண்களை என்டர் செய்திருக்கிறீர்கள். திடீரென இவற்றின் கூட்டுத் தொகை என்னவென்று அறிய ஆவல். என்ன செய்வீர்கள்? இன்னொரு செல்லைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட செல்களில் உள்ள எண்களைக் கூட்டுவதற்கான பார்முலாவினை அளிப்பீர்கள். அந்த பார்முலாவைப் பின்பற்றி நீங்கள் குறிப்பிட்ட செல்களில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை, பார்முலாவிற்கான செல்லில் எப்போதும் கிடைக்கும்.
இந்த ஏற்பாடு நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட செல்லில் வேண்டும் என்றால் மேற்கொள்ளலாம். இடையே தற்காலிகமாக வேண்டும் எனில் எப்படி செயல்படலாம்? எக்ஸெல் அதற்கு வழி தருகிறது. நீங்கள் கூட்டிப் பார்க்க விரும்பும் செல்களின் எண்கள் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தாலே போதும். ஒர்க் ஷீட்டின் கீழாக ஸ்டேட்டஸ் பாரில் இந்த கூட்டுத் தொகை தானாகவே காட்டப்படும். நீங்கள் இதற்கு முன் இதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை என்றால் View மெனு சென்று Status Bar ஆப்ஷனை டிக் செய்திடவும். ஒன்றுக்கு மேற்பட்ட செல்களில் எண்களை வைத்துக் கொண்டு அவற்றைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாலே இந்த கூட்டுத் தொகை காட்டப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால், தேர்ந்தெடுக்கத் தொடங்கிய உடனேயே ஒவ்வொன்றாகக் கூட்டிக் காட்டப்படும். அதாவது, எடுத்துக் காட்டாக, எழு செல்களில் எண்களைத் தந்துள்ளீர்கள். முதல் இரண்டு செல்களைத் தேர்ந்தெடுத்தவுடனேயே, அதன் கூட்டுத்தொகை காட்டப்படும். அடுத்து ஒவ்வொன்றாகச் செல்லச் செல்ல, இந்தக் கூட்டுத்தொகை அதற்கேற்ப மாறும். கூட்டுத் தொகைக்கு முன் Sum என்று காட்டப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக