[ 1 ] கல்வி உதவித்தொகை :
இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில, டோரப்ஜி டாடா அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பெற முதல் வகுப்பில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வெளிநாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புப் பயிற்சி பெறவும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு http://dorabjitatatrust.org/about/endowment.aspx போன்: 0226665 8282
[ 2 ]பிரிட்டிஷ் ஸ்காலர்ஷிப் :
தி பிரிட்டிஷ் கவுன்சில், தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று விதமான ஸ்காலர்ஷிப்பை அறிவித்துள்ளது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலை ஒன்றில், முதல் வகுப்பு மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 2010, டிச., 31. விபரங்களுக்கு: www.britishcouncil.org
[ 3 ] சர்வதேச டிப்ளமோ உதவித்தொகை :
யுனைடெட் வேர்ல்டு காலேஜஸ் ஸ்காலர்ஷிப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, வெனிசுலா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங் மற்றும் உலகின் பல நாடுகளில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ கல்வி பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் 1993 ஜனவரி 9ம் தேதிக்கு பின்னரும், 1996 பிப்ரவரி 29 தேதிக்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 2011 ஜனவரி 28 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு: www.uwc.org இமெயில்: parekh.smita@mahindra.com போன் 022 24974625
[ 4 ] என்.பி.எச்.எம். வழங்கும் சிறப்பு உதவித்தொகைகள் :
உயர்நிலை கணிதத்திற்கான தேசிய வாரியம்(என்.பி.எச்.எம்), பி.ஏ./பி.எஸ்சி./பி.டெக்./பி.இ./எம்.ஏ./எம்.எஸ்சி. பட்டதாரிகள் அல்லது இறுதிவருட மாணவர்களில் அனைத்து நிலைகளிலும் முதல்வகுப்பு மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு, உதவித்தொகையினை வழங்குகிறது.
இந்த உதவித்தொகையானது, முதல் மற்றும் இரண்டாம் வருடத்தில் ரூ.16 ஆயிரம், அடுத்த வருடங்களில் ரூ.18 ஆயிரம், ஒரு வருடத்திற்கு 20 ஆயிரம் மற்றும் மத்திய அரசின் விதிமுறைப்படி வீட்டு வாடகைக்கான உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படும். காலஅளவு 4 வருடங்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் இதற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி டிசம்பர் 16.
இது சம்பந்தமான விரிவான விவரங்களுக்கு www.career360.com என்ற வலைதளத்தை அணுகவும்.
[ 5 ] பி.எட்., படிப்பு :
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக்கல்வியில் பி.எட்., படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பல்வேறு பாடங்களில் இளநிலை/முதுநிலை படித்தவர்கள் சேரலாம் இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.b-u.ac.in/ 0422 2428216 / 2427742
[ 6 ] பி.எச்டி., சேர்க்கை :
சண்டிகரில் உள்ள பி.இ.சி., பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறியியல் பாடங்களுக்கான பி.எச்டி., சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவில், அப்ளைடு சயின்ஸ் அன்டு மேனேஜ்மென்ட், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் இன்ஜினியரிங் போன்ற பாடங்களில் பி.எச்டி., செய்யலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.pec.ac.in/
[ 7 ] ஜிப்மர் சேர்க்கை அறிவிப்பு :
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனம்) வருகிற கல்வியாண்டிற்கான எம்.டி., / எம்.எஸ்., படிப்புகளுக்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். ஆன்லைன் வாயிலாக இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2010. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்பிப்ரவரி 13, 2011. மேலும் விவரங்களுக்கு www.jipmer.edu.in
[ 8 ] உதவித்தொகையுடன் எம்.பில்., படிப்பு :
கோல்கட்டா பல்கலைகழகத்தில் எம்.பில்., பாரின் பாலிசி படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.caluniv.ac.in/ 913324398645
[ 9 ] தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பி.எட்.,சேர்க்கை அறிவிப்பு :
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில், 2011ஆம் கல்வியாண்டின் பி.எட்.,படிப்பிற்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன் அரசு/அரசு ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தி இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையங்களில் விண்ணப்பங்களை பெறலாம். நுழைவுத் தேர்வு இல்லை. கடைசி நாள் 14.01.2011. விவரங்களுக்கு www.tamil university.ac.in
[ 10 ] தொலைநிலைக்கல்வி அட்மிஷன் :
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., (ஐ.டி.,) ஆகிய படிப்புகளுக்கு அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு மாணவர்கள், அண்ணா பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 2011, ஜன., 7 விபரங்களுக்கு: www.annauniv.edu/cde
career technology updates
பதிலளிநீக்கு