புத்திக்கூர்மையான விளையாட்டு என்று சொல்லக்கூடிய செஸ் விளையாட்டை ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலம். செஸ் விளையாட்டைப்பற்றி மேலும் பல அறிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்..... என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
விளையாட்டுக்கு மொழி முக்கியமல்ல, உடல் தகுதியும் முக்கிமல்ல அறிவு அதுவும் துல்லியமான அறிவு இது மட்டும் போதும் என்று சொல்லும் செஸ் விளையாட்டில் தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை விளையாடி கற்றுக்கொண்டிருப்போம். ஆனால் கணினியுடன் செஸ் விளையாட்டை விளையாடும் போது பல நேரங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ஆனால் ஆன்லைன் மூலம் செஸ்விளையாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.chess.com
இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கிக்கொண்டு நாம் விளையாட தொடங்கலாம். இந்ததளத்தில் 6,00,000 மேற்பட்ட பயனளார்கள் உள்ளனர். இதில் சராசரியாக 2000 பேர் எப்போதும் ஆன்லைன் -ல் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் நாம் சேர்ந்து செஸ் விளையாடலம். Learn chess என்பதை சொடுக்கி செஸ் விளையாட்டைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். மொபைல் மற்றும் ஐபோன் மூலமும் நாம் இந்தத்தளத்தின் மூலம் செஸ் விளையாடலாம். செஸ் விளையாடும் நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக