பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்களை வரை கணக்கு என்று எதாவது ஒன்று வந்தால் உடனடியாக நாடுவது கால்குலேட்டரைதான் ஆனால் சில சமன்பாடு கணக்கு என்றால் கால்குலேட்டரில் எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வசதிகளையும் தாங்கி ஒரு இலவச Scientific Calculator இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Equation வைத்து வரும் கணக்கை செய்து முடிக்க நம்மிடம் சையின்டிபிக் கால்குலேட்டர் இல்லை என்றாலும் எளிதாக இந்த மென்பொருள் துணையுடன் முடிக்கலாம். எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் சில நிமிடங்களிலே செய்து முடிக்கலாம். ஸ்பீட் கிரன்ஞ் என்ற இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த முகவரியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
2.5 MB அளவுள்ள இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவி இதை இயக்கலாம். எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் Help -க்கு சென்று உடனடியாக சரி பார்க்கலாம். மற்றபடி சையின்டிபிக் கால்குலேட்டரில் நாம் பயன்படுத்தும் அத்தனையையும் இதில் பயன்படுத்தலாம் இன்னும் சொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே இதன் பயன்பாடு இருக்கிறது. லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ், மேக் ஓஎஸ், Fedora Core, OpenSUSE, போன்ற பல ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு துணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு கணிதத்துறையில் உள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக