அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.
கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.
அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக குழந்தைகள் தினத்தில் வழங்கி மனம் மகிழ செய்யுங்கள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது)
இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.
முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தைப் பாருங்கள்.
சரி குழந்தைகளுக்கு விளையாட்டு மட்டும் போதுமா? படிக்க வேண்டாமா? என கேட்பவர்களுக்கும், எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் கணக்கு பாடம் மட்டும் புரிவதே இல்லை என யோசிக்கும் பெற்றோர்களுக்கும் வரபிராசதமாக அமைகிறது TuxMath எனும் ஒரு இலவச மென்பொருள்.
இது கணித பாடத்தை விளையாட்டாய் கற்றுக் கொடுக்கும் சுவாரசியமான மென்பொருள்.
கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் என பல வகையான வசதிகள்.
இது ஒரு ஸ்பேஸ் விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டு ஸ்கோர்களும் வழங்கப்படுவதால், குழந்தைகளை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றவாறு, கணித ஸ்கில்லை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் நெகடிவ் மற்றும் பாஸிடிவ் எண்களின் கூட்டல், கழித்தலும் உண்டு.
தரவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை உற்சாகப் படுத்துங்கள்!
குழந்தைகளுக்கு எனது இனிய
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக