கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும், நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது, ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது, சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://ideone.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த மொழியில் புரோகிராம் எழுத வேண்டுமோ அந்த மொழியை வலதுபக்கம் இருக்கும் Choose Language என்பதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து இருக்கும் கட்டத்திற்குள் நம் புரோகிராமை எழுதிவிட்டு Run code என்ற ஆப்சனையும் தேர்ந்தெடுத்துவிட்டு Submit என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் எழுதிய புரோகிராம்-க்கான Output கிடைக்கும்.கணினித்துறையில் புரோகிராம் எழுத நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும். கணினியில் ஆன்லைன் மூலம் புரோகிராம் எழுதுவது பற்றிய நம் முந்தைய பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக