ஞாயிறு, 27 மார்ச், 2011

உங்கள் புகைப்படங்களை வித்தியாசமாக மாற்ற..........

இணைய தளங்களின்  உதவியுடன் உங்கள் புகைப்படங்களை
வித்தியாசமாக  மாற்றி அமைக்க முடியும் .

இணைய தளங்களில் நாம் எமது  புகைப்படங்களை எங்களுக்கு
பிடித்த பின்னணியில் வடிவமைத்து கொள்ள முடியும்.


நாம் எமக்கு பிடித்த பின்னணியை தெரிவு செய்து  chosse file நாம்
இணைக்க வேண்டிய புகைப்படத்தை கொடுத்தால்  உங்களுக்கான
படம் தயாராகிவிடும்.  

save செய்ய வசதியும் உண்டு.இங்கே  காணப்படும் படங்கள் இவ்வாறு  உருவாக்கப்பட்டவையே,  


தள முகவரி
http://photofunia.com/
http://picjoke.net/  

குழந்தைகளிற்கான தேடுதளம்


குழந்தைகளிற்கான தேடுதளம்.......................................



google   தேடு  தளமானது  குழந்தைகளிற்கு  என்று தனியான
தேடுதளத்தை  உருவாக்கியுள்ளது. இதில்  குழந்தைகளிற்கு
 பயன்தரும்  இணைய தளங்களை  மட்டும் ஓடி  தேடி தருகிறது
 இந்த gogooligans .com தளம் .


   link ;  http://www.gogooligans.com

இந்த வயசில உனக்கு என்ன கண்ணடி  


மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்

இன்று  எம்மை  தேடி  அத்தனையும்  எங்களின்  இருப்பிடத்துக்கே  வந்து  கொன்ன்டிருக்கிறது. அன்று  நாம்  கல்வி  பெற கல்லூரிகள், நுலகங்கள்  என  தேடி செல்ல  வேண்டி  இருந்தது. இன்று  அவ்வாறு  இல்லை இணையம்  மூலம் அத்தனையும் உங்கள்  உங்களின்  இல்லத்திலே  பெறமுடியும்.


அந்த  வகையில்  மாணவர்களுக்கு  பயன்தரும்  இணைய  தளங்களை  பட்டியலிடுகிறேன்.

1 .    http://www.textbooksonline.tn.nic.in/ இதனை     தமிழ அரசின்  கல்வி அமைச்சு  இதனை உருவாக்கியுள்ளது  .      இதிலே  12 ம் வகுப்பு வரை  தமிழ்  , அறிவியல்      கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,

2 . http://www.alfy.com/   இதில்  சிறுவர்களுக்கான     விளையாட்டுக்கள், மற்றும்  நிறம்திட்டுதல்      வீடியோ  கிளிப்ஸ்  என  விளையாட்டுடன் கற்றலை  மேம்படுத்துகிறது. இந்த  தளம்  . 

3  . http://www.coolmath4kids.com/  இந்த தளம்    குழந்தைகளின்  கணித  அறிவு  ஆற்றலை       விளையாட்டுடன்  கற்று தருகிறது. 

4   http://kids.yahoo.com/இது  குழந்தைகளுக்காக    யாஹூ  நிறுவனத்தின்  படைப்பாகும்.  

5  . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது    தினமலர்  நாளிதழின் கல்விக்கான  படைப்பாகும்     இதிலே  மாணவர்களுக்கான  தகவல்கள்  குவிந்து      இருக்கின்றன  . 


6  . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்       சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து      கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து   அறிந்து கொள்ளுதல்  அவற்றினை  மேம்படுத்துதல்     போன்றவற்றினை  இத்தளம்  சிறப்பாக  கூறுகிறது. 

    ஆங்கில  அறிவினை  ஆரம்பத்தில்  இருந்தே  வளர்த்து
    கொள்வதற்கான  தளம். 

8. http://www.tamilnotes.com/  தமிழ்  இலக்கண  அறிவை  வளர்த்து
    கொள்வதற்கான  இணையம்
  

வெள்ளி, 25 மார்ச், 2011

அனைவருக்கும் (கணணியில் பணிபுரியும்) உதவும் Dropbox !


Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இதனால் நமக்கு தேயையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு வேளை Dropbox இக்குள் இருக்கும் முக்கியமான கோப்புகளை தவறுதலாக நீங்கள் அழித்து விட்டாலும் பயப்படத் தேவையில்லை Dropbox இல் அழித்த கோப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உண்டு.
ச் சேவையைப் பெற்றுக்கொள்தற்கு முதலில் Dropbox இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணணியில் Dropbox இனால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணணியில் Dropbox என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும்.

இனி நீங்கள் அந்த Dropbox folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணணியில் இருந்தும் www.dropbox.com என்ற தளத்தினுடாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள Dropbox மென்பொருளினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Dropbox மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.

இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்த கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்


Dropbox
இனுள் Public , Photos எனும் இவ் இரு Folder கள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட Folder ஐ Share பண்ணியிருந்தீர்கள் என்றால் நீங்கள் Share பண்ணிய அந்த நண்பரும் பார்க்க முடியும் )

Dropbox இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் Dropbox கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை Dropbox இல் இணைப்பதன் முலம் உங்கள் சேமிப்பிடத்தை 8GB வரை அதிகரிக்க முடியும் .

Dropbox இனை கணணியில் மட்டுமல்ல iPhone, android போன்ற நவீன கையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்

மேலும் Dropbox இன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்

திங்கள், 21 மார்ச், 2011

இந்திய அரசாங்கத்தின் Online தளங்கள் அனைவருக்கும் பயன்படும்




Information Technology  துறையில்  அதீத வேகத்துடன் வளர்ந்து வருகின்ற இந்தியாவில் நம்முடைய இந்திய  அரசாங்கத்தின்  கீழ் செயல்படும்   அனைத்து      துறைகளுக்கும்   Online வசதி    மூலமாக   நாம்  தகவல்களை  அறிய  முடியும்,அல்லது   இந்த    தளத்திற்கு    சென்று  நமக்கு  தேவையான  அனைத்து  வேலைகளையும்  விரைவாக  செய்து முடிக்க முடியும் ,கண்டிப்பாக  நாம்    இந்த  Linkக்குகளை  Bookmark செய்து  வைத்து   கொண்டு ,  நமக்கு தேவையான பொழுது பயன்    படுத்திக்கொள்ளலாம். நண்பர்களுக்கும் இதனை  பகிர்ந்து  கொள்ளுங்கள்.



Certificates



* Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4 >

* Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8 >

* Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5 >

* Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6 >

* Marriage Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3 >

* Death Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Apply for:

* PAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15 >

* TAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3 >

* Ration Card < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7 >

* Passport < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 >

* Inclusion of name in the Electoral Rolls < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Register:

* Land/Property < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9 >

* Vehicle < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13 >

* With State Employment Exchange < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12 >

* As Employer < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17 >

* Company < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19 >

* .IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18 >

* GOV.IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Check/Track:

* Waiting list status for Central Government Housing <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9 >

* Status of Stolen Vehicles < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1 >

* Land Records < http://www.india.gov.in/landrecords/index.php >

* Causelist of Indian Courts < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7 >

* Court Judgements (JUDIS ) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24 >

* Daily Court Orders/Case Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21 >

* Acts of Indian Parliament < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13 >

* Exam Results < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16 >

* Speed Post Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10 >

* Agricultural Market Prices Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Book/File/Lodge:

* Train Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5 >

* Air Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4>

* Income Tax Returns < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12 >

* Complaint with Central Vigilance Commission (CVC) <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Contribute to:

* Prime Minister's Relief Fund < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Others:

* Send Letters Electronically < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20 >

* Search More - How do I < http://www.india.gov.in/howdo/advancedsearch.php >



Recently Added Online Services

* Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691 >

* Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693 >

* Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694 >

* Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695 >

* Meghalaya: Search Electoral Roll Online by Name (2008)
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697 >

* Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008)
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698 >

* Meghalaya: Search Electoral Roll Online by House number (2008)
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699 >

* Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702 >

* Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008)
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700 >

* Andhra Pradesh: Online Motor Driving School Information
< http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705 >



Global Navigation

* Citizens < http://www.india.gov.in/citizen.php >

* Business (External website that opens in a new window) < http://business.gov.in/ >

* Overseas < http://www.india.gov.in/overseas.php >

* Government < http://www.india.gov.in/govt.php >

* Know India < http://www.india.gov.in/knowindia.php >

* Sectors < http://www.india.gov.in/sector.php >

* Directories < http://www.india.gov.in/directories.php >

* Documents < http://www.india.gov.in/documents.php >

* Forms < http://www.india.gov.in/forms/forms.php >

* Acts < http://www.india.gov.in/govt/acts.php >

* Rules < http://www.india.gov.in/govt/rules.php >

* Schemes < http://www.india.gov.in/govt/schemes.php >

* Tenders < http://www.india.gov.in/tenders.php >

* Home < http://www.india.gov.in/default.php >

* About the Portal < http://www.india.gov.in/abouttheportal.php >

* Site Map < http://www.india.gov.in/sitemap.php >

* Link to Us < http://www.india.gov.in/linktous.php >

* Suggest to a Friend < http://www.india.gov.in/suggest/suggest.php >

* Help < http://www.india.gov.in/help.php >

* Terms of Use < http://www.india.gov.in/termscondtions.php >

* Feedback < http://www.india.gov.in/feedback.php >

* Contact Us < http://www.india.gov.in/contactus.php >

* Accessibility Statement < http://www.india.gov.in/accessibilitystatement.php>



அனைவர்க்கும் பயன்படும் இந்த Link க்குகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்



ஞாயிறு, 20 மார்ச், 2011

Unit Conversion - ( அனைத்து அலகு மாற்றி ) நொடியில் அறிந்து கொள்ளலாம்.

inches , feet , metres , miles , centimetres , kilometres. இன்ச்ஞ், ஃபீட், மீட்டர், மைல், செ.மீ, கி.மீ , Temperature , weight போன்ற அனைத்து அளவுகளையும் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றுவதற்காக நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

செ.மீ இருக்கிறது இதை மீட்டராக மாற்றுங்கள் அல்லது இன்ஞ்-ல் இருக்கிறது இதை ஃபீட் ஆக மாற்றுங்கள் என்று சொல்லி பல கேள்விகள் நமக்கு வந்தாலும் , இப்படி வரும் அனைத்து விதமான அலகு மாற்றி கேள்விக்கும் நொடியில் பதில் சொல்லும்படி நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://convert.francepropertyshop.com

இந்ததளத்தில் சென்று  நீள அகலங்களைப் பற்றிய Conversion-க்கு LENGTH என்பதை சொடுக்கவும் அடுத்து Temperature  Conversion-க்கு TEMPERATURE என்பதையும், Weight Conversion-க்கு WEIGHT என்பதையும் சொடுக்கி எளிதாக தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு அளவையும் மற்றொரு அளவாகநொடியில் எளிதாக மாற்றி தெரிந்து கொள்ளலாம்.  முதல் எந்த அலகில் இருக்கிறதோ அதையும் இரண்டாவது கட்டத்திற்குள் எந்த அளவாக மாற்ற வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பொத்தானை சொடுக்கி எந்த அலகும் எளிதாக மாற்றி தெரிந்து கொள்ளலாம். அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.




சனி, 19 மார்ச், 2011

ரெஸ்யூம்.....(ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்)


வேலைத் தேட‌ வேண்டும் என்ற‌வுட‌ன் அனைவ‌ர‌து ஆழ்ம‌ன‌திலும் தோன்றுவ‌து இண்ட‌ர்வியூவை ப‌ற்றிய‌ க‌ல‌க்க‌ம் தான். இந்த‌ இண்ட‌ர்வியூவான‌து நாம் தேடும் வேலையைப் பொறுத்து மாறுப‌டும். உதார‌ண‌மாக‌ ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் இண்ட‌ர்வியூ என்ப‌து எழுத்துத் தேர்வில்(Written Test) ஆர‌ம்பித்து க‌ல‌ந்துரையாட‌ல்(Group Discussion) வ‌ரை போகும். அதே ஒரு சிறிய‌ நிறுவ‌ன‌மாக‌ இருந்தால் த‌குதியான‌வ‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைத்து ஒரு ஓர‌ல் இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தி தேர்வு செய்வ‌ர். இவ்வாறு இண்ட‌ர்வியூவின் த‌ன்மையான‌து வேலையை பொறுத்து மாறுப‌டும்

எந்த‌வித‌மான‌ வேலையாக‌ இருந்தாலும் அந்த‌ வேலைக்கான‌ இண்ட‌ர்வியூக்கு செல்ல‌ நாம் ந‌ம்முடைய‌ ப‌யோடேட்டாவை ரெடி செய்வ‌து மிக‌ முக்கிய‌மாகிறது. பெரும்பாலான‌ நிறுவ‌ன‌ங்க‌ள் முத‌லில் ந‌ம்முடைய‌ ப‌யோடேட்டாவை பார்த்து தான் ந‌ம்மை இண்ட‌ர்வியூக்கு அழைக்க‌லாமா?.. வேண்டாமா?.. என்று முடிவு செய்கிறார்க‌ள். என‌வே ந‌ல்ல‌ வேலைக‌ள் கிடைப்ப‌தில் இந்த‌ ப‌யோடேட்டாவின் ப‌ங்கு மிக‌ முக்கிய‌மாகிற‌து.

கையினால் டைப் செய்து பேப்ப‌ரில் பிரிண்ட் போட்ட‌ ப‌யோடேட்டாவிற்கு ப‌தில் வாயினால் பேசி வீடியோவாக‌ தொகுக்கும் தொழில் நுட்ப‌ முறைக‌ள் அறிமுக‌ம் ஆகிவிட்ட‌ன‌. இந்த‌ வ‌கையான‌ வீடியோ ப‌யோடேட்டாக்க‌ள் வீடியோரெஸ்யூம்(Video Resume) என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து. இவை மேலை நாடுக‌ளில் பிர‌ப‌ல‌ம் என்றாலும், ந‌ம‌து இந்தியாவில் இப்போது தான் அறிமுக‌மாகிற‌து.

C2C Online Video Resume

மேலே உள்ள‌ லிங்கை கிளிக் செய்து நீங்க‌ளும் உங்க‌ளுடைய‌ ப‌யோடேட்ட‌வை வீடியோவாக‌ ப‌திவு செய்ய‌லாம். இவ‌ர்க‌ள் தான் இந்தியாவில் முத‌ன் முத‌லில் இந்த‌ ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம் தொழில் நுட்ப‌த்தைக் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள். C2C (Candidate to Client)

பெரும்பாலும் ப‌யோடேட்டா த‌யார் ப‌ண்ணும் போது இண்ட‌ர்நெட்டில் இருந்து கிடைக்கும் சாம்பிள் ப‌யோட்டேட்டாவில் உள்ளதை அப்ப‌டியே காப்பி செய்து பேஸ்ட் ப‌ண்ணிவிடுகிறோம். இவ்வாறு த‌யார் செய்த‌ ப‌யோடேட்டாவை கொண்டு இண்ட‌ர்வியூ சென்றால், க‌ண்டிப்பாக‌ இண்ட‌ர்வியூ ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு ப‌தில் தெரியாம‌ல் விழிக்க‌த்தான் செய்வோம். இந்த‌ வீடியோ ரெஸ்யூம் மூல‌ம் இதை க‌ண்டிப்பாக‌ த‌விர்க்க‌ முடியும். நாம் வீடியோவில் பேசிப் ப‌திவு செய்த‌தை ப‌ற்றி தான் கேட்பார்க‌ள். நாமும் எந்த‌வித‌மான‌ டென்ச‌னும் இல்லாம‌ல் இண்ட‌ர்வியூவில் ப‌ங்கேற்க‌ முடியும். இதில் ப‌திவேற்றி வைத்த‌ ந‌ம்முடைய‌ வீடியோ ரெஸ்யூமின் லிங்கை எவ‌ருக்கு வேண்டுமானாலும் மெயிலின் மூல‌ம் அனுப்பி வைக்க‌ முடியும். எல்லோராலும் ஓப‌ன் செய்து பார்க்க‌ முடியும். வீடியோ ரெஸ்யூமில் புதிதாக‌ அப்டேட் செய்ய‌வோ அல்ல‌து திருத்த‌ம் செய்ய‌வோ எளிதாக‌ முடியும்..

கால‌ம் பொன் போன்ற‌து. காலையில் இருந்து மாலை வ‌ரை இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் ஆபிசில் காவ‌ல் இருந்து க‌டைசியில் இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் அறைக்குள் நுழைந்தால் ப‌யோடேட்டாவில் உள்ள‌ விச‌ய‌ங்க‌ளையே திரும்ப‌ கேட்டுவிட்டு வீட்டிற்கு லெட்ட‌ர் அனுப்புகிறோம் என்று கூலாக‌ சொல்வார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ டெம்ப‌ளேட் நேர்முக‌த் தேர்வுக‌ளை இந்த‌ வீடியோ ரெஸ்யூம் மூல‌ம் முற்றிலும் த‌விர்க்க‌ முடியும்.

இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் க‌ம்பெனிக‌ளுக்கும், ஆட்க‌ளை தேர்வு செய்ய‌ இந்த‌ வீடியோ ரெஸ்யூம் முறையான‌து ரெம்ப‌ உத‌வியாக‌ இருக்கும். ஆட்க‌ளை தேர்வு செய்வ‌த‌ற்கு என்று த‌னியாக‌ அறைக‌ள் ஒதுக்கி அவ‌ர்க‌ளில் ஒவ்வொருவ‌ரையும் த‌னியாக‌ அழைத்து பேசி அவ‌ர்க‌ளின் திறைமையை ப‌ரிசீலிக்க‌ வேண்டிய‌து இல்லை. இத‌னால் க‌ம்பெனிக‌ளுக்கு க‌ணிச‌மான‌ ப‌ண‌மும், நேர‌ விர‌ய‌மும் மிச்ச‌மாகிற‌து.

சி2சி ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்(C2C Online Video Resume) ந‌ட‌த்தும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி சொல்ல‌ வேண்டுமானால் இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி ந‌ட‌த்தி ப‌ல‌ருக்கு வேலை வாய்ப்புக‌ள் ஏற்ப‌டுத்தி கொடுத்திருக்கிறார்க‌ள். மேலும் ஹெச் ஆர்(HR) தொட‌ர்பான‌ ப‌ல‌ டிரெயினிங்க் கோர்ஸ்க‌ளும் ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு சென்னை ம‌ற்றும் துபாயில் ஆபிஸ் இருக்கின்ற‌து

இந்த‌ வீடியோ ரெஸ்யூம் ஆன்லைன் முறையான‌து வேலை தேடுப‌வ‌ர்க‌ளையும்(Candidate), வேலை கொடுப்ப‌வ‌ர்களையும்(Client) அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு(Next Level) அழைத்து சென்றிருக்கிற‌து என்பது திண்ண‌ம். விரைவில் இவ‌ர்க‌ள் வீடியோ விவாகா ச‌ர்வீஸும் கொண்டுவ‌ர‌யிருக்கிறார்க‌ள்..

செவ்வாய், 15 மார்ச், 2011

வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்


வேலை வாய்ப்புக்கான கூகுல்






வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.

ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்.

அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம். வேலை வாய்ப்புக்கான் கூகுல் என்றும் சொல்லலாம்.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;    http://www.jobsearch.in

ஒரு பயனுள்ள செய்தி:- இல்லாத டி.எல்.எல். பைல்ககளை பெற






பல வேளைகளில் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்காமல் நின்றுவிடும். அப்போது காரணம் என்ன என்று பார்த்தால் குறிப்பிட்ட டி.எல்.எல். பைல் இல்லை ( "Could not find ***.dll" ) அல்லது கெட்டுவிட்டது என்ற செய்தி வரும். சரி. அந்த டி.எல்.எல். பைலுக்கு எங்கே போவது. குறிப்பிட்ட அந்த சாப்ட்வேர் தொகுப்பின் ஒரிஜினல் சிடியை எடுத்து தேடினால் குறிப்பிட்ட ஃபைல் எளிதில் கிடைக்காது. இதற்கு இணையம் ஒரு வழி தருகிறது.

www.dllfiles.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் உள்ள தேடும் கட்டத்தில் search boxல் உங்களுக்குத் தேவையான டி.எல்.எல். பைலின் பெயரை டைப் செய்திடவும். அந்த பைல் கிடைக்குமா என்ற செய்தி வரும். பின் அதில் உள்ள டவுண் லோட் பிரிவிற்குச் சென்று அந்த குறிப்பிட்ட பைலை இறக்கிக் கொள்ளலாம். இது போன்ற டி.எல்.எல். பைல்கள் எல்லாம் அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளும் பயன்படுத்தும் வகையில் பொதுவானதாக உள்ளதால் இவை இந்த தளத்தில் கிடைக்கின்றன. இந்த தளம் இது போன்ற பைல்கள் கிடைத்திட மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

புதிய வழி....பிரிண்ட் ஸ்கிரீன் பெற


மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்து எடிட் செய்து வருகிறோம். இன்னும் சற்றும் திறமையாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள்.

இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தின் சில பதிப்புகளில் கிடைக்கிறது. இது மிக வேகமாகவும், எளிமையாகவும் இந்த வேலையைக் கையாள்கிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, snip என டைப் செய்திடவும். பின்னர், Snipping Tool என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக இந்த புரோகிராம் செயல்படத் தொடங்கும். இப்போது உங்கள் மானிட்டர் திரையின் ஒளி சற்றுக் குறைவாக இருப்பதாகக் காட்டப்படும். கவலைப்பட வேண்டாம். இப்போது காட்சிகளை கட் செய்திட நீங்கள் தயாராக இல்லை என்றால், உடனே இந்த செயலைக் கேன்சல் செய்துவிடலாம். Snipping என்பது படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒரு பெட்டியாகக் கட்டம் கட்டி, நறுக்குவதாகும். மவுஸ் மூலம், நீங்கள் விரும்பும் காட்சியினைக் கட்டம் கட்டலாம். இதற்கு சிகப்புக் கோடு உங்களுக்குத் துணை புரியும். மவுஸ் பட்டனை விலக்கியவுடன், அதன் மூலம் கட்டச் சிறையில் பிடிக்கப்பட்ட காட்சி தோன்றும். இப்போது இதனை நீங்கள் விரும்பும் பார்மட்டில் ( GIF, JPEG, PNG, அல்லது HTML ) இதனை சேவ் செய்து விடலாம். கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடலாம். அப்படியே இமெயில் செய்தியாக அனுப்பலாம். அல்லது அதில் குறிப்புகளை எழுதலாம்.


திங்கள், 14 மார்ச், 2011

தமிழில் டைப் செய்ய - google



தமிழில் டைப் செய்ய தெரியலியா? கவலையை விடுங்கள். நம்ம   கூகிள் transliration இருக்குதுல.

கூகிள் பல புதிய வசதிகளை இன்டர்நெட்டில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை type செய்வதன் மூலம் தமிழில் எளிமையாக எழுதலாம்.

முதலில் கூகிள் transliration - ஐ டவுன்லோட் செய்ய   இங்கே  கிளிக்கவும்.
( படம்: 1 )




டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னர் task bar - இல் language tool bar - ஐ on செய்யவும். ( படம் - 2 )


படம் 2 இல் EN என்பதே language toolbaar ஆகும். EN - ஐ கிளிக் செய்து TA - ஐ கிளிக்கினால் தமிழில் எழுதலாம்.

இம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற  எதிலும் தமிழால் எழுதலாம்.


 உபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.


ஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...

google news...தமிழில்...

கூகுள் நிறுவனம் கூகுள் நீயூஸ் இந்தியா என்ற செய்தித்தாளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது தமிழிலும் செய்திகளை வெளியிடுகிறது.
இந்த செய்திகளை படிக்க நாம் நம் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைத்தால் போதும்.

இந்த மென்பொருளின் பெயர்:google news in tamil

 

பதிவிறக்கம் செய்ய இந்த சுட்டியை அழுத்தவும்:google news

பயன்படுத்தும் முறை:

இந்த சுட்டியை அழுத்தி பதிவிறக்கம் செய்தபின் இந்த மென்பொருளை திறக்கவும்.

பின்பு தமிழ் மொழியை தேர்வு செய்யவும்.

பிறகு கூகுளில் தமிழ் செய்திகளை படிக்கலாம்.

(GPRS வசதியுடைய கைபேசியில் மட்டுமே பயன்படுத்தமுடியும்)

இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம்,

நாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம், புகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம் எளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை எழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று தெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு உதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.uploadnsell.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம் உருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே உலக அளவில் விற்கலாம்.  Choose File என்ற பொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து  Product Information என்பதில் நாம் விற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க வேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய தகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும் கொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும் விற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக் செய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது இமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்.

வாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால் வழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos, நாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை எளிதாக விற்க உதவும்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

இணையதளம் மூலம் இலவசமாக வேலை தேடலாம்....




நம் படிப்புக்கும் அனுபவத்துக்கு ஏற்ற சரியான வேலையை இந்த இலவசமாக இணையதளம் மூலம் தேடி நல்ல வேலையைப்பெறலாம்.

நமக்கு தமிழ் மட்டும் தான் நன்றாக வரும், ஆங்கிலம் தொடர்ச்சியாக பேச வராது கணினி புரோகிராம் நன்றாக தெரியும், பல பிராஜெக்ட் செய்து இருக்கிறேன் என்றும் திறமைக்கு சரியான வேலை இல்லை என்று சொல்லும் இளைஞர்களுக்கு,இவர்களுக்காக வேலையைத் தேட ஒரு இணையதளம் இருக்கிறது.ஒரு ஏஜெண்ட் என்னவெல்லாம்செய்வாரோ அதை எல்லாம் ஒரு இணையதளம் இலவசமாக செய்கிறது. நமக்கு பயோடேட்டா தயார் செய்து வேலையை வாங்கி தருவது வரை அத்தனை வேலையையும் இந்தத்தளம் செய்கிறது,கூடவே நமக்காக வேலைக்கு ஆள் தேவை என்ற அறிவிப்பு வந்திருக்கும் நிறுவனத்திற்கு நம் பயோடேட்டாவையும் நம் இணையதளம் அனுப்பி விடுகிறார். பல மென்பொருள் நிறுவனங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான ஆட்களை இதன் மூலம் தேர்ந்தெடுகின்றனர். சரியான வேலையும், ஆங்கில மொழி பேச முடியாமல் இருக்கும் நம் தமிழ் இளைஞர்களுக்கு இந்தத் தளம் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பதிவு செய்து கொள்ளுங்கள்.

க்ளிக்


அருமையான தளம் ... தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க





தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க ஒரு அருமையான தளம் இது. தற்போதைய காலகட்டத்தில் பொரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது ஆங்கில அறிவை குறிப்பிடும் படி பெற்றுள்ளனர் என்றே கருதுகின்றேன்.

குறைந்தது இந்த கட்டுரையை வாசிக்கும் ஒருவருக்கு (கணணியை உபயேகிப்பவருக்கு) நிச்சயமாக ஆங்கிலத்தை சமாளிக்கத் தெரிந்திருக்கும். அதைவிட ‘பட்லர் இங்கிலீஸ்’ பேசுபவர்களும் நம்மில் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் இது உதவியான ஒரு தளம்.

அதைவிட ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தவர்களும் தமது புலமையினை சரிபார்த்துக்கொள்ளலாம்.
“ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு
ஒரு நல்ல சொத்தாகும்.
என அறிஞர் ‘வில்லியம் ஹாஸ்விட்’ கூறியிருக்கின்றார். இது நூல் வடிவில் இல்லாமல் மின் நூல் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆங்கிலப்பாடம் அத்தியாயம் 1, 2, 3… என ஆரம்பத்தில் இருந்தே அழகாக விளக்கப்படுத்திக்கொண்டு செல்கின்றது. ஆரம்ப அத்தியாயங்கள் உங்களுக்கு அவசியம் இல்லை எனில், பிற அத்தியாயங்களை வலதுபக்கத்தில் உள்ள நிரல்களில் இருந்தும் தெரிவுசெய்து கொள்ளால்லாம்.

சிறந்த மென்பொருள்...... Screenshot எடுக்க

Screenshot எடுப்பதற்கு விண்டோஸில் Print Screen வசதி இருந்தாலும் அதில் பல வசதிகள் இருப்பதில்லை.உதாரணமாக உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக எடுக்க முடியாது. முழு திரையையும் எடுத்து பின் அதில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மௌஸ் உடன் எடுக்க விரும்பினால் முடியாது.

இதனாலேயே தனி மென்பொருள்கள் உதவியை நாட வேண்டியுள்ளது. பல இலவச மென்பொருள்கள் உள்ளன. பல வசதிகள் சில மென்பொருள்களில் இருந்தாலும் அவைகள் எளிதாக இருப்பதில்லை. Shotty என்ற இந்த மென்பொருள் எளிதாக Screenshot எடுக்க உதவுகிறது.

இதனை இயக்குவது எளிது.நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.

Ctrl + Prt Scr கிளிக் செய்தும் எடுக்கலாம்.வேண்டுமானால் நம் வசதிக்கு ஏற்ப பட்டனை மாற்றி கொள்ளலாம்.

Screen என்பதை கிளிக் செய்தால் முழு திரையும் , Region என்பதை கிளிக் செய்தால் திரையில் குறிப்பிட்ட பகுதியையும் , LQ Window என்பதை கிளிக் செய்தால் சற்று குறைந்த குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும், HQ Window என்பதை கிளிக் செய்தால் நல்ல குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும் Screenshot எடுக்கலாம்.

மேலும் பல திரைகள் இருப்பின் எந்த திரையை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.


எடுக்கப்பட்ட Screenshot இல் மேலும் பல திருத்தங்களை அல்லது மாற்றங்களையும் செய்ய வசதி தருகிறது.

இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Shotty - Take high quality screenshots

சனி, 12 மார்ச், 2011

சில ஷார்ட்கட் கீகள் - நினைவில் கொள்ள


கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.

CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.

F2 key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட

CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல

CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல

CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட

F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட

ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.

CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க

F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

கிவ் அவே ஆப் த டே இணையதளம்.

இலவச சாப்ட்வேர்களுக்கான இணையதளம்.


 

இன்றைய இலவச சாப்ட்வேர் என்னும் அறிவிப்போடு வரவேற்கிறது கிவ் அவே ஆப் த டே இணையதளம்.

இலவ்ச சாப்ட்வேர்களூக்கான இந்த தளம் தினமும் ஒரு இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்து அதனை டவுண்லோடு செய்து கொள்ளவும் வழி செய்கிறது.இந்த தளம் தருவது இலவச சாப்ட்வேர் மட்டும் அல்ல;புத்தம் புதிய சாப்ட்வேர் என்பதும் கவனிக்க தக்கது.

சலுகை மற்றும் தள்ளுபடி தொடர்பான தகவல்களை வழங்கும் இணையதளங்கள் அன்றைய‌ தினத்துக்கான தள்ளுபடி திட்டங்களை தினம் ஒரு தள்ளுபடி என அறிமுகம் செய்வது போல இந்த தளம் தினம் ஒரு புதிய இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்து வைக்கிறது.

அந்த சாப்ட்வேர் ஒரு நாள் மட்டுமே இலவசமாக கிடைக்கும் மறு நாள் வேறு ஒரு சாப்ட்வேர் வந்து விடும்.

சாப்ட்வேர் பிரியர்கள் தினந்தோறும் இந்த தளத்திற்கு விஜயம் செய்து புதுப்புது சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.விரும்பினால் அந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து பயன்படுத்தி பார்க்கலாம்.

சாப்ட்வேர் நிபுணர்கள் மற்றும் சாப்ட்வேர் பயனாளிகள் என இரு தரப்பினருக்குமே இந்த தளம் பயனுள்ளது .சொல்லப்போனால் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த தளம் விளங்குகிறது.

சாப்ட்வேர் நிபுணர்கள் தங்களது புதிய சாப்ட்வேரை வெள்ளோட்டம் பார்க்க விரும்பினால் இந்த தளத்தின் மூலம் அதனை இல‌வசமாக வழங்கலாம்.சாப்ட்வேர் பற்றிய குறிப்புகளோடு அதன் பயன்பாடு மற்றும் சிறப்பம்சங்களை குறிப்பிட்டு அறிமுகம் செய்யலாம்.

இலவச சாப்ட்வேருக்காக இந்த தளத்தை முற்றுகையிடும் இணையவாசிகள் அதனை பயன்படுத்தி பார்த்து பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்.புதிய சாப்ட்வேருக்கு இதை விட சிறந்த விளம்பரம் கிடைக்க முடியுமா ?

விளம்பரம் மட்டும் அல்ல அந்த சாப்ட்வேரின் பயன்பாடு தொடர்பான கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடியும்.தன்டைப்படையில் சாப்ட்வேரை மேம்படுத்தவும் செய்யலாம்.

இணையவாசிகளை பொருத்தவரை பயனுள்ள புதிய சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.அவற்றை காசு கொடுத்து வாங்கி பார்த்து ஏமாறாமல் இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம்.

எந்த சாப்ட்வேரும் ஒரு நாள் மட்டுமே இல‌வ‌சமாக டவுண்லோடு செய்து கொள்ள அனுமதி உண்டு.அதன் பிறகும் அந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் விரும்பினால் அது தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.இல்லை என்றால் அவர் குறிப்பிடும் நிபந்தனையின் அடிப்படையில் அதனை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆனால் ஒன்று இலவசமாக கிடைக்கிறதோ இல்லையோ இந்த தளத்தில் அறிமுகமான எல்லா சாப்ட்வேர் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.அதற்கு ஏற்ற வகையில் இந்த தளத்தில் இடம் பெற்ற எல்லா சாப்ட்வேர்களுமே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.தேதி வாரியாக சாப்ட்வேரை தேடிப்பார்க்கலாம்.

அந்த வகையில் பல்வேறு பிரிவுகளை மிகச்சிறந்த சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.

மேலும் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும் சாப்ட்வேர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இணையவாசிகள் தங்களுக்கு தேவையான சாப்ட்வேர் இருக்கிறதா என்றும் தேடிப்பார்க்கலாம்.இத்த‌கைய தேடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதனை பார்த்தும் புதிய சாப்ட்வேரை அறிமுகம் செய்து கொள்ளலாம்.சமீபத்திய தேடல் மற்றும் பிரபலமான தேடல் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளூக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதால் இந்த தளத்தில் பல பயனுள்ள சாப்ட்வேர்களின் களஞ்சியமாகவே திகழ்கிற‌து என்று சொல்லலாம்.

இந்த தளத்தின் மற்றொரு சிறப்பமசம் சாப்ட்வேர் பற்றிய விவாத களமும் உள்ளது.சாப்ட்வேர் பயன்பாடு தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கிடைக்க இந்த களத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இலவ‌ச சாப்ட்வேர்களுக்கு என்று பல தளங்கல் இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றில் உயிரோட்டம் மிக்கதாக விளங்கும் தளம் என்று இதனை சொல்லலாம்.

இணையதள முகவரி;http://www.giveawayoftheday.com/

அறிவியலைக் கற்றுத் தரும் டிவிடிக்கள்

சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர் களுக்கும், அவர்களின் அறிவுத் தேடலுக்குத் உதவிடும் வகையில், பெப்பில்ஸ் நிறுவனம் பல டிவிடிக்களை வெளியிட்டு வருகிறது.


அண்மையில் அறிவியல் கூற்றுக்கள் பலவற்றை, சிறுவர்கள் அவற்றைக் கற்றுக் கொள்ளும் வயதுவாரியாகப் பிரித்து, மூன்று டிவிடிக்களை Science Experiments என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இவை 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான மூன்று டிவிடிகளாகும்.

அடிப்படை அறிவியல் கோட்பாடு களை, எந்த பரிசோதனைக் கூடத்திற்கும் செல்லாமல் அறிந்து கொள்ளும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், தங்களைச் சுற்றி உள்ள பொருட் களைப் பயன்படுத்தித் தாங்களாகவே இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு, கற்றுக் கொள்ளும் வகையில் காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, மின்சாரம், பேப்பர் பந்து, வாட்டர் பாட்டிலில் உள்ள நீரின் அழுத்தம், காற்றின் எடை, புவி ஈர்ப்பு சக்தியும் காந்த சக்தியும், காற்றில் எரியும் மெழுகுவத்தி, டிடர்ஜண்ட், காந்தம் பயன்படுத்தி விளையாட்டுக்கள் ஆகியவை ஐந்து மற்றும் ஆறு வயதுள்ள சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வேடிக்கையாக விளக்கப் பட்டுள்ளன.

7 மற்றும் 8 வயது சிறுவர்களுக்கான டிவிடியில், மிதக்கும் ஊசி, பொருட்களைப் பெரிதாக்கிக் காட்டும் லென்ஸ், இதயத் துடிப்பு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

அடுத்த நிலையில் 11 வயது வரை வளர்ந்த சிறுவர்களுக்கு, மரம் நடுதல், மின்சாரம் செலுத்துதல், தண்ணீர் மற்றும் காற்று செயல்பாடு, பேப்பர் குடுவையில் தண்ணீர் கொதித்தல், எரிமலை ஏற்படுதல், இதயம் விரிவடைதல் போன்றவை விளக்கப்படுகின்றன.

அனுபவமுள்ள ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அறிவியல் பாட வல்லுநர்கள் குழு இவற்றைத் தயாரித்து வழங்கியுள்ளது.

ஒவ்வொரு டிவிடியும் ரூ.199 விலையிடப்பட்டுள்ளது. தேவைப் படுவோர் மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தொலைபேசி 28546297 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது இந்த நிறுவனத்தின் இணைய தளத்தினை www.pebbles.in என்ற முகவரியில் அணுகலாம்.