வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.


மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.

எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது.

திங்கள், 12 செப்டம்பர், 2011

வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது.......

நம் பெரியோர் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கை பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.

பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.


வெள்ளி, 9 செப்டம்பர், 2011


வாஸ்து சாஸ்திரம் ! தமிழ் புத்தகம் Free E-Book - Download


வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நீ எதை கேட்கிறாயோ, அதை நான் கொடுப்பேன் என்று இருக்கும் அட்டகாசமான கூகிள் இருக்கும் வரை , நமக்கு எல்லாமே கிடைக்கும் போல தெரிகிறது. வாஸ்துவைப் பற்றி ஒரு எளிய விளக்கங்கள் கொண்ட , ஒரு அடிப்படைப் புத்தகம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 எப்படி , ஜாதகம் ஒரு மனிதனின் வாழ்வில் - வெற்றி, தோல்வி , நிம்மதி , கலக்கம் என அத்தனை காரியங்களுக்கும் முக்கியமோ, அதைப் போலே வாஸ்துவும் - மிக முக்கிய பங்கு வகிக்கிறது .நவ கிரகங்களும் , உங்கள் வீட்டின் எட்டு மூலைகளில் அமர்ந்து , உங்களை இயக்குவர். 

நமது ஜோதிட மாணவர்கள் அனைவரும் , தெரிந்து பயன் பெற - ஒரு சிறிய புத்தகம் இது. இதை தெளிவாக படித்து , உங்கள் அறிவை மேம்படுத்துதல் முக்கியம். வெறுமனே , material மட்டும்  வைத்துக்கொண்டு பிரயோஜனம் இல்லை. இந்த புத்தகம் என்று இல்லை ... உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் என்றாலும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். 

நாளை சந்திர கிரகணம் வருகிறது. கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு கோடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை , பெரிய பெரிய சித்தர்களும், ரிஷிகளும் - தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி , நாமும் இறையருளை வேண்டுவோம்..நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரபொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்... !

இந்த பூமி , ஒரு குறிப்பிட்ட அச்சில் , வேகமாக சுற்றுகிறது... அந்த சுற்றும் விசையில் , வேகத்தில் வெளிவரும் சப்தமே - பிரணவ மந்திரமாகிய ' ஓம் " , உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் - ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டியே இருக்கும்.

நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும்போது , அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல ,அந்த இசையை நம் காத்து கேட்பதுபோலே , மனம் ஒன்றுவது போல - மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன்  உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார் .

கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி - " ஓம் சிவ சிவ ஓம்  " மந்திர ஜெபம் செய்யுங்கள். தன வாழ் நாள் முழுவதும் , ஒரு மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி செய்த பெரியவர் திரு . மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் , கண்டறிந்த மந்திரம் இது .... இதை முறைப்படி ஜெபித்து வர , உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதை தெளிவாக தெரிய வரும்.

கூடிய விரைவில் உங்களுக்கே நீங்கள் தியானம் பண்ண வேண்டிய மந்திரமும், தகுந்த குரு ஒருவர் மூலம் கிட்டும். இறைவனிடம் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் பிறவியின் நோக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திர ஜெபங்களினால் உங்களுக்கு கிட்டும்.

மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும், என்றும் உங்களுக்கு கிடைக்க பரம்பொருள் துணை புரியட்டும் !!

வாழ்த்துக்கள் !

நமது வாசக நண்பர் திரு. ஹரி மணிகண்டன் அவர்கள் , நமக்கு இந்த சொர்ண லிங்கேஸ்வரர் படத்தை அனுப்பியிருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
 கண்ணைப் பறிக்கும் அழகுடன், கம்பீரமும் கலந்து இருக்கும் அந்த படத்தை கீழே கொடுத்துள்ளேன்... !

வாஸ்து சாஸ்திரம் - தமிழில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


http://www.ziddu.com/download/15351497/VasthuSastrainTamil.pdf.html


எண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil)


எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்தகத்தை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நம் ஜோதிட மாணவர்கள் அனைவரும், தவறாமல்  படித்துப் பயன்பெறவும்.

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், மிக சாதாரண நடையில் , படிப்பவர்கள் உடனடியாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து இருப்பதுதான்.

இது , எண்கணிதம் என்ற பெயரில் , நீங்கள் பிறரிடம் ஏமாந்து போகாமல் இருக்க உதவும்.  தாரளாமாக உங்கள் சந்தேகங்களை , மின்னஞ்சலில் அனுப்பவும். 


http://www.ziddu.com/download/16293456/Numerology.pdf.html
 
 

சனி, 3 செப்டம்பர், 2011

உலகாளவிய ட்ரெயின் பயணங்களுக்காக...




யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைப்பவர் மார்க் ஸ்மித். அதற்காகவே “சீட் 61′ என்னும் இணைய தளத்தையும் நடத்தி வருகிறார்.

ரெயில் பயணங்கள் இதைத்தான் ஸ்மித் தான் பெற்ற இன்பமாக நினைத்து கொண்டிருக்கிறார். இன்ன மும் பெற்று வருகிறார். தன்னைப் போலவே மற்றவர்களும் பெற வேண் டும் என நினைக்கிறார். அதற்கு தன்னால் இயன்ற குறிப்பு களையும், வழி காட்டுதலையும் வழங்கவே “சீட் 61" தளத்தை அமைத்திருக்கிறார்.

இந்த தளம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று சொன்னா லும் அவரது நோக்கத்தின் பின்னே இருப்பது விளையாட்டு அல்ல தீவிரமான ஈடுபாடே!

ரெயில்களின் மீதும் அதில் பயணம் செய்வதிலும் உள்ள ஆர்வத்தினால் பிறந்த ஈடுபாடு.

பகிம் ஷயர் பகுதியில் பிறந்த ஸ்மித் தன்னை “ரெயில்வேகாரன்’ என்று பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார்.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தேன் என்பதை பலரும் பெருமையாக சொல்லிக் கொள்ளும் நிலையில் ஸ்மித் ரெயில் வேயில் சேருவதற்காக ஆக்ஸ் போர்டை விட்டு ஓடி வந்தேன் என்று சந்தோஷப்படுபவர்.

அன்றிலிருந்து ரெயில்வேயில் பல பதவிகளை வகித்துள்ளதோடு ஊர் ஊராக சுற்றி வந்திருக்கிறார். இந்த பயணங்களை அவர் வேலையாக நினைத்ததில்லை. கொஞ்சம் நிரம்பிய சந்தோஷத்தோடு அவர் அவற்றை அனுமதித்திருக்கிறார்.





இந்த அனுபவத்தின் விளைவாக, ரெயில்களில் எப்படி பயணம் செய்ய லாம், எந்த நகரங்களுக்கு செல்ல எங்கே முன்பதிவு செய்து டிக்கெட் வாங்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி.

ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பலர் இந்த தகவல்கள் தெரியாமல் திண்டாடிப் போவதுண்டு. பயண ஏற்பாட்டு தளங்கள் இருந்தாலும், சரியான விவரங்கள் கிடைப்பது அத்தனை சுலபம் அல்ல.

அதுதான், ஸ்மித் தனக்கு தெரிந்த ரெயில் பயண ரகசியங்களை பகிர்ந்து கொள்ள இன்டெர்நெட்டுக்கு வந்தி ருக்கிறார். அவருடைய சீட்61 தளத் தில், உலகில் உள்ள முக்கிய இடங்க ளுக்கெல்லாம் ரெயிலில் பயணம் செய்வதற்கான வழி முறைகளை தேடிப்பெறலாம். ரெயில் பயண அட்ட வணையை திட்டமிட உதவுவதோடு, ஒவ்வொரு நாட்டிலும் பார்ப்பதற்குரிய இடங்களையும் பட்டியலிட்டு விடுகி றார்.

இந்த பட்டியலில் இந்தியாவைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகள் இருக்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய ரெயில்வே நெட்வொர்க் கொண்ட தேசம் என்னும் அடை மொழியோடு ஒப்பிட்டால் இந்த அறிமுக குறிப்புகள் சொற்பமானதே என்றாலும் வெளிநாட்டவருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

தளத்தில் உள்ள விவரங்கள் பயணத் திற்கு போதுமானதல்ல என்று நினைக் கிறீர்களா, தயங்காமல் எனக்கு ஒரு இமெயில் அனுப்புங்கள் தேவையான தகவல்களை தருகிறேன் என்கிறார் ஸ்மித்.



விமானத்தில் பறப்பது சுலபமானது தான். ஆனால் சிலருக்கு விமானத்தில் பறக்க பயமிருக்கலாம். வேறு சிலர், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக விமான பயணங்களை விரும்புவ தில்லை. இவர்கள் ரெயிலிலும், கப்பலிலும் பயணம் செய்ய தேவை யான தகவல்களை தருவது தன்னைப் போன்ற ரெயில்வே காரனின் கடமை என்று ஸ்மித் நினைக்கிறார்.

அதுமட்டும் அல்லாமல், அனைவ ரும் ரெயில் பயணங்களின் அரு மையை உணர வேண்டும் என்பதும் இவர் விருப்பம். விமான பயணங்க ளின்போது, எத்தனை விதமான அற்புத இடங்கள் மனிதர்களை எல்லாம் பார்க்காமல் போய்விடுகிறோம் தெரி யுமா? அதை எல்லாம் பார்த்து ரசிக்க ரெயில் பயணத்திற்கு மாற மற்றவர் களை ஊக்குவிப்பதும் இவரது நோக்கம்.

விமானத்தில் சென்றால் வெறும் இடப் பெயர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் ரெயிலில் பயணிக் கும்போது கண்ணில் படும் சுவாரசிய மான காட்சிகளும், சுகமான அனுபவங் களும் வெறும் இடப் பெயற்சியில் இருந்து உண்மையான அனுபவத்தை பெற முடியும் என்பது ஸ்மித்தின் நம்பிக்கை.

http://www.seat61.com

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஆன்லைனில் மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் உங்கள் கல்வி தகுதியை பதிவது எப்படி



உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சென்றால் இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பதிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உங்களுடைய பதிவை கண்டிப்பாக ஆன்லைன் பதிய சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்று அனைவரும் கணிணி அறிவு உள்ளவராகவே இருந்தாளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வலை பக்கத்துக்கு சென்றால் பைத்தியம் பிடித்துவிடும். உள்ளே பதிவு தகுதியோ அல்லது கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டுமானால் username மற்றும் password கேட்கும். இதில் உள்ளே நுழைவதற்க்கு திண்டாட வேண்டிஉள்ளது. (நானே பழ முயற்சி செய்து வெறுத்து விட்டேன். இன்று கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எப்படியோ உள் நுழைந்து பதிவும் செய்துவிட்டேன்) அதற்கான வழிமுறையை கீழ் கண்டவாறு காணலாம்


இணையதளம்




பயனர் பெயர்(username):


பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்


எடுத்துக்காட்டு:


உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M)  (பெண்-F)


உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: DGD (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - திண்டுக்கல்)


இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.


DGD1996M00000216   (1996M 00216 பதில் எட்டிழக்கமாக 00000216 மாற்றவும்.


கடவுசொல்(password)


உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
 (dd / mm / yyyy) இட வேண்டும்.


(dd / mm / yyyy)










username : DGD1996M00000216
password : dd / mm / yyyy


உள் சென்று பதிவது எப்படி:


1. புதியவர்


புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )


பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
மிக எழிதாக உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.


2.பழையவர்


உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.


பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்


பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.

உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு

ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர் 
CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHG தலைமை அலுவலகம், சென்னை
CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம்,      சென்னை
CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
CHT  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
CHU  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம்  மதுரை
MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி

ஹிலியாட் - புதிய தேடியந்திரம்

ஹிலியாட் என்ன செய்கிறது என்றால் தேடல் முடிவுகளை போரடிக்க கூடிய வகையில் பட்டியல் போட்டுத்தராமல் அதனை தானே வகைப்படுத்தி தருகிறது. எந்த குறிச்சொல் கொண்டு தேடப்பட்டாலும் தேடல் முடிவுகளை அழகாக வகைப்படுத்தி தந்து தேடல் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டித்தருகிறது.

தற்போதுள்ள தேடியந்திரங்கள் முடிவுகளை பட்டியலிடுவதோடு நின்று விடுகின்றன. அவற்றை வகைப்படுத்தி கொள்வது இணையவாசியின் பொறுப்பு. தேடியந்திரங்கள் அதிகபட்சமாக செய்வதெல்லாம் செய்தி,புகைப்படம்,வலைதளங்கள் என வகைப்படுத்தி கொள்ள வழி செய்வது மட்டுமே.

ஆனால் ஹிலியாட் தேடல் முடிவுகளை அவற்றின் தனமைக்கேற்ப வகைப்படுத்தி காட்டுகிறது.ஒவ்வொரு வகையும் ஒரு வண்ண வட்டத்தால் அடையாளம் காட்டப்படுகின்றன.தேவையான வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால் அந்த வகையிலான முடிவுகளை மட்டும் காணலாம்.இபடி ஒவ்வொரு வகையாக முடிவுகளை பரிசிலிக்கலாம்.

முதல் பார்வைக்கு இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதிலும் தேடச்சொன்னவுடம் முடிவுகளை கொண்டு வந்து கொட்டாமல், கொஞ்சம் பொருங்கள் முடிவுகளை வகைப்படுத்தி கொண்டிருக்கிறோம்’ என சொல்லி காக்க வைத்துவிட்டு பின்னரே முடிவுகளை முன்வைக்கிறது.

கூகுல் மின்னலென தேடல் முடிவுகளை பட்டியலிட பழக்கப்பட்டவர்களுக்கு இது சங்கடத்தை தரலாம். ஆனால் வகைப்படுத்தலை கண்ட பின் இந்த சங்கடம் மறைந்து விடும். முடிவுகள் வகைப்படுத்தப்பட விதத்தை கவனித்து பார்த்தால் நமக்கென யாரோ பொறுப்புடன் அவற்றை ரகம் வாரியாக பிரித்து வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். அப்போது உண்மையிலேயே வியப்பு ஏற்படும்.

கூகுல் தேடல் முடிவுகளை பட்டியலிட பின்பற்றும் முறையவிட இது மாறுபட்டதாக இருப்பதும் புரியும்.முடிவுகளின் ரகங்களை பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் நிகழலாம்.ஒன்று நம்க்கேற்ற வகையை தேர்வு செய்து அந்த வகை முடிவில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.பிர வகைகளை காணும் போது நாம் தேட முற்பட்டதை தவிரவும் விஷயங்கள் இருப்பதை தெரிந்து கொள்வது இரண்டாவதாக நிகழும்.

உதாரணமாக சச்சின் என தேடினால் தேடல் முடிவுகள்,சச்சின்,2011,இந்தியா,கிரிக்கெட்,செய்திகள்,அறிமுகம் என்றெல்லாம் வகைபடுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.கிரிக்கெட் வீரர் சச்சினை பற்றிய தகவல் தேவை என்றால் கிரிக்கெட் அல்லது சச்சின் மீது கிளிக் செய்ய வேண்டும்.2011 ல் கிளிக் செய்தால் இந்த ஆண்டின் சச்சின் தொடர்பான் செய்திகள் வருகின்றன.எந்த வகையான செய்தி தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அப்படியே சச்சின் கோனா என்ற பெயரில் ஒரு புகைப்பட் நிபுணர் இருப்பதையும்,சச்சின் அகர்வால் என்ற பெயரில் சாப்ட்வேர் நிபுணர் இருப்பதையும் காண முடிகிறது.

கூகுலிலேயே கூட இத்தகைய முடிவுகளை காணலாம்.அதோடு துணை குறிச்சொற்களை இணைத்து கொண்டு தேடலாம்.ஆனால் ஹிலியாட் நம்மிடம் இந்த பணியை விடாமல் சுயமாக செய்கிறது என்பதோடு வகைப்படுத்தல் முற்றிலும் இயற்கையாக அமைந்திருக்கிறது.

பல்வேறு குறிச்சொற்களை தேடிப்பார்க்கும் போது இதனை தெளிவாக உணரலாம். வகைப்படுத்தல் ஒரே மாதிரியாக இல்லாமால் குறிச்சொற்களின் தன்மைக்கேற்ப அமைக்கின்றன.

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கான முடிவுகளை தேடினால் ,டிவிட்டர்,அப்டேட்கள்,பாலோ,சோஷியல் என முடிவுகளை வகைப்படுத்தபடுவதை பார்க்கலாம். எல்லாமே டிவிட்டரின் உள்ளடக்கம் சார்ந்தவை.

அதே போல தமிழ் என்று தேடினால் மக்கள்,பேச்சு,தமிழர்கள் என தமிழ் மொழி சார்ந்த வகைகளை பார்க்க முடிகிறது.கூடவே திரைப்படம் ,பாடல்கள் போன்ற வகைகளும் இடம் பெறுகின்றன.

ரஜினி என தேடும் போது சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த என்னும் வகை முதலில் வருகிறது. தொடர்ந்து செய்திகள், நடிகர், ரசிகர்கள், பாடல்கள், சூப்பர்ஸ்டார் போன்ற ரகங்கள் தோன்றுகின்றன. ஆக வகைப்படுத்தல் புத்திசாலித்தனமாகவே நிகழ்கின்றன.

தேடல் அனுபவத்தை மெருகேற்றித்தரும் புத்திசாலித்தனம்.

வகைகள் விலக்கி முழு பட்டியலையும் பார்க்கும் வசதியும் உண்டு.நீங்கலும் தேடிப்பாருங்கள்.வித்தியாசம் புரியும்.

தேடியந்திர முகவரி;http://www.helioid.com/


புத்தகங்களை தேடி கொடுக்கும் தேடுபொறி...


புத்தகங்களை தேடி கொடுக்கும் தேடுபொறி - (கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான)


புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி உள்ளது.

இணையதள முகவரி : http://www.saveitt.com

இத்தளத்திற்கு சென்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான் வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும். சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக  புத்தகத்தை தறவிரக்கலாம். Doc, Pdf, PPT,  XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தறவிரக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


வியாழன், 1 செப்டம்பர், 2011

வாட் டூ யு லவ் - WDYL (What Do You Love )


     
கூகிள் சுமார் 60 க்கு மேற்பட்ட ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. கூகிள் தனது முகப்பு பக்கத்தில் தான் வழங்கும் பிரதான சேவைகளை வழங்கியுள்ளது . ஜிமெயில் , YOUTUBE , கூகிள்+, பிளாக்கர் , என பலவற்றை கொண்டிருக்கிறது . 
 
        நீங்கள் கூகிள் தேடுதளம் மூலம் படங்கள் , வீடியோ க்கள் என்பவற்றை இணையதளங்கள் என்பவற்றை தேடல் செய்ய முடியும் . கூகிள் வழங்கும் தயாரிப்புக்களை தேடி பெற WDYL (What Do You Love  ) என்ற தளம் கூகுளால் செயற்படுத்தபடுகிறது; 


      இதன் மூலம் ஒரு பக்கத்தில் ஒரே நேரத்தில் நீங்கள் தேடும் விடயம் தொடர்பான கூகுளின்  அனைத்து தயாரிப்புக்களையும் பெற முடியும்.
 
   தளத்தில் சென்று தேடும் சொல்லை டைப் செய்து இதயம் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடிய சொல்லோடு தொடர்புடைய படங்கள்,புத்தகங்கள் ,வீடியோக்கள்,இன்னும் பல வற்றை காண முடியும்; 
 

 
 
 
 
 
 
 
 
தளமுகவரி http://www.wdyl.com/#