வெள்ளி, 28 ஜனவரி, 2011

கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !



தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.


நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.


தீமை  செய்தவனை  மறந்து  விடு.


எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.


வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.

ஆணவமும்,  அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.

அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.

சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.

தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.

இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.

நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.

முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.

சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.

சிறு  வயதில்  வரவு  வையுங்கள்.  பெரிய  வயதில்  செலவளிங்கள்.

நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.

வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.

அருங்குறள்  1330-ம்  கடலளவு.  அதன்  முன்  உலகம் கடுகளவு.

வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.

எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.

வாழ்வில்  துணிவு   வேண்டும்.

விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.

காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.

வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.

திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.

புதன், 26 ஜனவரி, 2011

அருமையான மென்பொருள் - வீடியோக்களை தரவிறக்கம் செய்ய


வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
 
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய தளங்கள்:
Youtube

Dailymotion

Vimeo

Google videoo

Yahoo video

Megavideo

Koreus

Tubewatcher

Msn video

Video2brain

Allocine

Myspace

123video

Nothingtoxic

Reuters

Fightdump

Stupidvideos.us

Nationalgeographic

Nakedfunny

Funnyhub

Extremefunnyhumor

2.0television

Alcachondeo

Allabout-sp

Alloclips

Alpvideo

Amnt.vox

Archiwumjp2

Autsch

Bastardidentro

Billthechief

Bio-alive

Blink.dagbladet

Cheezyclips

City-tube

Clipmania

Comegetyousome

Depechemode

Docler

Dotsub

Educatedearth

Eenews

Elrella

Escapistmagazine

Eurosport

Flm

Freaknfunny

Freepiatutorials

Freevlog

Funnyplace

Funny-pranks

Gamevideos

Gprime

Guitarworld

Hispapolis

Ibravo

Iclips

Ishare.rediff

Japanesejunction

Jaycut

Jazzcorner

Jwak

Khanapakana

Kidstube

Killerchops

Kwhow.swpark

Koreanmv

Koreanmv

Learnerstv

Martialarm

Ma-tvideo.france2

Mojoflix

Movie-worlds

Mpora

Mults.spb

Mults.spb

Musiconvideo

Mymusclevideo

News.bbc

No-video

Openforum

Planet-scicast

Plusfortquelatele

Popuplace

Qik

Realmilitaryflix

Salsadynasty

Shinee

Siegener-zeitung

Smotri

Songpull

Spikedhumor

Thejesustv

Thetartcart

Tinypic

Toilette-humor

Totallycrap

Uncutvideo

Vampirefreaks

Video.haberturk


Video.libero

Tvmag

Vidmax

Virgin17

Vision.ameba

Vkadre

Westindiantube

Worldchallenge

1001filmpjes

13gb

510video

Abrutis

Abum

Afriville

Akilli

Americanidol

Aniboom

Archive

Atom

Banglatv

Bboytube

Bendecho

Bet

Bigtreff

Blackbottom

Blastro

Blip

Bofunk

Bolt

Boreme

Break

Breaktaker

Brickfist

Broadcaster

Buzzhumor

Castpost

Casttv

Ceknito

Chefkoch

Clip4e

Clipfish

Clipjunkie

Clipser

Clips-music

Clipstr

Collegeafterhours

Collegehumour

Collegeslackers

Crackle

Crunchyroll

Current

Dailyhaha

Dalealplay

Danerd

Dekhona

Disclose

Divxstage

Dogo

Dorks

Drummerworld

Dumpalink

Dumpert

Ebaumsworld

Eblogx

Ejb

Elpolvorin

Esnips

Evilchili

Evisor

Evtv1

Expotv

Eyeka

Eyespot

Fairyshare

Feelstupid

Fischer-av-medien

Fishfever

Floobs

Flukiest

Fquick

Freecaster

Freeride.se

Freestreamtube

Frozenhippo

Fuhnee

Funatico

Funmansion

Funnyjunk

Funnyordie

Funny-videos

Garagetv

Ghettotube

Godofhumor

Gooclip

Gorillafights

Greekclips

Guba

Heavy

Helpfulvideo

Holylemon


Humour

Humpingfrog

I-am-bored

Intellipoker

Jackassworld

Jokeroo

Justforlaughs

Kaouenn

Kathtube

Kewego

Killsometime

Kontraband

Lelombrik

Lemonzoo

Lescocos

Lesdebiles

Liveleak

Lulu

Milliyet

Miloyski

Motorsportvideo

Movie2k

Movielab

Movshare

Movshare

Msnbc.msn

Mtbmovies

Musictend

Myspass

Myswitzerland

Mytaratata

Myvideo.at

Myvideo.ch

Myvideo

Needlaugh

Noob.us

Novamov

Onlinecinema

Overstream

Photobucket

Pokerstrategy

Pokertube

Porkolt

Rcmovie

Reason

Revver

Road90

Rofl

Rutube

Schooltube

Sevenload

Shockinghumor

Spike

Stage264

Stagevu

Streetfire

Sunvideos

Supervatube

Tagtele

Tangle

Tetesaclaques

Theuniversitytube

Tooshocking

Toxicjunction

Trilulilu

Truetube

Tudou

Tv3.cat

Veoh

Vh1

Videojug

Videosadd

Vidics

Waarbenjij

Web

Wideo

Wimp

Wipido

Wwe

Xfire

Youku

Yourdailymedia

Youreporter

Youtubeislam

Zippyvideos

Xpock

Xtrarmal

Youtube-piy

Zubble



இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் , இந்த மென்பொருள் மூலமாக தரவிறக்கம் செய்ய முடியும்.

சிறந்த டவுன்லோட் இணையதளம்... FILEHIPPO


  *எனக்கு யாஹூ மேசன்ஜெர் வேணும் ஆனால் புதுசு வேணாம் பழைய யாகூ மெசஞ்சர் வேணும் என்பவர்களுக்கும் சரி 

  *நான் என் கணினிக்கு எல்லாம் சிறந்த சாப்ட்வேர் வேணும் சிறந்த சாப்ட்வேர் பற்றி எதில் தெரிந்து கொள்வது என்பவருக்கும் சரி

  *எனக்கு நான் விரும்பும் சாப்ட்வேரின் புது பதிப்பு முதல் பழைய பதிப்பு வரை எல்லாம் ஒரே இடத்தில வேணும் என்பவர்களுக்கும் சரி 

  *நான் சில நேரங்களில் என் சாப்வேரை அப் டேட் செய்ய மறந்து விடுவேன் தானாக எனக்கு நினைவு படுத்த ஒரு நல்ல சாப்ட்வேர் வேணும் என சொல்பவர்களுக்கும் சரி இன்னும் உங்களுக்கு என்ன என்ன வேணும் என நினைக்கிரிர்களோ எலாம் ஒரே இடத்தில கிடைக்கும் இடம்தான்   FILEHIPPO இணைய தளம் இந்த  இணைய தளம் பற்றி பலர் எழுதி இருந்தாலும் மீண்டும் நம் சார்பாக உங்களுக்கு எது மாதிரியான சாப்ட்வேர் வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் ஆண்டி வைரஸ் ,மெசேஜ் சாப்ட்வேர் ,ஆடியோ வீடியோ சாப்ட்வேர் , ஸ்கைப் ,ஜிமெயில் .யாஹூ ,என நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்கும் 



 கூடவே அப் டேட் செக்கர் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியில் நீங்கள் எந்த நேரத்தில் உங்கள் சாப்ட்வேர் அப் டேட் செய்ய வேணும் என்பதை நினைவு படுத்தும் 





  உங்கள் கணியில் புக் மார்க்கில் வைக்க வேண்டிய இணைய தளம் 

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!






பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், "காட்டிராக்ட்' என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இப்போது பல நவீன கண் புரை அறுவை சிகிச்சை முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. "போகோயெமல்சிபிகேஷன்' எனும் முறை மூலம், முழுமையாக கண் புரையை நீக்கி விடலாம்.

இந்த முறையில், தையல் போடுவதில்லை மற்றும் வெறும் ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை நிறைவு பெறும். மேலும், தையல் இல்லாத முறைகள் கையாளப்படுகின்றன. இதை, "மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை '(MICS) என அழைப்பர். முன்காலத்தில், ஒருநாள் மருத்துவமனையில் தங்கி, அறுவை சிகிச்சை செய்வது போல், இப்போது இல்லை. மருத்துவமனையில் தங்காமல், "டேகேர்' முறை மூலம் சிகிச்சை செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்யும்போது, "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' பொருத்தப்படும். இது, நமது இயற்கையான லென்ஸ் செய்யும் வேலையை செய்வதற்காக பொருத்தப்படுகிறது. "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' அல்லது செயற்கை லென்ஸ் அறுவை சிகிச்சை, அனைவருக்கும் பொருந்தும். இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் பல வகைப்படும். "மோனோ போகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வைக்கு உதவும். இதனால், தூரப் பார்வை தெளிவாக தெரியும். கிட்டப் பார்வையும் தெரியும். ஆனால், சிறிய எழுத்துக்களை படிக்கவோ அல்லது பார்க்கவோ, கண்ணாடி தேவைப்படும். "மல்டிபோகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வை மற்றும் கிட்டப் பார்வை இரண்டிற்கும் உதவும். இதனால், அறுவை சிகிச்சைக்கு பின் கண்ணாடி தேவை குறைந்துவிடும். கண் புரை அறுவை சிகிச்சையில் தேவைப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் வகை, ஒருவரின் கண்களின் தன்மை மற்றும் வயது போன்றவையை மனதில் கொண்டு மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர். பெரும்பாலும், வயதானவர்களுக்கு மட்டும் தான் கண் புரை வரும் என்றாலும், குழந்தைகள், இளம் பருவத்தினர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. பிறவி நோய், வளர்ச்சி வேறுபாடு மற்றும் ஊட்டச்சத்து அல்லது ரசாயன வேறுபாடு காரணமாகவும், பிறக்கும் குழந்தைக்கும் இது வரலாம். கண்களில் அடிபடுவதாலும், கண் புரை வரலாம். "யுவியைட்டிஸ்' எனப்படும் கண் நோய், நீண்ட காலமாக குணப்படுத்தாமல் இருந்தாலும், கண் புரை ஏற்படும். வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் வரலாம். எதுவாக இருந்தாலும், கண் புரை நோய் சிறு வயதில் வந்தால், உடனே சிகிச்சை செய்வது நல்லது. அறுவை சிகிச்சைக்கு முன், நீர்ப்பை நிலை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், கருவிழியின் செல் நிலை, கண் அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகள் போட வேண்டும். சிலருக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கண்ணாடி பவர் வருவது உண்டு. அவ்வாறு உள்ளவர்கள், கண்ணாடி அணிய வேண்டும்.

மேலும் தொடர்புக்கு:

ராதா ராணி: 98400-49349
பத்மப்ரியா: 98414-33162
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை,
19, கத்தீட்ரல் சாலை,
சென்னை-86. 044-28112811.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில் : Aviary



உங்கள் புத்தாக்க சிந்தனையை மெருகேற்ற ஒரு அசத்தலான தளத்தை அறிமுகம் செய்கிறேன். Aviary என்பது தளத்தின் பெயர். இசை, புகைப்படம், வண்ணம், வெக்டர், ஒலி போன்ற எட்டுவிதமான அம்சங்களை ஆன்லைனில் எடிட்டிங் செய்யலாம். உங்கள் உலவியின் உள்ளேயே இவை அனைத்தையும் இயக்க முடிவதால், எல்லா இயங்குதளங்களிலும் அப்படியே பயன்படுத்தலாம்.

அசத்தலான எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில்

அசத்தலான எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில் உங்கள் இணைய உலவியில் Aviary தளத்தை திறந்து அப்படியே பயன்படுத்தலாம். எந்தவித மென்பொருளையும் தரவிறக்கி, நிறுவவேண்டிய அவசியமும் இல்லை. அடோபி ப்ளெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இவை. அனைத்தும் அசத்தலான பல்லூடக நுட்பங்கள். நீங்கள் இசை விரும்பியாகவோ, புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதுமைப் புயலாகவோ இருப்பின் உங்களுக்கான அசத்தல் தளம் இது என்பது மிகையாகாது.

இணையதள முகவரி : http://goo.gl/YhK13
 
Virtual DJ

காணொளி வீடியோக்களையும், எம்பி 3 இசையையும் இணைத்து கலக்கல் கலவையாக புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) ஒரு மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : வெர்ச்சுவல் டி ஜே

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : 

வெர்ச்சுவல் டி ஜே இசை விரும்பிகளான டிஸ்க் ஜாக்கிகள் மட்டுமல்லாது பொழுது போக்காக வீட்டில் பயன்படுத்துவோர்க்கும் உகந்தது இது. வணிக ரீதியல்லாத வீட்டுப் பயன்பாடானது (Non Commercial) முற்றிலும் இலவசமானது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.

கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம். யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும். பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/aSj8o

திங்கள், 24 ஜனவரி, 2011

ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் அழகான பவர்பாயிண்ட் ( Powerpoint Presentation)

அலுவலக வேலைகள் முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரை  அனைத்தையுமே தற்போது அழகான பவர்பாயிண்ட் பிரசண்டேசனாக உருவாக்கி அனைவரிடமும் காண்பிப்போம் ஆனால் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான் ஆம் ஆன்லைன் மூலம் 280-க்கும் மேற்பட்ட பவர்பாயிண்ட் டிசைனில் இலவசமாகவே உருவாக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆன்லைன் மூலம் பவர்பாயிண்ட் presentation எளிதாக அதுவும் சில நிமிடங்களில்  நமக்கு பிடித்த டிசைனில் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://280slides.com

இந்ததளத்திற்கு  Try it Now ,Free என்ற பொத்தானை சொடுக்கி தொடங்கலாம் அடுத்து வரும் திரையில் எளிதாக நமக்கு தேவையான Slide மற்றும் Background மற்றும் Slide போன்றவற்றை எளிதாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பவர்பாயிண்ட் பிரண்டேசன் உருவாக்கி முடித்ததும் அதை நம் கணினியில் சேமித்தும் வைக்கலாம். ஆன்லைன் மூலம் எளிதாக நண்பர்கள் மற்றும் Group -களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் உள்ள மேலும் சிறப்பம்சம் என்ன வென்றால் நாம் உருவாக்கும் பவர்பாயிண்ட் பிரசேண்டேசனை உலாவி மூலம் இயக்கி பார்க்கும் வசதியும் இருக்கிறது. மாணவர்கள் முதல் பிஸினஸ் பிரஜெக்ட் செய்யும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

புளுடூத்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.

பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை.

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன.

மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.

கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம்.

அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம்.

உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

சேப் மோட் (விண்டோஸ்) ஏன் ? எதற்காக ?


மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.

குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.

உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.

இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.


1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.

8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.

நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.


சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.

அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.

இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.

ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.

படங்களை இலவசமாக வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.


நம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான படங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக பதிவேற்றலாம். நம்முடைய தளத்தில் படங்களை எங்கு வேண்டுமோ அங்கு எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படங்களை பதிவேற்ற பல இணையதளங்கள் இருந்தாலும் சில இணையதளங்களில் நாம் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள் ஒரு சில நாட்களில் தானாகவே நீக்கப்பட்டுவிடும் இந்தப் பிரச்சினையை சரிசெய்வதற்காவும், வேகமாக படங்களை பதிவேற்றம் செய்வதற்கும் உதவியாக நமக்கு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://fumpr.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம்   Choose என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 5 படங்களை நாம் இந்தத்தளத்தில் மூலம் இலவசமாக host செய்யலாம். எத்தனை படங்களை Upload செய்ய வேண்டுமோ அத்தனையும் தேர்ந்தெடுத்து கொண்டு Upload என்ற பொத்தானை அழுத்தி எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் பதிவேற்றம் செய்யலாம். அடுத்து வரும் திரையில் நமக்கு ஒவ்வொரு படத்துக்கும் உள்ள Image url நமக்கு கிடைக்கும் இதிலிருந்து image url முகவரியை காப்பி செய்து நம் தளத்தில் எங்கு தேவையோ அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம். image upload சேய்ய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

செட்டிங்ஸ் ( GPRS )


இணைய வசதி இன்று சின்னஞ்சிறு கிராம் வரை பரவியுள்ளது, இதற்கு காரணம் மொபைல் போன் வசதி ஆகும். இந்த மொபைல் போன்களின் துணைக்கொண்டு இணையப்பக்கங்களை நம்முடைய மொபைல் போன்களில் பார்வையிட முடியும். இந்த இணைய வசதியினை பெறவேண்டுமெனில்  நம்முடைய மொபைல் போனில்  GPRS  வசதி இருக்க வேண்டும். மேலும் அதில் இணைய வசதியானது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர். அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு சில பொபைல் புரவைடர்கள் இந்த இணைய வசதிகளை அளிக்கிறனர். 

1.Airtel









Airtel Live settings

Account Name Airtel live
Access Point Name airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

Airtel Mobile Office settings  

Account Name : Mobile Office
Access Point Name airtelgprs.com
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

2.Vodafone 










Vodafone Live GPRS settings

Account Name Vodafone Live live
Access Point Name portalnmms
Username
Password
Proxy server Address 10.10.1.100
Proxy Port 9401
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

3.Aircel

Aircel GPRS settings

Account Name Aircel
Access Point Name aircelgprs.pr (postpaid customers use aircelgprs.po)
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

Aircel PockerInternet settings

Account Name Aircel
Access Point Name aircelwap.pr
Username
Password
Proxy server Address 192.168.35.201
Proxy Port 8081
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


4.Idea










Idea GPRS settings

Account Name idea_gprs
Access Point Name imis
Username
Password
Proxy server Address 10.4.42.15
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://wap.ideafresh.com
Idea Internet Settings

Account Name idea_internet
Access Point Name internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
5.Tata Docomo




Tata Docomo GPRS settings

Account Name tata docomo internet
Access Point Name tata.docomo.internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://internet.tatadocomo.com
Tata Docomo Dive In Settings


Account Name tata docomo dive in
Access Point Name tata.docomo.dive.in
Username
Password
Proxy server Address 10.124.94.7
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://divein.tatadocomo.com
  
6.Reliance

Reliance GPRS settings

Account Name smartnet (smartwap for wap users)
Access Point Name smartnet (smartwap for wap users)
Username
Password
Proxy server Address 97.253.29.199
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


இனி நீங்களே உங்களுடைய மொபைல் போனில் செட்டிங்குகளை உருவாக்கி மொபைல் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடவேண்டும்.
குறிப்பு: உங்களுடைய சிம்கார்டில் GPRS வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சனி, 15 ஜனவரி, 2011

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் , பதிவுலக நண்பர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள்  நல் வாழ்த்துக்கள் ...






வியாழன், 13 ஜனவரி, 2011

IP Address - ஆப்லைனில் சுலபமாக கண்டறிய (இணைய தளங்களுக்கான)

.இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன் மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம் திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்
  • இதற்கு எந்த மென்பொருளும் இணைக்க தேவையில்லை. எந்த இணையதளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை நம் கணினியிலேயே செய்து கொள்ளலாம்.
  • இதற்கு முதலில் உங்கள் டாஸ்க்பாரின் START க்ளிக் செய்து அடுத்து RUN க்ளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் cmd என்று டைப் செய்து OK கொடுத்து உள்ளே செல்லுங்கள். 
  • இப்பொழுது உங்களுக்கு comand prompt விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் நீங்கள் ping www.google.com என்று கொடுத்து என்ட்டர் தட்டவும். 

  • என்ட்டர் கீயை அழுத்தியவுடன் உங்களுக்கு கூகுள் தளத்திற்கான ஐ.பி எண் வந்திருக்கும்.
  • நான் படத்தில் காட்டியுள்ளதை போல உங்களுக்கு ஐ.பி எண் வந்திருக்கும். உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் இந்த ஐ.பி எண்ணை கொடுத்து என்ட்டர் கீயை அழுத்தினால் உங்களுக்கு கூகுள் தளம் ஓபன் ஆகும். 
  • இதே முறையில் நீங்கள் தேவையான தளத்தின் ஐ.பி எண்ணை கண்டறிந்து ஓபன் செய்து கொள்ளலாம்.