வியாழன், 13 ஜனவரி, 2011

IP Address - ஆப்லைனில் சுலபமாக கண்டறிய (இணைய தளங்களுக்கான)

.இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன் மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம் திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்
  • இதற்கு எந்த மென்பொருளும் இணைக்க தேவையில்லை. எந்த இணையதளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை நம் கணினியிலேயே செய்து கொள்ளலாம்.
  • இதற்கு முதலில் உங்கள் டாஸ்க்பாரின் START க்ளிக் செய்து அடுத்து RUN க்ளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் cmd என்று டைப் செய்து OK கொடுத்து உள்ளே செல்லுங்கள். 
  • இப்பொழுது உங்களுக்கு comand prompt விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் நீங்கள் ping www.google.com என்று கொடுத்து என்ட்டர் தட்டவும். 

  • என்ட்டர் கீயை அழுத்தியவுடன் உங்களுக்கு கூகுள் தளத்திற்கான ஐ.பி எண் வந்திருக்கும்.
  • நான் படத்தில் காட்டியுள்ளதை போல உங்களுக்கு ஐ.பி எண் வந்திருக்கும். உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் இந்த ஐ.பி எண்ணை கொடுத்து என்ட்டர் கீயை அழுத்தினால் உங்களுக்கு கூகுள் தளம் ஓபன் ஆகும். 
  • இதே முறையில் நீங்கள் தேவையான தளத்தின் ஐ.பி எண்ணை கண்டறிந்து ஓபன் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக