செவ்வாய், 10 மே, 2011

ஸ்கிரின்ஷாட்டாக மாற்றித்தரும் சேவை...



 

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது.இணைய மொழியில் இதற்கு ஸ்கிரின் ஷாட் என்று பெயர்.

இப்படி இணையதளங்களை ஸ்கிரின் ஷாட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன.நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி.அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் இதுவே சிறந்த வழி.

கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளில் மேற்கோள் காட்டவும் நடுவே புகைப்படமாக இணைக்கவும் ஸ்கிரின் ஷாட்கள் பொருத்தமாக இருக்கும்.

இன்னும் எத்தனையோ பயன்கள் இருந்தாலும் இணையதளங்களை ஸ்கிரின்ஷாட்டாக மாற்றி கொள்வது அத்தனை எளிதல்ல.அதற்கென பிரத்யேக வழிகளையும் குறுக்கு வழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.

வெப்சைட்ஸ் புரோ மற்றும் தம்லைசர் ஆகிய தளங்கள் இணையதள முகவரியை சமர்பித்தால் அவற்றை ஸ்கிரின்ஷாட்டாக மாற்றித்தரும் சேவையை வழங்குகின்றன.

இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டிவிஷாட் இணையதளம்.

டிவிஷாட் இனையதளங்களை கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு ப‌கிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.இதுவே டிவிஷாட்டை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

டிவிட்ஷாட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.எந்த இணையதளத்தை ஸ்கிரின்ஷாட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் ஸ்கிரின்ஷாட் தோற்றம் ரெடி.

இந்த தோற்றத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அப்படியே நமது நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.ஃபிளிக்கர் மற்றும் பிக்காசோ புகைப்பட பகிர்வு சேவை வழியேவும் பகிரலாம்.

அதற்கு முன்பாக இணையதள தோற்றத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தும் கொள்ளலாம்.

இணையதளங்களை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல புதிய தளங்களை கண்டு கொள்ளவும் இந்த சேவை உதவுகிறது.அதாவது இந்த தளத்திம் மூலம் பகிரப்படும் தளங்களின் தோற்றம் டிவிட்டர் பதிவுகள் போலவே வரிசையாக தோன்றும் .இந்த பதிவு தொடரை பார்ப்பதன் மூலம் மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பயனாளிகள் வசதிக்காக பகிரப்படும் தளங்கள் தொழில்நுட்பம்,வடிவமைப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

எனவே புதிய தளங்களை தேடிபார்க்க விரும்புகிரவர்கள் இங்கு பகிரப்படும் ஸ்கிரின்ஷாட்களை ஒரு வலம் வந்தால் போதுமானது.

இணையதள முக‌வரி    http://www.tweeshot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக