திங்கள், 1 நவம்பர், 2010

இலவச டாக்டர் நம் உடல் நோய்களுக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்.

 
தினமும் நம் உடலில் புதிது புதிதாக தோன்றும் சிறு நோய்கள் இதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு காணலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து வருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம் குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு நண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல் வரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க நமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.

இவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால் உடனடியாக மருந்தும் கூறுவார்.

இணையதள முகவரி : http://symptoms.webmd.com/symptomchecker இந்தத்தளத்திற்கு சென்று நாம் நோயின் அறிகுறியை கூறினால் போதும் உடனடியாக தீர்வு. உதாரணமாக நமக்கு தலைவலி என்று வைத்துக்கொள்வோம் இங்கு சென்று தலைவலி என்று கூறியவுடன் எந்த நோய் இருந்தால் தலைவலி வரும் என்று ஒரு பெரிய பட்டியலே கொடுக்கிறது. 

அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலி என்று கூறினால் இன்னும் சுருக்கப்பட்டு என்ன நோயாக இருக்கலாம் என்று கூறுகிறது. நோயின் பெயரைக் கூறி தீர்வு தேடலாம். எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை உடனடியாக நோயைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 

மருத்துவத்துறையில் இருக்கும் நம் நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Claw விளையாட்டு வாங்க! விளையாடலாம்

விளையாட எத்தனையோ விளையாட்டுகள் தற்பொழுது வந்து கொண்டிருந்தாலும் சில விளையாட்டுகள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. அப்படியொரு விளையாட்டு தான் Monolith productions நிறுவனத்தின் படைப்பான Claw game ஆகும். வீரதீர சாகசங்கள் இந்த விளையாட்டில் நிறைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு விட்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது.

இந்த விளையாட்டில் 14 நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத்தான் கடந்து செல்ல முடியும். இதுவும் Arcade வகை விளையாட்டு தான். ஒவ்வொரு நிலையிலும் வியக்க வைக்கும் செயல்களும் அற்புதங்களும் பலதரப்பட்ட இடங்களும் உள்ளன. இதில் பலவகை விலங்குகளும் உள்ளன.

மீன், நண்டு, பறவைகள் போன்றவை கேப்டன் கிளாவோடு சண்டையிடுகின்றன. போகும் வழியில் காசுகள், முத்துகள், சிலுவைகள், மண்டை ஓடுகள் சேகரித்துக்கொண்டே செல்லவேண்டும். இறுதியில் 9 முத்துகளை எடுத்தபின்னர் இளவரசியை மீட்கமுடியும்.

Keyboard shortcuts :
ctrl - Attack
z- throw
space - jump
கீழ் உள்ள கோப்பை தரவிறக்கினால் அதிலேயே லைசென்ஸ் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் கீழே தரப்பட்டுள்ளது. இன்ஸ்டால் செய்துவிட்டுவரும் விண்டோவில் Play demo கொடுங்கள். அதில் அந்த லைசென்ஸ் எண்ணை கொடுத்துவிட்டால் போதும்.
நீங்கள் விளையாட்டுக்கு ரெடி.

தரவிறக்க முகவரி : ( License No:839E794F-6A30-4056-92C0-42B5240C252B)
http://digiex.net/attachments/downloads/download-center-2-0/games/1296d1234050471-captain-claw-classic-game-claw_rip.zip