திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சரியான வேலையை ஏஜெண்ட் மூலம் தேடலாம் (இலவசமாக)

 சரியான வேலையை ஏஜெண்ட் மூலம் தேடலாம் ( இலவசமாக )


நம் படிப்புக்கும் அனுபவத்துக்கு ஏற்ற சரியான வேலையை பணச்செலவு இல்லாமல் இலவசமாக ஏஜெண்ட் மூலம்  வேலையைப் பெறலாம். இதைப்பற்றித்தான்.......இந்தப்பதிவு.

நமக்கு தாய் மொழி தமிழ் மட்டும் தான் நன்றாக வரும் , 
ஆங்கிலம் அவ்வளவு தொடர்ச்சியாக பேச வராது ஆனால் 
கணினி புரோகிராம் மொழி நன்றாக தெரியும், பல பிராஜெக்ட் செய்து இருக்கிறேன் என்று பலர் இருக்கின்றனர். இவர்களுக்காக வேலையைத் தேட ஒரு ஏஜெண்ட் இருக்கிறார். 

ஏஜெண்ட் என்றால் என்னவெல்லாம் செய்வாரோ அதை எல்லாம் ஒரு இணையதளம் செய்கிறது. நமக்கு பயோடேட்டா உருவாக்கி தருவதில் இருந்து வேலையை வாங்கி நம் கையில் கொடுப்பது வரை அத்தனை வேலையையும் இந்தத் தளம் செய்கிறது. கூடவே நமக்காக வேலைக்கு ஆள் தேவை என்ற
அறிவிப்பு வந்திருக்கும் நிறுவனத்திற்கு நம் பயோடேட்டாவையும் அனுப்பிவிடுகிறது. நாம் அனுப்ப வேண்டியதில்லை நம் ஏஜெண்ட் அனுப்பி விடுகிறார். பல மென்பொருள் நிறுவனங்கள் மொழிக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான ஆட்களை இதன் மூலம் தேர்ந்தெடுகின்றனர்.

ஆங்கில மொழி பேச முடியாமல் இருக்கும் நம் தமிழ் நண்பர்களுக்கு இந்தத் தளம் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://www.quietagent.com

( Note : பலபேரின் Resume இந்தத்தளத்தில் இருப்பதால் தகவல் திருடப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக செக்யூரிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நீங்கள் Get Security certificate ஒகே கொடுத்தால் பிரச்சினை இல்லாமல் தெரியும். முயற்சித்துப் பாருங்கள். வரவில்லை என்றால் வேறு உலாவியில் பயன்படுத்திப் பாருங்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக