சனி, 28 ஆகஸ்ட், 2010

உங்கள் குழந்தைக்கு விளையாட்டு சார்ந்த கல்வி - ஜிகாம்ப்ரி

உங்கள் குழந்தைக்கு விளையாட்டு சார்ந்த கல்வி - ஜிகாம்ப்ரி

 
இரண்டு வயது முதல் பத்து வயது வரையான குழந்தைகளுக்கான பலவகையான விளையாட்டு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கும்  இலவச மென்பொருள் தொகுப்புதான் ஜிகாம்பரி.  
 
இது லினக்ஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு லினக்ஸ்க்கு முற்றிலும் இலவசமாகவும், விண்டோஸிற்கு  ஒரு சில வசதிகள் மட்டும் கட்டணம் செலுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சில மொழிகளில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதில் குழந்தைகளுக்கு விருப்பமான பல விளையாட்டுகளை கொண்டு கல்வியை கற்றுக் கொடுப்பதால், குழந்தைகள் தானாகவே இதனை இயக்க கற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. 
 
 
பட நினைவாற்றல், பண பரிமாற்றம், எடைகளை சமன் செய்தல், கணிதம், அறிவியல், வரைகலை, சதுரங்க விளையாட்டு என பல பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உங்கள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்குமே.......... 
 


1 கருத்து: