செவ்வாய், 7 செப்டம்பர், 2010

Excel பயன்பாட்டின் அடிப்படைகள் - 1




Excel பயன்பாட்டின் அடிப்படைகள் - 1

 Excel நிறுவப்படும்போது சில விஷயங்கள் Defalut ஆக இருக்கும், அவற்றில் சிலவற்றை நம் தேவைக்கேற்ப மாற்றி வைத்துக்கொள்வது குறித்து, Tools -> Options -> General என்ற பிரிவின் கீழ் அமைந்துள்ள நான்கு குறிப்புகளை இங்கு பார்க்கலாம்,





1. கடைசியாய் பார்த்த கோப்புகள் (Recent files)
நம்மில் பலருக்கு தினசரி அலுவல்களில் தேவைப்படும்
Fileகள் ஐந்து அல்லது ஆறாகத்தான் இருக்கும், ஒவ்வொரு முறையும் Windows explorer மூலமாகவோ File -> Open வழியிலோ குறிப்பிட Folder சென்று File ஐ திறப்பதற்கு பதில், File Menu விலேயே, Recent Files என்ற option உள்ளது. இயல்பில் இந்த இடத்தில் நான்கு கோப்புகளின் பெயர்கள் இருக்கும், இதனை நாம் அதிகபட்சமாக 9 கோப்புகள் (Excel 2007 இல் 50) வரை அதிகரிக்கலாம்

2. புதிதாய் உருவாக்கும் புத்தகத்தின் (workbook) தாள்களின் (worksheet) எண்ணிக்கை

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கோப்பிலும் இயல்பாய் இருப்பது 3 தாள்கள், இதனால் கோப்பின் அளவு (Size) எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை எனினும், அவரவர் தேவையையும் சௌகர்யதையும் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். என்னளவில் எண்ணிக்கை ஒன்று தான், அதற்கு மேற்பட்ட தாள்கள் எரிச்சலை தான் ஏற்படுத்தும், ஆனால் நிதிநிலை அறிக்கை (Budget) தயாரிப்பு போன்ற வேளைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தேவைப்படும் தாள்கள் அதிகமாய் இருக்கலாம். இந்த எண்ணிக்கையை 1 முதல் 255 வரை வைத்துக்கொள்ளலாம், ஆனால் இந்த கட்டுப்பாடு புதிதாய் புத்தகம் ஒன்றாய் உருவாக்கும் போது மட்டும் தான், அதன்பின் எவ்வளவு தாள்கள் வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

3. எழுத்துரு மற்றும் எழுத்தின் அளவு (Font and Font Size)

இயல்பு எழுத்துரு மற்றும் அளவு MS office தொகுப்பில் உள்ள பயன்பாடுகள் ஒவ்வொன்றிலும் மாறுபடும். Excel பொறுத்தவரை இது Arial, 10 point ஆகும். நீங்கள் கையாளும் தரவுகளை பொருத்து இதனை நீங்கள் தகவமைத்துக் கொள்ளலாம் (customize). என்னை பொறுத்தவரை, எழுத்துக்களுக்கு (Text) Verdana எழுத்துருவும், எண்களுக்கு Trebuchet MS எழுத்துருவும் பொருத்தமாய் இருக்கும்

4. கோப்புகள் சேமிக்கும் இடம் (Folder)

நீங்கள் ஒவ்வொரு முறை புதிய கோப்புகளை சேமிக்கவோ (Ctrl + S) , சேமித்த கோப்புகளை திறக்கவோ (Ctrl + O) முயலும் போது My Documents Folderக்குத்தான் செல்லும், இதனை நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட Folderக்கு மாற்றியமைத்து உங்கள் நேரத்தை மிச்சமாக்கலாம்.


கட்டளை (Command) : Tools -> Options -> Genaral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக