திங்கள், 8 நவம்பர், 2010

உலகெங்குக்குமான அவசர உதவி எண்


 
Join Only-for-tamil

ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கப் பட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயணைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும். 

நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு. 

உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாட்டிற்குமான தொலைத் தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும். நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை. நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும். பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கக்கூடும். 

மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் ஒரு சின்ன தகவல்.  உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும். வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது. 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம். நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

1 கருத்து: