செவ்வாய், 9 நவம்பர், 2010

தேசிய வடிவமைப்பு ஆடைகழகம்......என்ஐஎப்டி-ல் நேர்காணல்

 

இலவசத் திறன் மேம்பாட்டு பயற்சிக் கல்விக்கு என்ஐஎப்டி-ல் நேர்காணல்

சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கழகத்தில் (என்ஐஎப்டி) வரும் 10ஆம் தேதி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி கல்விக்கு முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது.

தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகமானது 2010-11ஆம் ஆண்டுக்கு பின்வரும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக் கல்வியை முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் உள்ள என்ஐஎப்டி-இல் வழங்குகிறது.

அதன்படி +2 முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உடைகள் தொழில்நுட்பத்தில் ஒரு பயிற்சி கல்வியும், ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடைகள் ஏற்றுமதி வர்த்தக நிர்வாகத்தில் ஒரு பயிற்சி கல்வியும் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிக் கல்விகளில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினராக இருக்க வேண்டும். அவருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதில் சேர விரும்பும் மாணவர்களின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சிக் கல்விகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 10ஆம் தேதி சென்னை என்ஐஎப்டி-இல் முற்பகல் 10 மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியான மாணவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் ராஜீவ் காந்தி சாலை, தரமணி,  சென்னை-600 113 என்ற முகவரியில் உள்ள தேசிய வடிவமைப்பு ஆடை கழகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 044-2254 2755 தொலைபேசி எண்ணிலும்
academics.niftchennai@gmail.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்   மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக