ஞாயிறு, 31 அக்டோபர், 2010

படுக்கைக் கோடுகளை வேர்டில் போடுவது எப்படி ?

வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.

1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.

2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், சற்று அழுத்தமான நீளக் கோடு கிடைக்கும்.

3. மூன்று ஆஸ்டெரிஸ்க் ( ஷிப்ட்+3 எண்ணுக்கான கீ ) கீ அழுத்தி என்டர் தட்டினால், புள்ளிகள் வைத்த கோடு கிடைக்கும்.

4. டில்டே (கீ போர்டில் முதல் கீ ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி என்டர் அழுத்த, நெளிவு கோடு கிடைக்கும்.

5. ஈக்குவல் என்னும் சமம் என்பதற்கான கீ (பேக் ஸ்பேஸ் கீக்கு முந்தைய கீ, ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி, என்டர் அழுத்த, சிறிய அளவிலான இரட்டைக் கோடு கிடைக்கும்.

இது போல கோடுகள் அமைவது, வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் நமக்குத் தரப்பட்டுள்ளது.  ஆனால் ஒரு சிலருக்கு இந்த கோடு, தானாக அமைவது பிடிக்காது.

ஏனென்றால், சிறிய அளவில் ஏழே ஏழு ஹைபன்களை அடுத்து அடுத்து போட விரும்பினால், போட முடியாது. அது வேர்டால், தானாக முழு நீளக் கோடாக மாற்றிவிடும்.

அப்படியானல் என்ன செய்திடலாம்? வேர்ட் தொகுப்பில் இதனை நிறுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. வேர்ட் 2003 தொகுப்பில்:

டூல்ஸ் மெனுவிலிருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் AutoFormat As You Type  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். பின்னர் Apply As You Type என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

2. வேர்ட் 2007:

முதலில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options  என்பதில் கிளிக் செய்திடுக. அதன்பின் AutoCorrect Options   என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.

பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type   என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. வேர்ட் 2010 தொகுப்பில்:

File  டேப்பில் Help என்பதன் கீழ் Options   என்பதில் கிளிக் செய்திடவும்.

இதன் பின், கிடைக்கும் பிரிவுகளில், இடது பக்கம் கிடைக்கும் பிரிவுகளில், Proofing   என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் AutoCorrect Options  என்ற பிரிவில், AutoCorrect Options   என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.

பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type  என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும்.  பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட்டில்  வெப் டெக்ஸ்ட் ஒட்ட

இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து வேர்டில் ஒட்டுகையில் நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், பாண்ட் மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் ஒட்டப்படும். இது பல வேளைகளில் எரிச்சல் தரும் விஷயம் ஆகும். ஏனென்றால் நாம் டெக்ஸ்ட் மட்டும் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டால் தேவையற்ற இந்த அனைத்து சங்கதிகளையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் விரயமாகிறது. 

இதற்குப் பதிலாக Edit   மெனு சென்று அதில் Paste Special  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து  மீண்டும் அதில் Unformatted Text  கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து காப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நீங்கள் திட்டமிடுகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக