ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ப்ரீ வெப்சைட்! (Free Website)


இலவச வெப்சைட்!  ( Free Website )

இப்போது நாம் பிளாக்குகளில் நம் கருத்துக்களை நம் எண்ணங்களை எழுதி வருகிறோம்.

வியாபாரத்திற்காக நமக்கென்று ஒரு இணையதளம் இருந்தால் நல்லது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதற்கு domain, webhost என செலவு செய்யும் நிலைமையில் இல்லை என்றால்.. அதற்கு இணைய உலகத்தில் பல இலவச இணையதளங்கள் உள்ளன. hpage, weebly, webs, wetpaint, wix....

ஆனால் இவற்றின் முக்கிய குறைபாடு வெப் ஸ்பேஸ். ஆகும். அவற்றின் குறைவான வெப் ஸ்பேசில் நமக்கு தேவையானவற்றை போட இயலாமல் போகலாம். இதன் மேலும் ஒரு குறைபாடு இந்த இணையதளங்களை வடிவமைக்கும்போது இவைகள் தந்துள்ள எடிட்டரில் மட்டுமே வடிவமைக்கலாம். மேலும் இவைகள் தந்துள்ள டெம்ப்ளீட்களை மட்டுமே வடிவமைத்து எடிட் செய்ய முடியும்.

நமக்கு வெப்டிசைனிங் தெரியும் மேலும் நமக்கு ஒரு வெப்சைட் நாம் விரும்பிய பலன்களுடன் நாம் விரும்பியவைகளை விரும்பியவாறு வடிவமைக்க வேண்டும் என்றால், அதுவும் இலவசமாக என்றால் அதற்கும் இடமுள்ளது.


இந்த இணையதளத்தில் வெப் ஸ்பேஸ் அன்லிமிடட் மேலும் பேண்ட்வித் அன்லிமிடட்..
இதை இலவசமாக பயன்படுத்த இரண்டே நிபந்தனைகள்...

1. footer-ல் அவர்களின் லிங்க் விளம்பரம் வரும்
2. நாம் அப்லோட் செய்யும் ஃபைலின் அளவு 1mb-க்கு மேல் இருக்க கூடாது.

நமக்கு வெப் டிசைனிங் தெரிந்தால் எல்லாம் நமக்கு பிடித்தவாறு பல வெப்சைட்டுகளை வியாபார மற்றும் தனிப்பட்ட விசயங்களுக்காக உருவாக்கலாம். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

கவனிக்க: இப்படிப்பட்ட இலவச வெப்சைட்டுகளில் ஒரு நிலையற்ற தன்மை உள்ளது அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை திடீரென நிறுத்திக்கொண்டால் நாம் எதுவும் கேட்கவும் முடியாது. நம் தகவல்களும் அவ்வளவுதான்.. உதாரணம் geocites

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக