புதன், 6 அக்டோபர், 2010

குவின்ட்ரா (quintura) வித்தியாசமான சர்ச் இன்ஜின்...

குவின்ட்ரா வித்தியாசமான சர்ச் இன்ஜின்......






வித்தியாசமானவற்றில் வித்தியாசமானது என்பதை போல, விஷுவல் சர்ச் இஞ்சின்ஸ் என்று சொல்லப்படும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்களில் குவின்ட்ராவை மாறுபட்டது  என்றே சொல்ல வேன்டும்.

வழக்கமான தேடல் முடிவுகள் நீள நிற இணைப்புகளின் பட்டியலாக இடம்பெறுகின்றன அல்லவா?  இதற்கு மாறாக காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் முடிவுகளை வரைபடம் போலவோ ,சித்திரம் போலவே தோன்றச்செய்கின்றன.

வழக்கத்தில் இருந்து மாறுபட்ட அனுபவத்தை தரும் இந்த வகை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. குவின்ட்ராவும் இந்த வகையை சேர்ந்தது தான். ஆனால் குவின்ட்ரா காட்சி ரீதியிலான தேடலில் இன்னொரு பரிமானத்தை தருகிறது.

ஏற்கனவே கூகுல் இருக்க, அதனோடு போட்டியாக எண்ணற்ற தேடியந்திரங்கள் இருக்க மேலும் ஒரு புதிய தேடியந்திரம் எதற்கு? என கேட்கலாம். குவின்ட்ராவே இந்த கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் அளிக்கிறது.

தற்போது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தேடியந்திரத்தில் எந்த பிரச்ச்னையும் இல்லை. கூகுலோ, யாஹூவோ, நீங்கள் தேர்வு செய்துள்ள தேடியந்திரம் எதுவானலும் இணையத்தில் இருந்து தகவல் தேடித்தரும் பணியை அது திருப்திகரமாகவே செய்வதாக நினைக்கலாம். அவற்றில் இருந்து விலகி வர வேண்டும் என்றும் நாங்கள் கருதவில்லை. இப்படி தான் குவின்ட்ரா சொல்கிறது.

எல்லாம் சரி, அப்புறம் புதிய தேடியந்திரமான குவின்டாரவிற்கான தேவை தான் என்ன?

மாறுபட்ட வகையில் தேட வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால் அதற்காக தான் எங்கள் தேடியந்திரம் என்கிறது குவின்ட்ரா.

மாறுபட்ட தேடல் என்று குவின்ட்ரா குறிப்பிடுவது காட்சிரீதியிலாக முடிவுகளை முன் வைப்பதை தான். காட்சிரீதி என்பது வெறும் தோற்றத்தில் மட்டுமல்ல. முடிவுகளை பெறும் விதத்தில் உதவுவதிலும் தான்.
தேடல் முடிவுகளை வழங்கும் போது பொருத்தமான குறிப்பு சொற்களை தோன்ற செய்து அவற்றின் மூலமாக தகுந்த முடிவுகளை பெற உதவுகிறது குவின்ட்ரா. இதற்காக தேடலில்  பயன்படுத்தும் குறிச்சொல்லுடன் தொடர்புடைய குறிப்புகளை(டேக்ஸ்) வரைபடமாக காண்பித்து அவற்றின் மூலம் தேடலில் வழி காட்டுகிறது.

மாமூலான குறிச்சொல் சார்ந்த தேடலில் இருந்து இந்த முரை முற்றிலும் மாறுபட்டது, மேம்பட்டதும் என்பது குவின்ட்ராவின் வாதம்.

வழக்கமாக எப்படி தேடுகிறோம்.பொருத்தமானது என நாம் நினைக்கும் குறிச்சொல்லை டைப் செய்தால் அதற்கான தேடல் பட்டியல் வந்து நிற்கிறது. அவற்றில் இருந்து தேவையான இணையபக்கத்தை கிளிக் செய்து பார்க்கிறோம்.

இங்கு தான் குவின்டரா மாறுபடுகிறது.

குவுன்டாராவில் குறிச்சொல்லை டைப் செய்ததுமே தேடல் வரைபடம் ஒன்று தோன்றுகிறது. அதில் நடுநாயகமாக தேடல் பட்டியல் இருக்கும். அந்த பட்டியலுக்கு மேல் நட்சத்திர கூட்டம் போல சொற்கள் சிதறிக்கிடக்கும். அந்த சொற்கள் தான் உங்களுக்கான வழிகாட்டி.

அந்த சொற்கள் எல்லாமே நீங்கள் தேடும் பொருளுக்கு பொருத்தமானவை. உங்கள் தேடலை பட்டைத்தீட்டி கூர்மையாக்க கூடியவை.பொருள் பொதிந்த பார்வை என்பதை போல குவின்டராவின் தேடலை பொருள் பொதிந்தது என்று சொல்லலாம்.

அதாவது தேடுபவரின் நோக்கத்தை புரிந்து கொண்டு அந்த திசையில் இணையத்தில் செல்வதற்காக குவின்ட்ரா வழிகாட்டுகிறது. இதனை புரிந்து கொள்ள எளிமையான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.விண்டோஸ் என்னும் சொல்லை டை செய்து தேடும் போது அநேகமாக விண்டோஸ் என்றால் மைக்ரோசாப்டின் மென்பொருளான விண்டோஸ் முடிவுகள் தான் மேலோங்கி நிற்கும். ஆனால் நீங்கள் தேடுவது வீட்டின் ஜன்னலாக இருக்கும் பட்சத்தில் தேடியந்திரம் அதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

இது போன்ற நேரத்தில் நீங்கள் விண்டோசுடன் ஜன்னல் என்ற வார்த்தையும் சேர்த்து டைப் செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் தேடல் பட்டியல் சரியானதாக இருக்கும்.

ஆனால் குவின்டராவில் இந்த தொல்லையே கிடையாது.விண்டோஸ் என்ற பொருளுடன் தொடர்புடைய பதங்களை அதுவே யூகித்து சொல் மேகங்களாக காட்டி விடுகிறது. அவற்றில் இருந்து தேர்வு செய்து கிளிக் செய்தால் அந்த பதத்திற்கு பொருத்தமான தேடல் முடிவுகளை பெற முடியும்.

பொதுவாக இணைய தேடலில் நிபுணத்துவம் மிக்கவர்கள் செய்யக்கூடியது தான் இது. கொஞ்சம் சிக்கலான தேடல் என்றால் மைய சொல்லோடு வேறு சில பதங்களையும் சேர்த்து தேடல் முடிவுகளை கூர்மையாக்குவது உண்டு. குவின்டரா இந்த வேலையை சுலமாக்குவதோடு புத்திசாலித்தனமாகவும் மாற்றுகிறது.

குவின்ட்ராவே இணையான பதங்களை முன்வைப்பதால் இணையவாசிகளூக்கான வேலை மிச்சம். அதோடு இந்த சொல்லை சேர்த்து அடித்தால் பொருத்தமாக இருக்குமா? இல்லை வேறு சொல்லை நாட வேண்டுமா என்று அலைபாய வேண்டிய அவசியமில்லை.அதிலும் புதிய தலைப்பிலான பொருளை தேடும் போது இப்படி வழிகாட்டப்படுவது பேருதவியாக இருக்கும். சில நேரங்களில் இதன் மூலம் முற்றிலும் எதிர்பாராத புதிய திசையில் தேடலை மேற்கொள்ளலாம்.

குறிச்சொல் அடிப்படையில் இணையத்தை தேடி முடிவுகலை பட்டியலிடாமல்தேடப்படும் நோக்கம் சார்ந்து தேடித்தர முயல்வதே தனது சிறப்ம்சம் என்று குவின்ட்ரா கருதுகிறது.

கூகுலின் சிறப்பு வேகம் என்றால் குவின்டராவின் சிறப்பு நேரம் எடுத்து கொண்டாலும் மனதில் இருக்கும் பொருளுக்கேற்ற முடிவுகளை எடுத்து தருவது தான்.

இணையவாசிகள் குவின்டாரா காட்டும் தளங்களுக்கான பதங்களை சேர்த்தோ அல்லது நீக்கியோ தேடலை மேம்படுத்திக்கொள்ளலாம். தேடலை சேமித்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

பாதுகாப்பான தேடலுக்காக சிறுவர்களுக்கென்று தனி வடிகட்டல் வசதியும் இருக்கிறது.

http://www.quintura.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக