வியாழன், 3 பிப்ரவரி, 2011

File library ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும்

கணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான கோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு இலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த கோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப்புகளை பிறருக்கு பகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://fliiby.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எதைப்பற்றி தகவல்கள் வேண்டுமோ அதை கொடுத்து டாக்குமெண்ட் அல்லது ஆடியோ,வீடியோ அல்லது Zip போன்ற எந்த கோப்பு வகைகளில் தேடவேண்டுமோ அதைக்கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் உடன் வரும் திரையில் நாம் தேடிய டாக்குமெண்ட் பல கிடைக்கிறது. மாணவர்களுக்கும் பிஸினஸ் செய்யும் நண்பர்களுக்கும் முக்கிய டாக்குமெண்ட் மற்றும் பிராஜெக்ட் ரிப்போர்ட் பற்றிய தகவல்களை இந்ததளத்தில் பல கிடைக்கிறது.இது மட்டுமின்றி பிளாஷ் அனிமேசன் கோப்புகளை கூட நாம் தேடி தரவிரக்கலாம். அனைத்து துறையினருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக