இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):
- அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
- குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
- பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV
1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]
2.கட்டமைப்பு (Network)
2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.

4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
- மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
- அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
- நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
- குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக