குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட........
எக்ஸெலில் சிலசமயம் workbookகளை பலருக்கு விநியோகித்து அவர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற வேண்டியிருக்கும்.
நாம் விநியோகிக்கும் ஒர்க்புக்கை பூட்டி (protect) அனுப்ப வேண்டியிருக்கும். ஒர்க்புக்கில் ஏற்கனவே உள்ள தகவல்களை (formatting, data போன்றவற்றை)
ஆனால் ஒருசில செல்களில் மட்டும் மற்றவர்களிடமிருந்து தகவல் சேகரிக்க வேண்டியுமிருக்கும்.
அதாவது ஒரு வொர்க்-ஷீட்டில் குறிப்பிட்ட செல்களை மட்டும் அடுத்தவர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதை இப்படிச் செயல்படுத்தலாம்:
1. எந்த செல்களை அடுத்தவர் பயன்படுத்த அனுமதிக்க நினைக்கிறீர்களோ, அவைகளை செலக்ட் செய்து கொள்ளவும். (உதாரணமாக கீழ்க்கண்ட படத்திலுள்ள மஞ்சள் நிறத்திலுள்ள செல்களை தேர்ந்தெடுக்கிறோம்)
1.2. ஒரே ஒர்க்-ஷீட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ள செல்களை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் Ctrl அழுத்திக் கொண்டு செல்களை சுட்டி மூலம் செலக்ட் செய்யலாம்
2. மெனுவில் உள்ள Format - Cells போகவும்
3. Format Cells பெட்டியில் Protection பக்கத்தை தேர்வு செய்யவும்
4. அங்குள்ள Locked தேர்வுபெட்டியின்(checkbox) டிக் மார்க்கை நீக்கவும் (அதாவது uncheck)
5. பின் Tools -> Protection -> Protect Sheet சுட்டவும்
6. பின்வரும் Protect Sheet பெட்டியில் Select locked cells என்ற checkboxயை uncheck செய்யவும்
இப் போது இந்த ஒர்க்-ஷீட்டில் நாம் தேர்வு செய்த செல்களில் மட்டும் பயன்படுத்த முடியும். மற்ற செல்களை தேர்வு கூட செய்யமுடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக