புதன், 8 செப்டம்பர், 2010

இலவச எழுத்துக்கள் டவுண்லோட்...........




நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.


ஆனால் இணையத்தில் இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில் கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள் விண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற  மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும் எழுத்துவகைகளையும்  தருகின்றன.  இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1.www.fawnt.com :  இந்த தளம் 9348 எழுத்து வகைகளுக்கான கோப்புகளைக் கொண்டுள்ளது. டிசைனர், டெவலப்பர்கள் மற்றும் இணையப் பக்கங்கள் அழகாக அமைய வேண்டும் என விரும்புபவர்கள் இந்த தளம் சென்று எழுத்து வகைகளைப் பெறலாம்.


2.www.abstractfonts.com :  இதில் 11,849 எழுத்து கோப்புகள் உள்ளன. நம் தேவைக்கேற்ப எழுத்து வகைகளைத் தேடுவதற்கு நல்ல யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. 


3. www.freefonts.co.in : இந்திய இணைய தளம். இதில் 12,000க்கு மேற்பட்ட எழுத்துவகைக் கோப்புகள், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தரப்பட்டுள்ளன. 


4. www.dafont.com :  இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துவகைகள் கிடைக்கின்றன. அனைத்தும் இலவசமே. எளிதாகத் தேடி அறிந்து எடுத்துக் கொள்ள சிறப்பாக வழி காட்டும் மெனு உள்ளது.


5. www.free–fonts.Com : இது 3ல் காட்டப்பட்டுள்ள தளம் அல்ல. முகவரியினை நன்கு கவனிக்கவும். இது எழுத்துவகை கோப்புகளுக்கு ஒரு தேடல் சாதனம் போலச் செயல்படுகிறது. இதன் தகவல் கிடங்கில் 55 ஆயிரம் எழுத்துவகைகளுக்கு மேல் காட்டப்படுகிறது. ஆனால் பிரவுஸ் செய்து பெற முடியவில்லை. எழுத்து வகையின் பெயரை நினைவில் வைத்துத் தேட வேண்டும்.


6.http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்துவகை கோப்புகளைக் கொண்டு, அவற்றைத் தரம் மற்றும் வகை பிரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு எழுத்துவகையும் இலவசமா இல்லையா என்று முதலிலேயே காட்டப்படுகிறது.  மேலே கூறப்பட்ட தளங்களிலிருந்து எழுத்து வகைக்கான கோப்புகளை இறக்கி, அவை சுருக்கப்பட்ட ஸிப் பைல்களாக இருந்தால், அவற்றை விரித்துப் பின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக