சனி, 4 செப்டம்பர், 2010

விக்கிபீடியா - பயனுள்ள தகவல்கள்

விக்கிபீடியா - பயனுள்ள தகவல்கள்

ஆரம்பத்தில் Dictionary பிறகு Encyclopedia சமீபகாலமாக விக்கிபீடியா. பள்ளிப்படிப்பு, கல்லூரி ப்ராஜெக்ட், ரிசர்ச் என எந்த ஒரு விபரமானாலும் விக்கிபீடியா நமது அன்றாட வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது என்பது யதார்த்தம்.

நாம் சில சமயங்களில் விக்கிபீடியாவில் பல தகவல்களை தேடிப்பிடித்து, சரி பிறகு ஃஆப் லைனில் படிக்கலாம் என்று யோசிக்கும் பொழுதோ, அல்லது ஒரு தலைப்பைக் கொண்ட பல கட்டுரைகளை ஒரே கோப்பாக புத்தக வடிவில் சேமித்து வைத்து பிறகு படித்துக் கொள்ளலாம், அல்லது வேறு எவருக்காவது மின்னஞ்சலில் அனுப்பிவிடலாம் என்று முடிவு செய்வதாக வைத்துக் கொண்டால், இதை எப்படி செய்வது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டாமா?

உங்களுக்கு தேவையான தகவல் அடங்கிய கட்டுரை பக்கத்தை விக்கிபீடியாவில் தேடி, திறந்து கொள்ளுங்கள். இப்பொழுது விக்கிபீடியா தளத்தில் உள்ள இடது புற பேனில் உள்ள Print/Export என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.



இதில் திறக்கும் Create a Book, Download as PDF, Printable version போன்ற வசதிகளில் நமக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.


நாம் இப்பொழுது தேர்வு செய்ய போவது Download as PDF என்ற வசதியைத்தான். நாம் இதை தேர்வு செய்த சில நொடிகளில் திறக்கும் திரையில், The document file has been generated என்ற செய்தியோடு Download the file லிங்கும் இருக்கும் இதை க்ளிக் செய்து இந்த PDF கோப்பை நமது கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம்.



அடுத்ததாக, Wikipedia Book எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். இதில் ஒரே தலைப்பைச் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை ஒருங்கிணைத்து ஒரு அழகிய பயனுள்ள புத்தகமாக (PDF/ODF) மாற்றப் போகிறோம். முதலில் மேலே சொன்னது போல இடதுபுற பேனில் உள்ள Create a Book லிங்கை க்ளிக் செய்து கொள்ளவும். இப்பொழுது திறக்கும் Book Creator பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும்.


இங்கு Start book creator பொத்தானை க்ளிக் செய்தவுடன் மீண்டும் உங்கள் பழைய பக்கத்திற்கே இட்டுச் செல்லும். ஆனால் இம்முறை இந்த பக்கத்தின் மேற்புறம் புதிதாக Book creator bar ஒன்று தோன்றியிருப்பதை பார்க்கலாம்.

இதில் Add this page to your book எனும் லிங்கை க்ளிக் செய்து அந்த கட்டுரையை புத்தகத்தில் இணைத்துக் கொள்ளலாம். இப்படி ஒருமுறை இணைத்த பிறகு அந்த கட்டுரையின் பக்கத்தில் உள்ள, அந்த குறிப்பிட்ட கட்டுரைக்கு சம்பந்தமுள்ள எந்த ஒரு லிங்கின் மீது மௌஸ் கர்சரை கொண்டு செல்கையில், Add linked wiki page to your book என்ற சிறு பெட்டியை க்ளிக் செய்வதன் மூலமாக, அந்த லிங்கில் உள்ள கட்டுரையும் நீங்கள் உருவாக்கும் புத்தகத்தில் இணைக்கப்பட்டுவிடும்.


இது
போன்று உங்களுக்கு தேவையான அனைத்து கட்டுரைகளையும் இணைத்த பிறகு, மேலே உள்ள Book Creator பாரில் உள்ள Show book எனும் லிங்கை க்ளிக் செய்திடுங்கள்.



இப்பொழுது திறக்கும் Manage your Book திரையில் Title, Sub Title போன்றவற்றை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், கீழே உள்ள பெட்டியில், கட்டுரைகளின் வரிசையை நமது தேவைக்கு ஏற்றபடி ட்ராக் செய்து மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

பிறகு Download பெட்டியில் தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து, Download பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது. உங்கள் அபிமான ebook ரெடி.


இதிலுள்ள மற்றொரு வசதி. இப்பொழுது நீங்கள் உருவாக்கிய புத்தகத்தை, பிரிண்ட் செய்த புத்தகமாக பெற Pediapress -ல் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக