வெள்ளி, 10 செப்டம்பர், 2010

LOOK UP சில Function கள் - 1 ( Match Function )

 

எட்டி எடுக்க (Look up) சில Function கள் - 1

Excel இல் நமது பயன்பாடுகளில் பெரும்பாலானவற்றை இரு பெரும் வகைபாடுகளுக்குள் அடக்கலாம். ஒன்று, தரவுகளை ஒருங்கிணைத்தல் (Data Integration), மற்றொன்று,
ஒருங்கிணைத்த தரவுகளை சுருக்கி (Summarizing) தகவலாய் (Information) மாற்றுதல். முதலாவதாய் வரும் ஒருங்கிணைப்பு என்பது, வெவ்வேறு இடங்களில் இருக்கும் தரவுகளை ஓரிடத்திற்கு கொண்டு வருவதையும் உள்ளடக்கி இருக்கும். இப்படி இரு வேறு இடங்களில் இருக்கும் தரவுகளை, இரண்டுக்கும் பொதுவான ஒரு Column ஐ (Common Reference Field) அடிப்படையாக கொண்டு இணைக்க பயன்படும் Functionகளை எட்டி எடுக்கும் (Lookup) Functionகள் எனலாம். இந்த வகைப்பாட்டினுள் வரும் ஒரு Functionஐ இப்பதிவில் காண்போம்.

MATCH

ஒரு பட்டியலில் (m x 1 or n x 1 table) நாம் தேடும் மதிப்பு (value) உள்ளதா என்பதை கண்டறிய MATCH பயன்படுகிறது. நாம் தேடும் Value பட்டியலில் இருந்தால், பட்டியலின் துவக்கத்திலிருந்து** எத்தனை Cell தாண்டி இருக்கிறது என்ற இடத்தை (Position) விடையாக தரும். பட்டியலில் நாம் தேடும் Value இல்லாதபோது #N/A திட்டு கிடைக்கும்.

உதாரணத்தோடு பார்க்கலாம்,


A
1Name
2Karpagam
3Valli
4Rani
5Guna
6Raghavan
7Shridevi
8Vaishnavi
9Suba
10Reka





CD
1Name to findPosition
2Raghavan6


Worksheet Formulas
CellFormula
D2=MATCH(C2,A2:A10,0)



MATCH Funtionக்கு மூன்று உள்ளீடுகள் உண்டு,

முதலில், எதை தேடவேண்டும் (Lookup Value)
அடுத்து, எங்கு தேட வேண்டும் (Lookup List),

**தேடவேண்டிய இடம் (Lookup List), நெடுவரிசையாகவோ, கிடைவரிசையாகவோ இருக்கலாம். பட்டியலின் துவக்கம் என்பது, கிடைவரிசையில், இடதுபுறமிருந்து முதல் cellலையும், நெடுவரிசையில், மேலிருந்து முதல் cellலையும் குறிக்கும்.

மூன்றாவதாய், தேடும் முறையை குறிப்பிட வேண்டும் (Search type),

MATCH ஐ பயன்படுத்தி தேடும்போது மூன்று வித முடிவுகளை பெறலாம்.

1. நாம் தேடும் மதிப்பு, பட்டியலில் இருந்தால் மட்டுமே விடை தருவது, (Exact Match)
2. நாம் தேடும் மதிப்பு இல்லாத பட்சத்தில், அதற்கடுத்த, குறைந்த மதிப்பை (highest value, lower than the look up value) தேடுவது
3. நாம் தேடும் மதிப்பு இல்லாத பட்சத்தில், அதற்கடுத்த, உயர்ந்த மதிப்பை (lowest value, higher than the look up value) தேடுவது

Exact match முறையில் தேடுவதற்கு, 0 அல்லது FALSE உள்ளீடாய் தர வேண்டும். (FALSE ,TRUE பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்), மேலும் இம்முறையில், பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டிருக்க (Sorting) வேண்டிய அவசியம்இல்லை.


BCDEFGHIJ
13579965236142873389





JK
1Value to findPosition
2234


Worksheet Formulas
CellFormula
K2=MATCH(J2,B13:J13,0)



Exact match முறையில், நாம் தேடும் மதிப்பு பட்டியலில் இல்லாதபோது #N/A திட்டு கிடைக்கும். மற்ற இரண்டு முறைகளை பயன்படுத்துவதை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

கடைசியாக, MATCH Function தனித்து பயன்படும் இடங்களை விட, VLOOKUP, INDEX போன்ற பிற Functionகளுடன் இணைந்து பயன்படும் இடங்களே அதிகம். அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக