புதன், 15 செப்டம்பர், 2010

மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

மருத்துவம் குறித்த சரித்திர நிகழ்வுகள், இன்றைய மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், உடல்நலம் குறித்த செய்திகள் என டன் கணக்கில் தகவல்களைக் கூறும் அற்புத இணைய தளம் ஒன்று  http://www.nlm.nih.gov/  என்ற முகவரியில் உள்ளது. இது அமெரிக்க அரசின் இணைய தளம். என்றாலும் அனைவரும் சென்று பார்த்து தகவல்களை அறியலாம்.

உலகளாவிய உடல்நலம்,  மருத்துவச் சார்பான ஆய்வுத் துறை,கனவுகள், உடல் கூறு இயல் எனப் பல பிரிவுகளில், உடல்நலம் மற்றும் மருத்துவம் குறித்த தகவல்களைக்  கொண்டு இந்த தளம் அசத்துகிறது. மருந்து குறித்த ஹிஸ்டரி தளம் பல அற்புத தகவல்களைத் தருகிறது. நூல்கள், கட்டுரைகள், வீடியோ கிளிப்கள், புகைப்படங்கள் என மருத்துவ உலகின் சரித்திரப் பின்னணி காட்டப்படுகிறது.

இந்த தளத்தின் வலது பக்கம் ஒரு தேடல் கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உலகம் குறித்து, நீங்கள் எந்த தேடலையும் மேற்கொள் ளலாம்.  எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் என் நண்பரின் மகனுக்காக, உஞித்ஞுட்ச் என்ற குறித்துத் தகவல்களை இந்த கட்டத்தின் மூலம் தேடினோம். பல தகவல்கள் எளியவர்களுக்கும் புரியும்படி இருந்தது. அத்துடன் hydrocortisone cream என்ற மருந்தினைப் பயன் படுத்தினால், சரும அரிப்பு நிற்கும் என்ற தகவலும் கிடைத்தது. தேடலுக்குக் கிடைக்கும் தகவல்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது இந்த தளத்தின் சிறப்பு. நாம் எல்லாரும் அவசியம் காண வேண்டிய தளம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக