சில Text Function கள்
Excel இல் Text Functions என்னும் வகைப்பாட்டின் கீழ் பல Functionகள் உள்ளன. இவற்றில் CONCATENATE, LEN, PROPER ஆகியவற்றை முதல் நிலை Functionகளாகவும், LEFT, RIGHT, MID, EXACT போன்றவற்றை இரண்டாம நிலையாகவும், SEARCH, REPLACE, TEXT போன்றவற்றை மூன்றாம் நிலையாகவும் வகைப்படுத்தலாம். முதல் மற்றும் இரண்டாம் நிலை Function கள் சிலவற்றை இப்பதிவில் காண்போம்.1. CONCATENATE
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களை ஒன்றாய் இணைப்பதற்கு பயன்படும் CONCATENATE, Excel பயனர்களில் பலர் முதன்முதலாய் கற்கும் Functionகளில் ஒன்று. இணைக்க வேண்டிய சொற்றொடர்கள் cell content ஆகவோ, string constant ஆகவோ இருக்கலாம்
(எகா)
A | B | C | D | |
---|---|---|---|---|
2 | Input 1 | Input 2 | Result | Input type |
3 | SankaraNarayanan | Two String constants | ||
4 | Sankara | Narayanan | SankaraNarayanan | Two Cell contents |
5 | Sankara | Narayanan | Sankara Narayanan | Two Cell contents and a constant |
Worksheet Formulas
|
CONCATENATE Function ஐ SUM Function உடன் ஒப்பிடலாம், ஆனால் CONCATENATE இன் மிக முக்கிய குறைபாடு, இணைக்க வேண்டிய Cell கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிப்பிட (Refer) வேண்டும்.
A | B | C | |
---|---|---|---|
1 | 92 | Hari | |
2 | 31 | Sankara | |
3 | 85 | Narayanan | |
4 | 44 | Venkatesan | |
5 | 22 | RVS | |
6 | |||
7 | 274 | HariSankaraNarayananVenkatesanRVS |
Worksheet Formulas
|
ஏனோ தெரியவில்லை MS இப்படி ஒரு குறையை விட்டுவைத்திருக்கிறது. இதனை VBA துணை கொண்டு நமது சொந்த Function உருவாக்கி நிவர்த்தி செய்வது எப்படின்னு அப்புறம் சொல்றேன்.
CONCATENATE இன் செயல்பாட்டை '&' Operator மூலமாகவும் செயல்படுத்தலாம்
I | |
---|---|
2 | Sankara |
3 | Narayanan |
4 | Venkatesan |
5 | |
6 | SankaraNarayananVenkatesan |
Worksheet Formulas
|
2. LEN
ஒரு Cell இல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்கு LEN function ஐ பயன்படுத்தலாம். இந்த எண்ணிக்கை எழுத்துக்கள், Space, Line break, non-breaking போன்ற non-printable ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
3. LEFT, RIGHT
ஒரு Cell இல் இடதுபுறமிருந்து நமக்கு தேவையான எழுத்துக்களை வெட்டி எடுக்க LEFT function பயன்படும், வலதுபுறமிருந்து எழுத்துக்களை பெற RIGHT உதவும்.
A | B | |
---|---|---|
1 | Sankara narayanan | Sankar |
2 | Sankara narayanan | narayanan |
Worksheet Formulas
|
மூன்று அடிப்படை Function கள் குறித்து சொல்லியாகிவிட்டது. இப்போது பயன்பாடு.
1. நோக்கம் (Aim) : ஒரு Cell இன் முதல் எழுத்தை தவிர்த்து பிற எழுத்துக்கள் அனைத்தையும் பெறுவது
Cell இல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை நிலையாக (Fixed) இருக்கும்போது RIGHT function மூலம் எளிதாக இதனை செய்யலாம், எழுத்துக்களின் எண்ணிக்கை தெரியாத நிலையில் எப்படி செய்வது?
இதனை நாம் இரு செயல்களாக பிரிப்போம், முதலில் தெரியாத விஷயமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அறிவோம், இரண்டாவதாக இந்த எண்ணிக்கையை RIGHT உடன் பயன்படுத்தி நமக்கு தேவையான எழுத்துக்களை பெறலாம்
A | B | |
---|---|---|
4 | VSankar | Sankar |
Worksheet Formulas
|
இந்த Formula வை படிப்படியாக மதிப்பீடு (Evaluate) செய்யும்போது கீழ்காணும் முடிவுகளை காணலாம்
B | |
---|---|
6 | =RIGHT(A4,7-1) |
7 | =RIGHT(A4,6) |
8 | ="Sankar" |
முதல் படியில், உள்ளிருக்கும் LEN எழுத்துக்களின் எண்ணிக்கையை (7) தருகிறது, அதிலிருந்து ஒன்றாய் கழிக்கக்அ நமக்கு தேவையான எழுத்துக்களின் எண்ணிக்கை (6) கிடைக்கிறது, இதனை RIGHT உடன் பயன்படுத்த எதிர்பார்த்த விடை கிடைக்கிறது.
இதுபோலவே LEFT பயன்படுத்தி Cell இன் கடைசி எழுத்து தவிர்த்து பிற எழுத்துக்களை பெறலாம்.
Cell இன் முதல் அல்லது கடைசி வார்த்தை மட்டும் வெட்டி எடுப்பது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக