வெள்ளி, 1 அக்டோபர், 2010

பிளாக் என்றால் என்ன?


பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் .

இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல்  உள்ளனர் அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம்.

சொந்தமாக நீங்கள் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நீங்கள் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை. இது www.blogger.com, www.wordpress.com போன்ற தளங்களினால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.அப்புறம் என்ன நீங்களும் ஒரு வலைப்பூ (Blogspot) தொடங்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக