பள்ளி மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம் ஒன்றினை அண்மையில் கண்டேன்.
இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள்தாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்களை இங்கு தருகிறேன்.
இந்த தளத்தின் முகவரி : http://www.educationatlas.com
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளல், உங்கள் நேரத்தினைச் சிறப்பாக நிர்வகித்து, தேர்வுக்கு எப்படி தயார் செய்வது போன்ற பல வழிகளை மாணவர்களுக்குக் காட்டும் தளமாக இந்த இணைய தளம் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கி வருகிறது.
இந்த தளம் சென்றவுடன் மூன்று பிரிவுகள் நம்மை வரவேற்கின்றன. முதல் பிரிவு General Study Skills Guides.. பொதுவான படிக்கும் திறன் வளர்க்கும் வழிகள். பாடங்கள் குறித்த உரைகளை எப்படித் தீர்க்கமாகக் கேட்டு அறிவது, குறிப்புகள் எடுப்பது, படித்து அறிந்து கொள்வது, தேர்வு குறித்த ஆர்வம் போன்ற செய்திகள் இங்கு கிடைக்கின்றன.
அடுத்த பிரிவான Test Taking Study Skills Guides என்ற பிரிவு, மாணவர்கள் எவ்வாறு தேர்வு களை மேற்கொள்ளலாம் என்று வழி நடத்துகிறது. பல்வேறு வகையான தேர்வுகள் குறித்து தகவல்கள் வழிகாட்டப் படுகின்றன. (சரி/சரியல்ல, கொள்குறிவினா, கட்டுரை, வாய்மொழித் தேர்வு எனப் பல வகை) அடுத்த மூன்றாவது பிரிவு, பாடங்கள் வாரியாக படிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களைத் தருகிறது.
இதில் தரப்பட்டிருக்கும் பாடங்கள்:– Accounting, Biology, Business, Chemistry, Computer Science, Economics, Education, English, Engineering, History, Law, Math, Physics, Political Science, and Psychology.
இந்த தளம் குறித்து சில மாணவர்களிடம் தெரிவித்த போது, ஒவ்வொருவரும் ஒரு வகையான பயனைப் பெற்றதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து பயன் படுத்தி வருவதாகவும் அறிவித்தனர். நீங்களும் இதனைப் பயன்படுத்தும் வழிகளை உங்கள் குழந்தைகளுக்கும், தெரிந்த மாணவர்களுக்கும் சொல்லலாமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக