கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் அண்மையில் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் முகவரி: http://sciencebooksonline.info. . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம் உள்ள பிரிவில் Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine மற்றும் Physics என்ற பிரிவுகள் காணப்படுகின்றன.
எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். சில நூல்கள், ஆன்லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன. பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக