செவ்வாய், 26 அக்டோபர், 2010

மின்னஞ்சல் கணக்கு உருவாக்கலாம் @tamil.com

         
இனைய உலகில் கூகுள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புது வசதிகள் ஏற்படுத்தினாலும்  Yahoo, Hotmail பயனாளர்கள் ஜீமெயில் பக்கம் வருவதாயில்லை. ஆனாலும் ஜிமெயில் முன்னிலையில் இருந்துகொண்டு சிறப்பான சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.

     நாம் இப்போது பார்க்கப் போவது Tamil.com என்ற டொமைனின் கீழ் ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்குவது பற்றி. அனைவருக்கும் தங்கள் பெயரின் பின்னால் @tamil.com என்று வந்தால் மிகவும் நனறாக இருக்கும். இதனை எமக்கு Mail.com என்ற தளமே வழங்குகின்றது. இத்தளம் 50 க்கும் மேற்பட்ட பெயர்களின் கீழ் மின்னஞ்சல் சேவையை வழங்குகின்றது. அனைத்து கணக்கிற்கும் நுழைவாயில் Mail.com தான்!

Tamil.com  மின்னஞ்சல் உருவாக்க Mail.com சென்று Sign Up என்பதை Click செய்யுங்கள். பின் படிவத்தை பூர்த்தி செய்து Choose Domain என்பதில் Hobbies என்ற பிரிவின் கீழ் Tamil.com காணப்படும் அதனை தெரிவுசெய்யவும். பின் Check பட்டனை அழுத்த Check செய்து உங்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்தால் Available என்று காட்டப்படும். கிடைக்காவிடில் வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்படும். அதில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம். அல்லது வேறு பெயர்களைக் கொடுத்து முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரோடு இலக்கங்களை சேர்த்தும் பார்க்கலாம். இனி தயார்!

   இக்கணக்கை நிரந்தமாக பயன்படுத்த ஒன்றை வழங்கிவிடுங்கள். மாதம் ஒருமுறையாவது பாவிக்காவிட்டால் கணக்கு மூடப்படும். சில நாட்களின் பின் மீண்டும் முயற்சி செய்தால் அக்கணக்கை திரும்பப்பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக