ஆங்கிலம், ஹிந்தி படிக்க -Rosetta Stone
இனையத்தில் ஆங்கிலம் படிக்க நிறைய சிறந்த நூல்கள், தளங்கள், மென்பொருட்கள் இருக்கின்றன. ரொசெட்டா ஸ்டோன் எனப்படும் இந்த மென்பொருளையும் பரீட்சீத்து பாருங்கள்.
212 எம்பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும். பின் உங்களுக்குத் தேவையான மொழிப்பொதிகளை தரவிறக்கிப் உட்செலுத்த முடியும். இம்மொன்பொருள் ஆதரிக்கும் மொழிப்பொதிகள்.
Languge pack
English (Amrican) 1,2,3
English (British) 1,2,3
Chinese 1,2
Mandarin 1,2
Japanice 1,2
Arabic 1,2
French 1,2
Hindi 1,2
..etc
இது சிறுவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. ஒரு ஆசிரியர் போல அனைத்தையும் விவரமாக சொல்லித் தருகின்றது.
ஆரம்பத்தில்
Languge Basics கற்றுத்தரப்படும். பின்னர் Greetings and Introductions அதன் பின்னர் Work and School மற்றும் Shopping என்று முதல் சீடியில் நான்கு பாட விடயங்கள் இருக்கின்றன. பாடங்களை ( Core Lesson > Pronuciation > Vocabulary > Grammar > Listening and Reading > Writing > Listening > Speaking > Review என்று படிப்படியாக கற்கலாம். அழகான புகைப்படங்களோடு உதாரணம் காட்டுவதால் கற்பவர்களின் / சிறுவர்களின் மனதில் சீக்கிரமாக பதிகின்றது.
சரியான உச்சரிப்பு முறையை காட்டித்தருகின்றார்கள். நீங்கள் சொல்வது சரியென்றால் பச்சை நிறத்தில் காட்டப்படும். பிழையானால் மஞ்சல் நிறத்தில் காட்டப்படும். முயற்சித்து முடியாமல் போனால் கீழிருக்கும் ஸ்பீகர் பட்டனில் அழுத்தி உங்களின் உச்சரிப்பை சரிபார்த்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறும் முடியாவிட்டால் அக்கேள்வியை (Skip) நிராகரித்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லமுடியும். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் நீங்கள் கற்றவை சார்பாக ஒரு (Milestone) உரையாடலும் உண்டு. அதனால் மேலும் ஆர்வம் அதிகரிக்கின்றது.
5 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கற்க முடியும். நாம் சிறுவர்களுக்கு சினிமா, கணனி விளையாட்டுக்களுக்கு அனுமதியளிக்காமல் இதுபோன்ற அறிவு வளரக்கூடிய மென்பொருட்களை அளிக்கலாம்.
மென்பொருள் பதிவிறக்க முகவரி : -
Useful One. Thanks for sharing... Shiva, Sudan
பதிலளிநீக்கு