திங்கள், 18 அக்டோபர், 2010

நாம் இன்டர்நெட் மூலம் அனுப்பும் தகவல்கள் பாதுகாப்பாக சென்றடைகிறதா? என்பதை அறிவுது எப்படி?

நாம் இன்டர்நெட் மூலம்  அனுப்பும் தகவல்கள் பாதுகாப்பாக சென்றடைகிறதா? என்பதை அறிவுது எப்படி?

 

பொதுவாக இன்டர்நெட் மூலம் கிரெடிட் கார்ட் விபரங்கள் வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை அனுப்பும் போது அவை பாதுகாப்பாக சென்றடைகிறதா? ஏன்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் எந்த இணையத்தள முகவரியை பயன்படுத்தி உங்கள் முக்கிய தகவல்களை அனுப்புகிறிர்களோ அந்த இணையத்தளத்தை ப்ரவுசரின் உதவியோடு திறக்கும் போது, பிரவுசரின் கீழே வலதுபக்க மூலையில் சிறிய லாக் ஒன்று தெறிகிறதா? என்று பாருங்கள்.


மேலும் லாக் மூடிய வடிவில் இருக்க வேண்டும். லாக் திறந்த மாதிரி இருந்தால் உங்கள் டேட்டா பாதுகாப்பாக சென்றடைய வாய்ப்பில்லை என்று பொருள். லாக் லாக் வடிவில் இருக்கும் போது நீங்கள் ஏதாவது செர்வருக்கு அனுப்பும் முக்கிய தகவல்களையோ அல்லது செர்வரிலிருந்து உங்களுக்கு அனுப்பப்படும் முக்கிய தகவல்களையோ வேறு யாரும் இடையில் படிக்க முயற்சிக்கும் போது படிக்க இயலாத வண்னம் என்கிறிப்ட் செய்து அனுப்பப்படும்.

 

ஆனால் ப்ரவ்சரில் லாக் தெரியாவிட்டாலோ அல்லது லாக் திறந்த நிலையில் இருந்தாலோ நீங்கள் ஏதாவது செர்வருக்கு அனுப்பும். முக்கிய தகவல்களோ அல்லது செர்வரிலிருந்து உங்களுக்கு அனுப்பப்படும் முக்கிய தகவல்களோ என்கிரிப்ட் செய்யப்படாமல் சாதாரண டெக்ஸ்ட் வடிவில் அனுப்பப்படும். இதனால் டேட்டா பரிமாற்றத்தின் போது மற்றவர்கள் இதனை எளிதாக படிக்க முடியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக